Tips To Identify Toxic Person : நம்மை சுற்றி எத்தனையோ பேர் டாக்ஸிக் ஆனவர்களாக இருப்பார்கள். அவர்களை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் தெரியுமா? இதோ அதற்கான சில டிப்ஸ்!
Tips To Identify Toxic Person : நம் கூடவே இருக்கும் சிலர், பல சமயங்களில் நமக்கு உடன் படாத சில விஷயங்களை கூறுவர். அல்லது நாம் அவர்களுக்கு உடன் படாத விஷயங்களை கூறும் போது, அவர்கள் எப்படி ரியாக்ட் செய்கிறார்கள் என்பதே அவர்கள் எப்படிப்பட்ட நபர்கள் என்பதை காண்பித்து விடும். இப்படி, உங்களை சுற்றி இருக்கும் டாக்ஸிக் மனிதர்களை எப்படி கண்டுபிடிக்க வேண்டும் தெரியுமா? அதற்கான சில டிப்ஸ்.
டாக்ஸிக் குணம் கொண்டவர்கள், அனைத்திலும் தான் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள். எப்போதும், தன்னை பிறரை தனது போட்டியாகவே கருதுவர்.
டாக்ஸிக் ஆக இருப்பவர்கள், பிறருக்கு அசௌகரியம் ஏற்படும் விஷயங்களை வைத்து நகைச்சுவை செய்வர். ஒரு சீரயஸான விஷயம் பேசிக்கொண்டிருக்கும் போது கூட, ஏதாவது பேசி நகைச்சுவை செய்வர். ஆனால், அது இன்னொருவரை அசௌகரியப்படுத்தும் வகையில் இருக்கும்.
டாக்ஸிக் மனிதர்களுக்கு முன்னர் ஒரு பிரச்சனை நிகழ்கிறது என்றால் அதை யாரும் கேட்காமல் அதனை தீர்க்க போய் விடுவர். அவர்களிடம் உதவி கேட்காமல் நீங்கள் பொதுவாக ஏதேனும் சொன்னால் கூட, வந்து வலுக்கட்டாயமாக உதவி செய்வர்.
உங்களது தோற்றத்தில் அல்லது பேசியதில் ஏதேனும் குறை இருந்தால், அதனை விமர்சனம் செய்யும் வகையில் பேசுவர். இது, ஒருவரை அவமதிக்கும் வகையில் அவர்கள் செய்யும் விஷயமாகும்.
டாக்ஸிக் ஆக இருப்பவர்கள் எப்போதும், யாரையாவது பற்றி கெட்ட விஷயங்களை பேசிக்கொண்டே இருப்பர். பிறருடைய தனிப்பட்ட விஷயங்களை, இன்னொருவரிடம் பகிர்ந்து கொள்வர்
டாக்ஸிக் நபர்கள், எப்போதும் தங்களை பாவப்பட்ட மனிதராக காட்டிக்கொள்வர். இது, பிறர் தன் வழிக்கு வர வேண்டும் என்றால் அவர்கள் கையாளும் யுக்தியாகும். இதனை வைத்து அவர்கள் நினைத்ததை முடித்துக்கொள்வர்.
இவர்கள் அகராதியில் மன்னிப்பு என்ற வார்த்தையே இருக்காது. அப்படியே அவர்கள் மன்னிப்பு கேட்டாலும் அது மனதில் இருந்து வராது.