TVK Anniversary Prashant Kishor Speech : தவெக கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா இன்று மாமல்லபுரத்தில் நடந்தது. பல ஆயிரம் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த விழாவிற்கு விஜய் தலைமை தாங்கினார். பீகாரின் ஜன் சுராஜ் கட்சி நிறுவனரும் அரசியல் வீயுக வடிவமைப்பாளருமான பிரசாந்த் கிஷோர் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். இதில், விஜய் பேசியதை விட பிரசாந்த் கிஷோரும் ஆதவ் அர்ஜுனாவும் பேசியதும்தான் ஹைலைட்டாக இருந்தது. அவரது முழு பேச்சை, இங்கு பார்ப்போம்.
பிரசாந்த் கிஷோர் பேச்சு:
வணக்கம் கூறி உரையை ஆரம்பித்த இவர், தமிழகத்திற்கு வந்தவுடன் அங்கு வணக்கம் சொல்லி ஆரம்பிக்க வேண்டும் என்பது பிரதமர் மோடி உள்பட அனைவருக்கும் தெரியும் என கூறினார்.
தவெக புதிய நம்பிக்கை..
பிரசாந்த் கிஷோரின் பேச்சு : “உங்களுக்கு வரும் வெற்றியோ, தோல்வியோ அது உங்கள் கட்சியை பொறுத்தும், உங்கள் தலைவரை பொறுத்தும் உள்ளது. பிரசாந்த் கிஷோரை பொறுத்து இல்லை. நான் இங்கு விஜய்க்கு உதவி செய்ய வரவில்லை. அவருக்கு என் உதவி தேவையில்லை. என்னை பொறுத்தவரை விஜய் அரசியல் கட்சி தலைவர் இல்லை, தமிழகத்தின் புதிய நம்பிக்கை.
கடந்த 30-35 வருடங்களில் இல்லாத ஒன்றை மக்கள் விரும்புகின்றனர். நான் இங்கு வந்ததற்கு காரணம், நான் அவரிடம் பேசிய போது நான் அவரிடம் பல விஷயங்களை பார்த்தேன். மாற்றம், கண்ணியம், சம உரிமை, வாய்ப்புகள் என அனைத்தையும் உருவாக்க நினைக்கிறார் விஜய். இதற்காக உதவத்தான் இங்கு வந்திருக்கிறேன்.
“தவெக வெற்றி உறுதி!”
அடுத்த வரும் தவெக வெல்லும் போது, இங்கு அமர்ந்திருக்கும் அனைவரும் கொள்கை வகுப்பாளர்களாக இருப்பீர்கள். அப்பாேது, இங்கு வரும் போது தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவிக்க தமிழ் கற்றுக்கொண்டு வருவேன்.இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பல பிரச்சனைகள் உள்ளன. பலர் குஜராத் மாடலை பெஸ்ட் என நினைத்துள்ளனர். ஆனால், தமிழகத்தில்தான் நல்ல மாடல் உள்ளது. இங்கிருக்கும் ஊழல், பிரிவினை மற்றும் வாரிசு அரசியலை நீக்க வேண்டும். அதை நீக்கிவிட்டால், இங்கு நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பெரிய அரசியல் ஊழல் நிலவுகிறது. வாரிசு அரசியல் குறித்து பேசிய பிராசந்த் கிஷோர், கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர் போன்றவர்களின் மகன்கள் மட்டும் கிரிக்கெட்டிற்கு வரவேண்டும் என நினைத்தால், தோனி, கோலி போன்றவர்கள் வந்திருக்க முடியுமா?” என்று கூறினார்.
தேவையான 3 விஷயங்கள்:
தொடர்ந்து பேசிய பிரசாந்த் கிஷோர், தவெக வெற்றி பெற 3C's முக்கியம் என கூறினார். ஆங்கிலத்தில் அவற்றை Courage (தைரியம்), Compassion (புரிந்துணர்வு, இரக்கம்), Commitment (அர்ப்பணிப்பு) என கூறினார். தைரியம்-உங்களை சுற்றி நடக்கும் அநீதிகளை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும். இரக்கம் மற்றும் புரிந்துணர்வு-கைவிடப்பட்ட நாட்டு மக்களுக்கு உதவி புரிய, அர்ப்பணிப்பு-தவெக கட்சியை இன்னும் பெரிய கட்சியாக மாற்ற தொண்டர்களின் அர்ப்பணிப்பு தேவை என்றார். வரும் 100 நாட்களில் ஒவ்வொரு தொண்டரும் 10 பேரையாவது கட்சியில் சேர்க்க வேண்டும், அப்படி செய்தால் கட்சி 10 மடங்கு பெரிதாக வளரும் என்றார்.
மீண்டும் வருவேன்..
தவெக வெற்றி பெற்று, அதற்கு நன்றி தெரிவிக்க தான் அடுத்த ஆண்டு வரும் போது அண்ட நன்றியுரை தமிழில்தான் இருக்கும். இதற்காகவே நான் தமிழ் கற்றுக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளப்போகிறேன் என கூறியிருக்கிறார்.ஆதவ் அர்ஜுனாவின் பேச்சிலும் சரி, பிரசாந்த் கிஷோரின் பேச்சிலும் சரி தவெக கட்சி உறுதி பெறுவது உறுதி என்ற நிலைப்பாட்டில் அவர்கள் உள்ளனர். அதற்கு ஏற்றவாறான திட்டத்தையும் இவர்கள் வைத்திருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | பிரம்மாண்டமாக நடந்த தவெக 2ஆம் ஆண்டு தொடக்க விழா! கவனிக்க வேண்டிய விஷயங்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ