பர்கிங்காமில் புதன்கிழமை நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகளான பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் தங்களது ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் போட்டிகளின் தொடக்கச் சுற்றுகளில் வெற்றி வாகை சூடினார்கள்.
ஆறாம் நிலை வீராங்கனையான சிந்து 42 நிமிடங்கள் நீடித்த தனது முதல் சுற்று ஆட்டத்தில் சீனாவின் ஜி யி வாங்கை 21-18 21-13 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். சாய்னா 21-17 21-19 என்ற கணக்கில் ஸ்பெயினின் பீட்ரிஸ் கோரல்ஸை 38 நிமிடங்களில் தோற்கடித்தார்.
Deft touch @Pvsindhu1 eases into the next round 21-18 21-13 pic.twitter.com/ukJdPZzde6
— Yonex All England Badminton Championships (@YonexAllEngland) March 16, 2022
ஜப்பானின் சயாகா தகாஹாஷிக்கும் தாய்லாந்தின் சுபனிடா கேத்தோங்க்கும் இடையிலான முதல் சுற்றில் வெற்றி பெறும் வீராங்கனையை, சிந்து 2-வது சுற்றில் சந்திக்கவுள்ளார்.
2வது சுற்றில் இரண்டாம் நிலை வீராங்கனையான ஜப்பானின் அகானே யமாகுச்சி மற்றும் எஸ்டோனியாவின் கிறிஸ்டின் குபா ஆகியோருக்கு இடையேயான முதல் சுற்றில் வெற்றி பெறும் வீராங்கனையை எதிர்கொள்கிறார்.
சிந்துவும், சாய்னாவும் தங்களின் இரண்டாவது சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்றால், காலிறுதியில் நேருக்கு நேர் மோதுவார்கள்.
மேலும் படிக்க | சதங்களின் நாயகன் சச்சின்: 100 சதமடித்து 10 ஆண்டு நிறைவு!
ஆடவர் ஒற்றையர் பிரிவில், பி சாய் பிரனீத் 48 நிமிடங்கள் நீடித்த முதல் சுற்று ஆட்டத்தில் 20-22 11-21 என்ற கணக்கில் முதல் நிலை வீரரும் ஒலிம்பிக் சாம்பியனுமான விக்டர் ஆக்செல்சனிடம் தோற்றார்.
எச்.எஸ்.பிரணாய் கடந்த வாரம் நடந்த ஜெர்மன் ஓபன் வெற்றியாளரான தாய்லாந்து வீரர் குன்லவுட் விடிட்சார்னிடம் 56 நிமிடங்களில் போராடினார், சமீர் வர்மா 41 நிமிட தொடக்க ஆட்டத்தில் நெதர்லாந்தின் மார்க் கால்ஜோவிடம் 18-21 11-21 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் ஐந்தாம் நிலை வீரரான சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி சிராக் ஷெட்டி ஜோடி 38 நிமிடங்களில் ஸ்காட்லாந்தின் அலெக்சாண்டர் டன்-ஆடம் ஹால் ஜோடியை 21-17 21-19 என்ற கணக்கில் வீழ்த்தியது.
ஆனால் எம் ஆர் அர்ஜுன் மற்றும் துருவ் கபிலா ஜோடி 21-15 12-21 18-21 என்ற கணக்கில் 2-வது நிலை இந்தோனேசிய ஜோடியான முகமது அஹ்சன் மற்றும் ஹென்ட்ரா செட்டியவான் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
மற்றுமொரு ஆட்டத்தில் இந்திய ஆடவர் இரட்டையர் ஜோடியான கிருஷ்ண பிரசாத் கரகா மற்றும் விஷ்ணுவர்தன் கவுட் பஞ்சாலா ஜோடி, ஜெர்மனியின் மார்க் லாம்ஃபுஸ் மற்றும் மார்வின் சீடல் ஜோடியிடம் 16-21 19-21 என்ற கணக்கில் வெறும் 37 நிமிடங்களில் தோல்வியைத் தழுவியது.
பெண்கள் இரட்டையர் பிரிவில், ட்ரீசா ஜாலி மற்றும் புல்லேலா காயத்ரி கோபிசந்த் ஜோடி 17-21 22-20 21-14 என்ற கணக்கில் தாய்லாந்தின் பென்யபா ஐம்சார்ட் மற்றும் நுண்டகர்ன் ஐம்சார்ட் ஜோடியை ஒரு மணி நேரம் ஏழு நிமிடங்களில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
மேலும் படிக்க | 27 ஆண்டு சாதனையை முறியடித்த பாபர் அசாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR