மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்சில் டபுள் ஜாக்பாட்: மீண்டும் அகவிலைப்படி உயர்வு

7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மீண்டும் அதிகரிக்கவுள்ளது. மார்சில் முக்கிய அறிவிப்பு. டிஏ உயர்வு எவ்வளவு இருக்கும்?

7th Pay Commission:தற்போது வரை கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படிடையில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 3 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு ஹோலிக்கு முன் நடைபெறும் அமைச்சரவையில் வெளிவரக்கூடும்.

1 /11

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண விகிதங்களை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு இரண்டு முறை திருத்துகிறது. தற்போது ஜனவரி 2025 -க்கான அகவிலைப்படி உயர்வுக்காக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருக்கிறார்கள்.

2 /11

தொழிலாளர் அமைச்சகம் மூலம் வெளியிடப்படும் அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் அரையாண்டு தரவுகளைப் பொறுத்து அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் (Dearness Relief) மாற்றம் செய்யப்படும். இந்த திருத்தம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி / ஜூலை முதல் அமலுக்கு வரும். எனினும், பொதுவாக ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதத்திலும் ஜூலை மாத டிஏ உயர்வுக்கான அறிவிப்பு ஜூலை மாதத்திலும் அறிவிக்கப்படும்.

3 /11

முந்தைய ஆண்டின் ஜுலை முதல் டிசம்பர் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் (AICPI Index) அடிப்படையில் ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வும், ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் (AICPI Index) அடிப்படையில் ஜூலை மாத அகவிலைப்படி உயர்வும் தீர்மானிக்கப்படுகின்றன.

4 /11

தற்போது, ​​மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 53 சதவீத அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை பெற்று வருகிறார்கள். ஜனவரி 1, 2025 -க்கான டிஏ உயர்வு இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும். இதன் விகிதம் ஜூலை முதல் டிசம்பர் 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டின் தரவைப் பொறுத்து இருக்கும்.

5 /11

தற்போது வரை வந்துள்ள தரவுகளின் அடிப்படிடையில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் 3 சதவீதம் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு ஹோலிக்கு முன் நடைபெறும் அமைச்சரவையில் வெளிவரக்கூடும்.

6 /11

ஜூலை முதல் நவம்பர் வரையிலான தரவுகளின் படி, AICPI குறியீடு 144.5 ஐ எட்டியுள்ளது, டிஏ ஸ்கோர் 55.05% ஐ எட்டியுள்ளது. எனவே அகவிலைப்படியில் இந்த முறை 3% அதிகரிப்பு உறுதி. இருப்பினும், டிசம்பர் 2024 க்கான தரவு இன்னும் வரவில்லை. இதன் பிறகுதான், ஜனவரி 2025 முதல் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பதை தெளிவாக சொல்ல முடியும். 

7 /11

டிஏ உயர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளிவந்தாலும், ஜனவரி 2025 முதலான டிஏ அரியர் தொகை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும். அதாவது, ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரு மாதங்களுக்கான டிஏ நிலுவைத் தொகையும் கிடைக்கும். இதனால் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.

8 /11

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கணக்கீடு: DA% = [(கடந்த 12 மாதங்களுக்கான AICPI சராசரி (அடிப்படை ஆண்டு 2001 = 100)  – 115.76)/115.76] x 100 / பொதுத்துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படி கணக்கீடு: DA% = [(கடந்த 3 மாதங்களுக்கான AICPI சராசரி (அடிப்படை ஆண்டு 2001 = 100)  – 126.33)/126.33] x 100

9 /11

உதாரணமாக, குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 ஆக உள்ள ஊழியர்களுக்கு, அகவிலைப்படி 3 சதவீதம் உயர்ந்தால், மாதத்திற்கு ரூ.540 அதிகரிப்பும், அதிகபட்ச சம்பளம் ரூ.2,50,000 பெறுபவர்களுக்கு ரூ.7,500 அதிகரிப்பும் கிடைக்கும்.

10 /11

அகவிலைப்படியுடன் அகவிலை நிவாரணமும் அதிகரிக்கும் என்பதால், இதன் மூலம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். அவர்களது ஓய்வூதியம் ரூ.270 அதிகரித்து ரூ.3,750 ஆக உயரக்கூடும்.

11 /11

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அகவிலைப்படி அரியர் தொகைக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.