புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம், யாருக்கு பிரச்சனை? முழு ராசிபலன் இதோ

Budhan Peyarchi Palangal: பிப்ரவரி 27, 2025 அன்று, புதன் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குள் நுழைகிறார். இதனால் எந்தெந்த ராசிகளுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும்? யாருக்கு பிரச்சனைகள் வரக்கூடும்?

Budhan Peyarchi Palangal: ஜோதிடத்தில் புதனுக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. புத்திசாலித்தனம், தர்க்கம், பேச்சாற்றல், கணிதம், அறிவாற்றல் நட்பு ஆகியவற்றுக்கு புதன் காரணி கிரகமாக இருக்கிறார். புதன் கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். புதன் ஜாதகத்தில் சுபமாக இருந்தால், அந்த நபருக்கு அனைத்து வித சுப பலன்களும் கிடைக்கின்றன. பிப்ரவரி 27, 2025 அன்று, புதன் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். மேஷம் முதல் மீனம் வரை புதன் பெயர்ச்சியின் தாக்கம் பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /13

மேஷம்: புதன் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். பண வரவு அதிகமாகும். உங்கள் பணியிடத்தில் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றியைப் பெறுவீர்கள். கலைத்துறையில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்திற்கு இது நல்ல நேரமாக இருக்கும். உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, கவனமாக இருங்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

2 /13

ரிஷபம்: வணிகம் தொடர்பான உங்கள் நிதி நெருக்கடி தீர்க்கப்படும். இருப்பினும் முதலீடுகளில் கவனமாக இருப்பது நல்லது. மூத்தவர்களின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே முக்கிய முடிவுகளை எடுக்கவும். குறிப்பாக தெரியாத பெண்களுடன் ஈடுபட வேண்டாம். உங்கள் நண்பர்கள் உங்கள் பிரச்சினைகள் அதிகரிக்கக்கூடும். உங்கள் மனதின் சமநிலையை இழக்காதீர்கள்.

3 /13

மிதுனம்: புதன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை அளிக்கும். உடல்நலத்தில் கவனமாக இருங்கள். பெரிய முடிவுகளை எடுப்பதற்கு முன், உங்கள் குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ கலந்து பேசிவிட்டு எடுப்பது நல்லது. உங்களுக்கு சில நல்ல செய்திகள் கிடைக்கலாம். குடும்பத்தோடு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. மரியாதை அதிகரிக்கும், அதிகாரிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

4 /13

கடகம்: புதன் பெயர்ச்சியின் தாக்கத்தால் சில பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொள்ளலாம். உங்கள் பிரச்சினைகளுக்கு மற்றவர்களைக் காரணம் என்று கருதுவதைத் தவிர்க்கவும். கவனம் செலுத்துவதில் குறைபாடு இருக்கும். மோசடி செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. நல்ல நேரங்களுக்காக பொறுமையாக காத்திருங்கள். இரத்தம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. உங்கள் மீது சட்ட வழக்கு தொடரப்படலாம். அலுவலகத்தில் அதிகாரிகளுடன் சில கருத்து வேறுபாடுகள் எற்படலாம். ஒட்டுமொத்தமாக மிகவும் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. 

5 /13

சிம்மம்: பணியிடத்திலும் தொழிலிலும் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. மனதில் எதிர்காலத்தைப் பற்றிய பயம் இருந்து கொண்டே இருக்கும். மனம் எதையாவது நினைத்துக் கவலைப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த கவலைகள் இப்போது நீங்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். கோபத்தைத் தவிர்க்கவும். பொறுமையுடன் வேலை செய்யுங்கள். குடும்பத்தினரிடமிருந்து ஆதரவு கிடைக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.

6 /13

கன்னி: பணியிடம் மற்றும் தொழிலில் புதிய திட்டங்களில் வேலை செய்யத் தொடங்க வேண்டாம். முக்கியமான விஷயங்களில், அனுபவம் வாய்ந்தவர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே முடிவுகளை எடுக்கவும். சண்டை சச்சரவுகளுக்கு செல்ல வேண்டாம். வாகனத்தைப் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள்.

7 /13

துலாம்: உங்கள் பணியிடம் மற்றும் தொழிலில் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்காது. இந்த நேரத்தில் புதிய திட்டங்களில் வேலை செய்யத் தொடங்க வேண்டாம். செய்யும் வேலைகளில் தடைகள் ஏற்படலாம். வாகனத்தைப் பயன்படுத்தும் போது கவனமாக இருங்கள். குடும்பத்தில் ஒருவரின் உடல்நிலை பாதிக்கப்படலாம். மன அழுத்தம் உங்களைத் தொந்தரவு செய்யலாம். எதிரிகளால் பிரச்சனை வரக்கூடும். ஆகையால் கவனமாக இருப்பது நல்லது.

8 /13

விருச்சிகம்: புதன் பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதமனான பலன்களை அளிக்கும். பணியிடம் மற்றும் தொழிலில் சூழல் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழிலிலும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். உங்கள் சமூக நற்பெயர் உயரும். எந்த வேலையிலும் அவசரப்பட வேண்டாம். அனைத்து சர்ச்சைகளிலிருந்தும் விலகி இருங்கள். உங்கள் பேச்சையும் கோபத்தையும் கட்டுப்படுத்துங்கள். குடும்பத்தினரிடமிருந்து ஆதரவு கிடைக்கும். உங்கள் சக ஊழியர்கள் மற்றும் மேல் அதிகாரிகளின்  ஆதரவு கிடைக்கும். 

9 /13

தனுசு: சமூகத்தில் தனுசு ராசிக்காரர்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். செலவுகளைக் குறைப்பது அவசியம். உடல்நலம் நன்றாக இருக்கும். தொழிலில் புதிய திசையில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் ஒரு பழைய நண்பரை சந்திக்க நேரிடும். இதனால் பல நல்ல நன்மைகள் நடக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.

10 /13

மகரம்: புதன் பெயர்ச்சியின் தாக்கத்தால் வீட்டில் சுப நிகழ்ழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. நிதி நிலை வலுவாகும். குடும்பத்தினருடன் இணக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஆபத்துக்களை எடுப்பதைத் தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

11 /13

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு நிதி நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அலுவலக பணிகளில் உள்ளவர்க்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.

12 /13

மீனம்: புதன் பெயர்ச்சியின் தாக்கத்தால் மீன ராசிக்காரர்களுக்கு நிதி நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனுடன் முந்தைய சில வேலைகளும் நிறைவடையும். குடும்பத்தோடு வெளியே சென்று வருவீர்கள். உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்களுக்கு சில நல்ல செய்திகள் கிடைக்கலாம். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. நல்ல நேரங்களுக்காக பொறுமையாக காத்திருங்கள். இரத்தம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.