4 ராசிக்காரர்களின் வெற்றிக்கு வித்தாகும் சுக்கிரன் பெயர்ச்சி! விருச்சிகத்திற்கு மாறிய வெள்ளி கிரகம்!

Venus Transit In Scorpio : விருச்சிகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி, வெற்றியை அடைய உதவும் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் உதவும்... இந்த பலன்கள் எந்த ராசிக்கு? தெரிந்துக் கொள்வோம்... 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 13, 2024, 04:24 PM IST
  • விருச்சிகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி
  • வெற்றியை அடைய உதவும் கிரகம்
  • அன்புக்கும் அழகுக்கும் காரணமான சுக்கிரன்
4 ராசிக்காரர்களின் வெற்றிக்கு வித்தாகும் சுக்கிரன் பெயர்ச்சி! விருச்சிகத்திற்கு மாறிய வெள்ளி கிரகம்! title=

புரட்டாசி மாதத்தில் விருச்சிக ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியாவது 4 ராசிக்காரர்களுக்கு மகத்தான பலன்களையும், அமோக வெற்றியையும் கொடுக்கவிருக்கிறது. ஜோதிடக் கணிப்புகளின்படி, இன்று அதாவது அக்டோபர் 13ஆம் தேதி காலை 6.08 மணிக்கு சுக்கிரன் துலாம் ராசியிலிருந்து விலகி விருச்சிக ராசியில் பிரவேசித்துள்ளார். சுக்கிரனின் இன்றைய ராசி மாற்றம் 4 ராசிகளுக்கு மிகவும் சாதகமாக கருதப்படுகிறது.

விருச்சிக ராசியில் சுக்கிரன்

வானில் இயங்கிக் கொண்டிருக்கும் கிரகங்களில், ஜோதிடம் ஒன்பது கிரகங்களை கணக்கில் எடுத்துக் கொண்டு அதன்படி ஜாதகத்தை கணிக்கிறது. இந்த நவகிரகங்களும் தங்கள் இயக்கத்தின் அடிப்படையில், ராசி, நட்சத்திரத்தைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கின்றன. நவகிரகங்களில் சுக்கிரன் பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சுக்கிரன் பெயர்ச்சியின் முக்கியத்துவம்

மகிழ்ச்சி, வசதி, புகழ், பிரபல்யம், வளமை மற்றும் செழுமைக்கு காரணமான கிரகம் சுக்கிரன் ஆவார். துலாமில் சுக்கிரன் சஞ்சாரம் செய்ததால் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கும் ராசிகளில் சில விருச்சிகத்திற்கு வெள்ளி கிரகம் நுழைந்ததால் கஷ்டப்படலாம் அல்லது நன்மைகளையும் அடையலாம். ஒட்டுமொத்தமாக சுக்கிரனின் ராசி மாற்றம் 12 ராசிகளில் நான்கு ராசிகளுக்கு மிகவும் நன்மையைத் தருகிறது என்று ஜோதிடம் கணிக்கிறது. அந்த ராசியான  ராசிக்காரர்கள் யார் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் நன்மை பயக்கும். காதல் வாழ்க்கைக்கு சாதகமான காலம் இது என்றால், திருமணமானவர்களுக்கே இது மற்றும் ஒரு தேனிலவு என்றே சொல்லலாம். கணவன் - மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கையே ரம்மியமாக தோன்றும். வெற்றியை அடைய உதவும் இந்த சுக்கிரன் பெயர்ச்சி, கடக ராசிக்காரர்களை மன அழுத்தத்திலிருந்து வெளிகொண்டு வரும்.

மேலும் படிக்க | நவராத்திரியில் சக்தி வழிபாடு! 51 சக்திபீடங்களிலும் ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை தசரா கோலாகலம்!

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு விருச்சிக ராசியில் சுக்கிரனின் பிரவேசம் சாதகமாக அமையும். நேரம் சாதகமாக இருப்பதால் முதலீடு செய்ய ஏற்ற நேரம் இது. கல்வி பயிலும் மாணவர்களுக்கு நல்ல காலம் இது. இவ்வளவு நாட்களாக நீங்கள் செய்த கடின உழைப்பிற்கான பலனைப் பெறலாம். நிலுவையில் இருக்கும் அரசுப் பணிகள் நிறைவடையும்.

விருச்சிகம்
சுக்கிரனின் சஞ்சாரம் விருச்சிக ராசியினரின் வாழ்வை செழுமையாக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும் காலம் இது.  வியாபாரம் செய்பவர்களுக்கு வணிகம் விரிவடையும் காலம் இது, அதேபோல, புதிதாக ஏதாவது வேலையை செய்யத் தொடங்க விரும்பினால், அதைச் செய்யலாம். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

மேலும் படிக்க | விஜயதசமிக்கு அடுத்தநாள் விருச்சிகத்திற்கு மாறும் சுக்கிரன் யாருக்கெல்லாம் விஜயத்தைத் தருவார்? சுக்கிரப் பெயர்ச்சி பலன்கள்

கும்பம்
கும்ப ராசியினருக்கு சுக்கிரன் சஞ்சாரம் மிகவும் சாதகமானதாக இருக்கும். பொருளாதார நிலை முன்பை விட மேம்படும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை வாய்ப்பு கிடைக்கும். எடுத்த வேலைகள் அனைத்தும் நல்லபடியாக முடிவடையும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, பதவி உயர்வு கூடும்.

மேலும் படிக்க | கலைமகள் சரஸ்வதியின் கடாட்சத்தை பூரணமாக பெற அறிவுத்தேடல் தொடங்கும் விஜயதசமி நாள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News