PM Kisan தொகை அதிகரித்தது: மாநில அரசு அதிரடி... இனி ரூ.9,000 கிடைக்கும்

PM Kisan Samman Nidhi Yojana: பிஎம் கிசான் சம்மான் திட்டத்தின் மூலம் நாட்டின் ஏழை விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு ரூ.6,000 நிதி உதவி அளிக்கின்றது. இது மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 20, 2025, 11:25 AM IST
  • பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா.
  • விவசாயிகளுக்கு மாநில அரசு அளித்த பரிசு.
  • பிஎம் கிசான் 19வது தவணை எப்போது கிடைக்கும்?
PM Kisan தொகை அதிகரித்தது: மாநில அரசு அதிரடி... இனி ரூ.9,000 கிடைக்கும் title=

PM Kisan Samman Nidhi Yojana: விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல வித நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பதும், அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் இவற்றின் முக்கிய நோக்கமாக உள்ளது. இந்த திட்டங்களில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா மிக முக்கியமான மற்றும் பிரபலமான திட்டமாக உள்ளது.

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா

பிஎம் கிசான் சம்மான் திட்டத்தின் மூலம் நாட்டின் ஏழை விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசு ரூ.6,000 நிதி உதவி அளிக்கின்றது. இது மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தவணையிலும் தலா ரூ.2,000 வழங்கப்படுகின்றது. இதுவரை 18 தவணைகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் பிஎம் கிசான் திட்டத்தின் 19வது தவணைக்காக தற்போது காத்திருக்கிறார்கள்.

PM Kisan Nidhi Yojana: விவசாயிகளுக்கு மாநில அரசு அளித்த பரிசு

ராஜஸ்தான் அரசு புதன்கிழமை 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் தியா குமாரி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். ராஜஸ்தானில் பிரதமர் கிசான் யோஜனாவின் கீழ் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது ராஜஸ்தானில், இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஆண்டுதோறும் 9 ஆயிரம் ரூபாய் பெறுவார்கள். மத்திய அரசு ஆண்டுதோறும் ஆறாயிரம் ரூபாய் வழங்குகிறது. ராஜஸ்தான் அரசு இனி விவசாயிகளுக்கு 3,000 ரூபாய் கூடுதலாக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் தியா குமாரி, பிரதம மந்திரி கிசான் சம்மான் யோஜனா மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆதரவைக் குறிப்பிட்டு பேசியதோடு, மாநில அரசு கொடுக்கவுள்ள அதிகரிப்பு பற்றியும் அறிவித்தார். 'இந்த ஆண்டு முதல்வர் பஜன்லால் சர்மா விவசாயிகளின் நலனுக்காக பிரதமர் கிசான் தொகையை அதிகரித்துள்ளார். அடுத்த ஆண்டு முதல் அதை ஆண்டுக்கு 9 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவதாக நான் அறிவிக்கிறேன்' என்று அவர் கூறினார். ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கைதட்டி இந்த அறிவிப்பை வரவேற்றனர்.

கடந்த ஆண்டு, தொகை 2 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டது

கடந்த ஆண்டு, ராஜஸ்தான் அரசு பிஎம்  கிசான் யோஜனாவின் கீழ் பெறப்பட்ட தொகையை 2 ஆயிரம் ரூபாய் அதிகரித்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா இந்தத் திட்டத்தின் கீழ் மாநில அரசிடமிருந்து ஆண்டுதோறும் கூடுதலாக 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருந்தார். இப்போது நிதியமைச்சர் அதில் மேலும் ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளார்.

தேர்தல் அறிக்கையில் 12 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான அறிவிப்பு

ராஜஸ்தானில் 2023 சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையில் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 12 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தது. மத்திய அரசால் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. மாநில அரசும் ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் என அறிவிக்கப்பட்டது. வரும் ஆண்டுகளில், அரசாங்கம் இந்த உதவியை மேலும் அதிகரித்து மொத்த தொகையை 12 ஆயிரம் ரூபாய் வரை கொண்டு செல்லும் என கூறப்படுகின்றது.

ராஜஸ்தான் அரசை தொடர்ந்து பிற மாநில அரசுகளும் விவசாயிகளுக்கு இப்படிப்பட்ட பரிசை வழங்குமா என விவசாயிகள் மத்தியில் தற்போது கேள்வியும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் மாநில அரசுகளும் இதனுடன் கூடுதலான தங்கள் பங்கிற்கு ஒரு தொகையை அளித்தால், அது விவசாயிகளுக்கு பெரிய நிவராணமாக இருக்கும்.

PM Kisan 19th Installment: பிஎம் கிசான் 19வது தவணை எப்போது கிடைக்கும்?

இதற்கிடையில் பிஎம் கிசான் திட்டத்தின் 19வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள். பிப்ரவரி மாத கடைசி வாரத்தில் பிரதமர் மோடி பீகார் செல்கிறார். அங்கு பல விழாக்களில் அவர் கலந்துகொள்ளவிருக்கிறார். அப்போது பிஎம் கிசான் 19வது தவணை விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என கூறப்படுகின்றது. 

மேலும் படிக்க | EPFO அதிரடி! PF தொகையை இனி UPI மூலமாகவே எடுக்கலாம்: வருகிறது புதிய வசதி

மேலும் படிக்க | SBI Mutual Fund: ₹250 மாத முதலீட்டை ₹78 லட்சமாக மாற்றும் மேஜிக் ஃபார்முலா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - @ZEETamilNews ட்விட்டர் - @ZeeTamilNews டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: https://bit.ly/3AIMb22 Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News