Donald Trump Latest News: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்து சர்வதேச அரசியலில் தினந்தினம் பரபரப்புக்கு பஞ்சமின்றி காணப்படுகிறது. அவரின் பதவியேற்பு தொடங்கி அடுத்த ஒவ்வொரு நகர்விலும் பல திடுக்கிடும் அறிவிப்புகளையும், பேச்சுக்களையும் டொனால்ட் டிரம்ப் வெளிப்படுத்தி வருகிறார்.
Donald Trump: டிரம்ப் பேச்சு - உற்று நோக்கும் அரசியல் நோக்கர்கள்
இது டொனால்ட் டிரம்பிடம் பலரும் எதிர்பார்த்ததுதான். கடந்த ஆட்சிக்காலத்திலேயே அவரது ஸ்டைல் பலருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் இம்முறை கொஞ்சம் அடக்கி வாசிப்பார் என கூறப்பட்டது. ஆனால் அதற்கான அறிகுறி ஏதும் தற்போதைக்கு தெரியவில்லை. அந்த வகையில், எதிர்கால முதலீட்டு முன்னெடுப்பு (FII) அமைப்பின் மாநாடு மியாமியில் நேற்று நடந்தது. அதில் டொனால்ட் டிரம்பின் பேச்சு பலரையும் உற்று கவனிக்க வைத்துள்ளது.
Donald Trump: 3வது உலகப் போர்... டிரம்ப் பேச்சு
மூன்றாவது உலகப்போர் மிகத் தொலைவில் இல்லை என்றும் ஆனால் தனது தலைமையிலான அரசு அதனை தடுக்கும் என்றும் டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார். மேலும், ஜோ பைடன் தலைமையைிலான ஆட்சி தொடர்ந்திருந்தால் உலகத்தில் போர் மேகம் சூழந்திருக்கும்.
மேலும் பேசிய டொனால்ட் டிரம்ப்,"மூன்றாம் உலகப் போர் நடந்தால் யாருக்கும் எந்த லாபமும் இல்லை. நீங்கள் அதில் இருந்து வெகு தொலைவில் இல்லை. இந்த நிர்வாகம் (ஜோ பைடன் ஆட்சி) இன்னும் ஒரு வருடம் நீடித்திருந்தால், நீங்கள் மூன்றாவது உலகப் போரில் இருந்திருப்பீர்கள், இப்போது அது நடக்கப்போவதில்லை.
Donald Trump: உக்ரைன் அதிபர் மீது தாக்கு
இந்த முட்டாள்தனமான, ஒருபோதும் முடிவடையாத போர்களில் இருந்து மக்கள் பாதிக்கப்படாமல் தடுப்போம். அவற்றில் நாங்களே ஈடுபடப் போவதில்லை. ஆனால் இதுவரை யாரையும் விட நாங்கள் வலிமையாகவும், சக்திவாய்ந்தவர்களாகவும் இருக்கிறோம்" என்றார்.
டொனால்ட் டிரம்ப் உக்ரைன் நாட்டின் அதிபரை நேற்று முன்தினம் (பிப். 19) கடுமையாக தாக்கி பேசியிருந்தார். ரஷ்யா - உக்ரைன் போரில், அமெரிக்கா ஐரோப்பாவை விட 200 பில்லியன் டாலர் அதிகமாக செலவிட்டுள்ளது, ஆனால் முதலீட்டில் எந்த வருமானமும் கிடைக்கவில்லை என்று கூறி உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை விமர்சித்தார். மேலும், ஐரோப்பாவின் நிதி பங்களிப்புகள் மீதும் டிரம்ப் கேள்வி எழுப்பினார்.
வெல்ல முடியாது என்று நம்பும் ஒரு போரில் அமெரிக்காவை அதிக முதலீடு செய்ய ஜெலென்ஸ்கி நம்ப வைப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். தேர்தல்கள் இல்லாமல் ஆட்சி செய்வதற்காக ஜெலென்ஸ்கியை ஒரு சர்வாதிகாரி என்றும் டிரம்ப் குற்றஞ்சாட்டினார். டிரம்ப் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசாவிட்டாலும் உக்ரைனை கடுமையாக விமர்சிப்பது சர்வதேச அரசியலில் பலராலும் உற்றுநோக்கப்படுகிறது.
மேலும் படிக்க | என்னடா இது கொசுக்கு வந்த சோதனை... 5 கொசுவுக்கு ரூ.1.50 சன்மானமா
மேலும் படிக்க | உடலுறவு செய்தே உலக சாதனை செய்த... 2 ஆபாச நடிகைகளும் இப்போ கர்ப்பம் - தந்தை யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ