சனி பகவானின் கோப பார்வையில் 4 ராசிகள்! 40 நாளில் எது வேணா நடக்கலாம்..

Zodiac Signs Going To Shani Dev Wrath : மிக முக்கிய கடவுளாக கருதப்படும் சனி பகவான் நீதி, நேர்மை, கர்ம விணைகள் என பல விஷயங்களை மக்களுக்கு காண்பிப்பவர். இவரது கோபப்பார்வையில் பட்டால் வாழ்வில் இல்லாத துன்பம் துயரம் படுவோம். 

Zodiac Signs Going To Shani Dev Wrath : சனி பகவான், ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு போவதற்கு தாமதித்தாலும், அதற்குறிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருக்க மாட்டார். ஆனால், அவர் நிற்கும் நிலை தவறுதலாக இருந்து விட்டால், அது அந்த ராசியினருக்கு பல முறை துரதிர்ஷ்டமாக அமையலாம். ஒது, வாழ்வையே கூட மாற்றிப்போடவல்லது. எனவே, இந்த முறை சனி பகவானின் கோபப்பார்வையில் இருக்கும் ராசிகள் குறித்து இங்கு பார்ப்போம்.

1 /7

தற்போது, கும்ப ராசியில் சஞ்சரித்து இருக்கும் சனி பகவான், பிப்ரவரி மாத இறுதியில் அஸ்தமிப்பார். இதன் தாக்கம் தாங்கிக்கொள்ள முடியாததாக இருக்கும் எனக்கூறப்படுகிறது. இதனால், 4 ராசிகளும், 4 நாட்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. 

2 /7

சனி பகவான் சஞ்சரிப்பதால் 40 நாட்கள், இந்த குறிப்பிட்ட 40 ராசிகளுக்கு கொஞ்சம் கெட்ட நேரமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது. அப்படி, ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள் எது தெரியுமா?

3 /7

மேஷ ராசியில் சனி பகவான் சஞ்சரிப்பதால், இல்லத்தில் சண்டை-சச்சரவுகள் ஏற்படலாம். உங்கள் பெயர் கெட்டுப்போகும் அளவுக்கான விஷயங்கள் நடக்கலாம். எனவெ, பார்த்து செயல்பட வேண்டியது நல்லது. எது பேசினாலும், யோசித்து அறிந்து பேச வேண்டும்.

4 /7

கடக ராசியை சேர்ந்தவர்கள், அவர்கள் தொழில் ரீதியாக கொஞ்சம் பிரச்சனைகளை சந்திக்கலாம். அலுவலகத்தில் உங்களை பற்றி அவதூறான கருத்துகள் எழலாம். உடன் இருப்பவர்களுடன் சண்டை எழலாம்.

5 /7

சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு தொழில் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் வாழ்க்கை துணையுடன் சண்டைகள் ஏற்படலாம், நிதி இழக்கும் வாய்ப்புகளும் உள்ளது. 

6 /7

மகர ராசியை சேர்ந்தவர்களுக்கு இந்த மாதத்தில் கொஞ்சம் மன பதற்றம் மற்றும் மன அழுத்தம் அதிகரிக்கலாம். பிறர் பேசும் சுடுசொல் கூட பெரிய சண்டையில் இழுத்து விட்டுவிடும். ஒரு சிலர் உங்கள் மீது தேவையின்றி கோபப்படுவர். இவை அனைத்தையும் வரும் 40 நாட்களில் கையாள வேண்டியது அவசியம்.  

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கு கொடுக்கப்பட்ட அனைத்தும் பொதுவான கருத்துக்கள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.