வண்ணங்களின் திருவிழா என்று வர்ணிக்கப்படும் ஹோலி பண்டிகை, வடமாநிலங்களில் களைகட்ட தொடங்கியுள்ளது. ஹோலி பண்டிகை ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும்.
டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆண்டுதோறும் ஹோலிப் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அன்றைய தினம் பெரியோர் முதல் சிறியவர் வரை வண்ண வண்ணப் பொடிகளை ஒருவர் மற்றவர் மீது பரஸ்பரம் பூவதும், பல வண்ணங்கள் கலந்த நீரை பீய்ச்சி அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும் வழக்கம்.
ஹோலியில் சருமம், முடி போன்றவற்றை எப்படி பாதுகாப்பது என்று பாப்போம்:-
* ஹோலி கொண்டாட்டத்தின் போது தலை முடியை பறக்க விட்டுக் கொண்டு செல்லாதீர்கள். ஏனெனில் ஃப்ரீ ஹேர் ஸ்டைலில் வண்ணப் பொடிகள் எளிதில் வேர் வரை சென்று ஒட்டிக் கொள்ளும். பிறகு அவற்றை அகற்றுவது சிரமம். ஹோலிக்குச் செல்லும் முன் தலைமுடியின் வேர்ப்பகுதியில் தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யவும்.
* ஹோலி விளையாடும் முன்பு உங்கள் சருமத்தில் சன்ஸ்கிரீன் பூசவும் குறிப்பாக உங்கள் காதுகள் பின்னால் தடவவும்.
* உங்கள் தோல் பாதுகாக்க டார்க் நிறம் ஆடையை அணியவும்.
* ஹோலி விளையாடுவதற்கு முன்பு தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். அது தோல் நீரேற்றம் அதிகரிக்க வைக்கும்.
* ஆபத்தான ரசாயன வனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
* கூடலை பாதுக்காத்துக்கொள்ள கூந்தலை மெலிசான துணியால் முடி பாதுக்கத்துகொள்ளவும்.
* நிறங்கள் இருந்து பாதுகாக்க உங்கள் உதடுகளில் லிப் தைலம் பயன்படுத்தவும்.