அஸ்தமனமாகும் சனி... இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கையில் ஆச்சரியங்கள் காத்திருக்கிறது

சனிப்பெயர்ச்சி 2025: சனிபகவான் வரும் மார்ச் மாதம் 29ஆம் தேதி அன்று, கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆவார் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு முன்பாக, பிப்ரவரி 28ஆம் தேதி அன்று சனி பகவான் அஸ்தமனம் ஆகிறார்.

சனி பகவானின் பெயர்ச்சி, வக்ர நிலை, அஸ்தமனம் ஆகியவை, ஏழரை நாட்டு சனியின் பாதிப்புகள், அஷ்டம சனி, சனி திசை ஆகியவற்றை தீர்மானிக்கிறது. இவை வாழ்க்கையில் மிக பெரிய திருப்பத்தை உண்டாக்கும் வல்லமை படைத்தவை.

 

1 /9

சனிபகவான் வரும் மார்ச் மாதம் 29ஆம் தேதி அன்று, கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி ஆவார் என்பது அனைவரும் அறிந்ததே. அதற்கு முன்பாக, பிப்ரவரி 28ஆம் தேதி அன்று சனி பகவான் அஸ்தமனம் ஆகிறார்.

2 /9

சனி பகவானின் பெயர்ச்சி, வக்ர நிலை, அஸ்தமனம் ஆகியவை, ஏழரை நாட்டு சனியின் பாதிப்புகள், அஷ்டம சனி, சனி திசை ஆகியவற்றை தீர்மானிக்கிறது. இவை வாழ்க்கையில் மிக பெரிய திருப்பத்தை உண்டாக்கும் வல்லமை படைத்தவை.

3 /9

சில ராசிகள் சனிப்பெயர்ச்சியின் காரணமாக, ஏழரை நாட்டுச் சனியின் பாதிப்பிலிருந்து விடுதலை பெறுவார்கள். அதேசமயம் சில ராசிகள் ஏழரை நாட்டு சனி பாதிப்பில், கடுமையாக சிக்கித் தவிப்பார்கள்.

4 /9

சனிப்பெயர்ச்சிக்கு முன்னதாக ஏற்படும் சனி அஸ்தமனம், சில ராசிகளுக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். சனி பகவானின் அருள் பார்வையால், பலனைப் பரப்போகும் அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பதை அறிந்து கொள்ளலாம்.  

5 /9

மேஷ ராசியினருக்கு சனீஸ்வரனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் நிறைவேறும். உறவுகளில் சந்தித்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். அலுவலகத்தில் உங்களுக்காக ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன.

6 /9

கடக ராசியினருக்கு சனியின் அஸ்தமனம், ஒரு விடியலை கொடுக்கும் எனலாம். நீண்டகால முயற்சிகளுக்கான பலன்கள் கிடைக்கத் தொடங்கி, வாழ்க்கையில் வெற்றிகளை குவிப்பீர்கள். திடீர் ஆதாயம் ஆச்சரியத்தை தரும். குடும்பத்தில் அன்பும் பாசமும் அதிகரிக்கும்.

7 /9

தனுசு ராசியினருக்கு சனிபகவானின் அருளால் இதுவரை வாழ்க்கையில் சந்தித்து வந்த இன்னல்கள் அனைத்தும் நீங்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். குடும்ப பிரச்சினைகள் நீங்கி, மனதில் நிம்மதி பிறக்கும்.  

8 /9

சனி பரிகாரங்கள்: ஏழரை நாட்டு சனி பாதிப்பு நீங்கவும், வாழ்க்கையில் சந்திக்கும் கஷ்டங்கள் அனைத்திலிருந்தும் விடுபடவும், ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். சனிக்கிழமைகளில், சனீஸ்வரனை வணங்கி நல்லெண்ணெய் தீபம் இடுவதால், சனி பகவானின் தீய பார்வையை சமாளிக்கலாம்.

9 /9

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது