Madhampatty Rangaraj Wife Shruthi Recent Post : மெஹந்தி சர்க்கஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர், மாதம்பட்டி ரங்கராஜ். சமையல் கலை நிபுணரான இவர், பல பிரபலங்களின் வீட்டு விசேஷங்களுக்கு கேட்டரிங் செய்து கொடுப்பவர். இவர் குறித்த சர்ச்சைகள்தான் சமீப காலமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி:
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஸ்ருதி என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆனது. இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். ஸ்ருதி, திராவிட கொள்கைகள் கொண்ட ஒரு பெண். அவர் ஒரு வழக்கறிஞரும் கூட. இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மனைவி மகனுடன் இருக்கும் புகைப்படங்களை சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டு இருக்கிறார். அதுமட்டுமன்றி தன் கணவரின் தொழிற்சார்ந்த வீடியோக்களை கூட இன்னும் டெலிட் செய்யாமல் வைத்திருக்கிறார்.
2வது திருமண சர்ச்சை:
மாதம்பட்டி ரங்கராஜ், சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கினார். இவர், தமிழ் சினிமாவின் பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளரான ஜான் கிரிஸில்டா என்பவருடன் உறவில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த காதலர் தினத்தின் போது மாதம்பட்டி ரங்கராஜை அவர் ஸ்டோரில் டேக் செய்து “My Man” என்று பதிவிட்டிருந்தார்.
இப்படி இவர்கள் உறவு குறித்து இணையத்தில் பல தகவல்கள் வைரல் ஆகி வருகின்றன. ஆடை வடிவமைப்பாளர் ஜாய்யும், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் அவரைப்பற்றி போட்டுள்ள ஸ்டோரிகளையும் இன்ஸ்டாவில் ஹைலைட் செய்து வைத்திருக்கிறார். இதையடுத்து, இவர்களின் திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாதம்பட்டினங்கராஜ் இன்னும் இந்த சர்ச்சை குறித்து மௌனம் காத்து வருகிறார்.
மனைவி செய்த செயல்..
மாதம்பட்டி ரங்கராஜ்ஜின் மனைவி ஸ்ருதி, தனது instagram பயோவில் #Madhampattyrangarajwife என வைத்திருக்கிறார். அதேபோல அவருடன் எடுத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களிலும் அதே ஹேஷ்டேக்கை-ஐ சேர்த்திருக்கிறார். மேலும் அவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது ப்ரொபைலில் pin செய்து வைத்திருக்கிறார். ஐந்து நாட்களுக்கு முன்னர் அந்த போட்டோவிலேயே, “நான் அவரது மனைவி” என்று கமெண்ட்டும் செய்திருக்கிறார். இது மாதம்பட்டி ரங்கராஜின் விவாகரத்து குறித்து வந்த தகவல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உள்ளது.
என்ன பிரச்சனை?
மாதம்பட்டி ரங்கராஜ்ஜும், அவரது மனைவியும் இப்போது இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் ஃபாலோ செய்யவில்லை. ஆனால், மாதம்பட்டியும் ஜாய்யும் ஒருவரை ஒருவர் இன்ஸ்டா தளத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர். இதையடுத்து, மாதம்பட்டி உண்மையாகவே அந்த பெண்ணுடன் உறவில் இருக்கிறாரா, அல்லது அந்த பெண் தேவையின்றி பிரச்சனைகளை கிளப்ப வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறாரா என்பது தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் இது குறித்து இவர்கள் இருவரும் வாய் திறந்தால்தான் உண்மை வெளியில் வரும்.
குக் வித் கோமாளி:
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் புது நடுவராக நுழைந்தார், மாதம்பட்ட ரங்கராஜ். இந்த நிகழ்ச்சி, இவர் வந்ததால் ஸ்பெஷலாகும் என பலர் நினைத்தனர். ஆனால், உண்மையில் அவர் இந்த நிகழ்ச்சியை பெரிதாக என்டர்டெயின் செய்யவில்லை என ரசிகர்கள் தெரிவித்தனர். ஒரு சிலர், ரியாலிட்டி நிகழ்ச்சியிலேயே அவர் நடித்து வருவதாகவும் தெரிவித்தனர். இனி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன்களில் இவர் இடம் பெறுவாரா என்பது தெரியவில்லை.
மேலும் படிக்க | மனைவியை விவாகரத்து? பிரபல நடிகையுடன் டேட்டிங்கில் மாதம்பட்டி ரங்கராஜ்?
மேலும் படிக்க | சமையலில் கலக்கும் மாதம்பட்டி ரங்கராஜின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ