Universal Pension Scheme: நம் அனைவருக்கும் பணத்திற்கான தேவை உள்ளது. இள வயதில் ஓடியாடி வேலை பார்ப்பது போல, முதுமையில் நம்மால் பணிபுரிய முடியாது. ஆகையால், முதுமைக்கான நிதி பாதுகாப்பிற்கு இள வயதிலேயே ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இதற்கான பல திட்டங்களை இந்திய அரசாங்கமும் வகுத்துள்ளது. நமது நாட்டில் பல வித ஓய்வூதியத் திட்டங்கள் உள்ளன.
Pension Scheme: அனைவருக்கும் ஓய்வூதியத்தை அளிக்கும் புதிய ஓய்வூதியத் திட்டம்
பொதுவாக அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைத்து வருகின்றது. இவர்களை தவிர, சில குறிப்பிட்ட ஓய்வூதியத் திட்டங்கள் மூலம் குறிப்பிட்ட சில மக்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இப்போது அரசாங்கம் அனைத்து குடிமக்களுக்கும் ஒரு புதிய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதை செய்ய, அரசாங்கம் யுனிவர்சல் பென்ஷன் ஸ்கீம், அதாவது, யுனிவர்சல் ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இதன் மூலம், இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஓய்வூதியப் பலன் கிடைக்கும். இந்த திட்டத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மற்ற ஓய்வூதிய திட்டங்களை இணைக்க திட்டம்
தற்போது இயங்கும் பிற ஓய்வூதியத் திட்டங்கள் அனைத்தையும் அரசு இதில் இணைக்கக்கூடும். நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் வயதான காலத்தில் நிதிப் பாதுகாப்பை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாக இருக்கும். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இந்தத் திட்டத்தைத் தயாரிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்தத் திட்டம் முற்றிலும் தன்னார்வம் சார்ந்ததாகவும், பங்களிப்பு திட்டமாகவும் இருக்கும் என்று ஒரு அதிகாரி கூறினார். அதாவது இதில் சேர்வது மக்களின் விருப்பத்தை பொறுத்து இருக்கும், எனினும், இதில் அனைவரும் சேர முடியும். மேலும், இந்த திட்டம் பங்களிப்புகளின் அடிப்படையில் செயல்படுத்தப்படும். இது எந்த வித பணிகள், வேலைகள், தொழில்களுடனும் இணைந்திருக்காது. ஆகையால், யார் வேண்டுமானாலும் இதில் பங்களித்து ஓய்வூதியம் பெறலாம்.
EPFO: இந்தத் திட்டத்தை இபிஎஃப்ஓ -வின் கீழ் கொண்டுவர ஏற்பாடு
இந்தத் திட்டத்திற்கான ஒரு வரைபடத்தை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தயாரித்து வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. வரைவுத் திட்டம் தயாரானதும், அதைச் செயல்படுத்த அரசாங்கம் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை EPFO-வின் கீழ் கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
யாருக்குப் பலன் கிடைக்கும்?
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், இதுவரை எந்தத் திட்டத்தின் கீழும் சேர்க்கப்படாதவர்களை ஓய்வூதிய வரம்பிற்குள் கொண்டுவருவதாகும். அதாவது அமைப்புசாரா துறைகளில் உள்ள தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் 60 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் பெற விரும்பும் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவரோர் போன்றவர்களுக்கு இதன் மூலம் ஓய்வூதியம் கிடைக்கும். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் மக்களை ஈர்க்கும் வகையில், அரசாங்கம் தற்போதுள்ள சில திட்டங்களை இதில் சேர்க்கக்கூடும். இதன் மூலம் மக்கள் அதிக நன்மைகளைப் பெறுவார்கள் என்றும், ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது எளிதாகிவிடும் என்றும் கூறப்படுகின்றது.
இந்தத் ஓய்வூதியத் திட்டங்களை இணைப்பதற்கான ஏற்பாடுகள்
தற்போது, பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்தன் யோஜனா (PM-SYM) மற்றும் வர்த்தகர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்களுக்கான தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS-வர்த்தகர்கள்) ஆகியவற்றின் கீழ், 60 வயதுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கிறது. இதில், ஒருவர் மாதத்திற்கு ரூ.55 முதல் ரூ.200 வரை முதலீடு செய்ய வேண்டும். இது பயனாளியின் வயதையும் பொறுத்தது. திட்ட உறுப்பினர் முதலீடு செய்யும் அதே அளவு தொகையை அரசாங்கமும் அதில் முதலீடு செய்கிறது.
மேலும் படிக்க | SIP Mutual Fund: மாதம் ரூ.15,000 போதும்... ஓய்வின் போது கையில் ரூ.8 கோடி இருக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ