Indian Railways App SwaRail: ரயில்வே அமைச்சகம் சமீபத்தில் ரயில் சார்ந்த அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் 'SwaRail' என்ற செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியிருந்தது. சாதாரண பாமர மக்களும் கூட ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்துவிட்டது. அந்த வகையில், ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயணிகள் அனைவரும் எளிமையாக ரயில்வே அமைச்சகத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் பெறுவதற்கே இந்த செயலி கொண்டு வரப்பட்டுள்ளது.
இது ஆண்ட்ராய்ட் கூகுள் பிளே ஸ்டோர் செயலியிலும், ஆப்பிள் ஸ்டோரிலும் இந்த செயலி வந்துவிட்டது. இருப்பினும், இது பீட்டா டெஸ்டிங், அதாவது பரிசோதனையில்தான் இருக்கிறது. இன்னும் மக்களின் முழு பயன்பாட்டுக்கு வரவில்லை. எனவே, தற்போது சிலரால் அதனை தரவிறக்கம் செய்ய இயலாது. எனினும் விரைவில் இந்த செயலி முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SwaRail App: ஒரே இடத்தில் அனைத்து சேவைகள்...
பயணிகள் எளிமையாக அணுகும் விதத்தில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் தற்போது ரயில்வேயின் வெவ்வேறு சேவைகளை பெற வெவ்வேறு செயலிகளை பயன்படுத்த வேண்டியதாகி உள்ளது. ஆனால், இந்த செயலி முழு பயன்பாட்டுக்கு வந்தால் பல சேவைகளை இந்த ஒரு செயலிலேயே பெற்றுக்கொள்ளலாம்.
குறிப்பாக, ரயில் டிக்கெட் முன்பதிவு வசதி, முன்பதிவில்லாத ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி, ரயில் நிலையங்களுக்கான பிளாட்பார்ம் டிக்கெட் புக்கிங் வசதி, பார்சல் சார்ந்த சரிபார்ப்பு, உணவை ஆர்டர் செய்வது, PNR ஸ்டேட்டஸை சரிபார்ப்பது உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் பெறலாம்.
SwaRail App: தட்கல் டிக்கெட் எடுப்பது இனி ஈஸி?
அதிலும் முக்கியமாக தட்கல் முறையில் டிக்கெட் எடுப்பதும் இந்த செயலியால் இனி எளிமையாகும். தற்போது தட்கல் முறையில் டிக்கெட் எடுக்க IRCTC செயலிதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி இந்த செயலியிலேயே தட்கல் எடுக்கலாம்.
IRCTC செயலியில் தட்கல் டிக்கெட் எடுக்கும்போது, இணைய சேவை பாதிக்கப்பட்டு டிக்கெட் கிடைக்காமல் போய்விடும். இந்த புகார் அதிகமாக எழுந்தது. தற்போது, SwaRail செயலியில் தட்கல் புக் செய்யும்போது, இணைய சேவை பாதிக்காமல் இருக்கும். அதற்கேற்ப, இந்த செயலி வேகப்படுத்தப்பட்டுள்ளது.
SwaRail செயலியில் பதிவு செய்து இதனை பயன்படுத்தலாம். M-PIN மற்றும் பயோ-மெட்ரிக் முறையில் இதில் நீங்கள் லாக்-இன் செய்யலாம். மேலும், IRCTC, RailConnect, UTS மொபைல் செயலி ஆகியவற்றை பயன்படுத்தும் பயனர்கள், தங்களின் அடையாள அட்டையை பயன்படுத்தி இந்த புதிய செயலியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | ரயில் நிலையத்தில் வாங்கிய முன்பதிவு டிக்கெட்டை ஆன்லைனில் ரத்து செய்வது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ