Viral Video Of School Boys Hanging In Thread : இணையத்தில் வைரலாகும் வீடியோக்கள், பல சமயங்களில் பகீரென நமக்கு தூக்கி வாரிப்போடும் அளவிற்கு பயத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட ஒரு வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், குழந்தைகள் தூக்கிலிடப்பட்டது போல நாடகம் நடத்தி காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த குழந்தைகள் உண்மையாகவே தொங்க விடப்பட்டுள்ளனர்.
வைரல் வீடியோ:
இந்த சம்பவம், ஒரு பள்ளி விழாவில் நடந்துள்ளது. இதில் முதலில், பள்ளி மாணவர்கள் ஒரு மரக்கட்டையில் தூக்கிலிடப்பட்டிருப்பது போல காண்பிக்கப்படுகிறது. அந்த குழந்தைகள் கைதிகளை போல உடை உடுத்தியிருக்கின்றனர். அவர்களின் முகங்கள், தூக்கிடுவதற்கு முன்பு ஒரு கைதிக்கு முகம் ஒரு கருப்பு துணியால் மூடப்பட்டிருப்பது போல மூடியிருக்கிறது. இது, ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு நடந்த பள்ளி நாடகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இது உண்மையா என்பது தெரியவில்லை. வீடியோவன் முடிவில் அருகில் இருப்பவர்கள் அந்த குழந்தைகளை இறக்கி விடுவதும் பதிவாகி இருக்கிறது. அந்த குழந்தைகளுக்கு எதுவும் ஆகவில்லை.
प्रोग्राम के लिए किसी की जिंदगी को यूं खतरे में डालना गलत है।
सोशलमीडिया पर वीडियो वायरल है।
कबकी और कहाँ की घटना इसकी जाँच कर इसका संज्ञान लिया जाना आवश्यक है। pic.twitter.com/ylTbrxq04s— अश्विनी सोनी اشونی سونی (@Ramraajya) January 28, 2025
பாக்கவே பயமா இருக்கு!
இந்த நாடகம் ஒரு அளவை கடந்து ரியலிஸ்டிக்காக காட்ட வேண்டும் என்பதற்காக இப்படியொரு விஷயத்தை செய்திருப்பதாக சிலர் கூறுகின்றனர். இந்த வீடியோவை பார்த்த இன்னும் சிலர், ஒரு நாடகத்திற்காக குழந்தைகளின் உயிரை இப்படி பணயம் வைக்கலாமா என்றும் கூறி வருகின்றனர். ஒரு சிலர் இது குறித்து தீர விசாரிக்க வேண்டும் என்றும், யாக்கும் இது போல இனி செய்ய துணிச்சல் ஏற்படக்கூடாது என்றும் கூறி வருகின்றனர்.
ஒரு சிலர், குழந்தைகள் எதை பார்க்கிறார்களோ அதனை சீக்கிரமாக கற்றுக்கொள்வார்கள் என்றும், அவர்களுக்கு வருங்காலத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு இந்த பள்ளி நிர்வாகம்தான் பொறுப்பு என்றும் சிலர் கூறி வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் 1.4 மில்லியன் வரை வியூஸ் பெற்றுள்ளது.
மேலும் படிக்க | முதலீடே இல்லாமல் 1 வாரத்தில் 40 ஆயிரம் சம்பாதித்த இளைஞன்! எப்படி தெரியுமா?
மேலும் படிக்க | மகா கும்பமேளாவின் பேரழகியா இது.. ரசிகர்கள் அதிர்ச்சி! மோனாலிசாவின் Fake வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ