Easy Tips To Secure Your Marriage Relationship : எந்த உறவாக இருப்பினும், அதற்குள் சண்டை வருவதும் பின்பு சமாதானமாவதும் சகஜம். ஆனால், ஒரு பெரிய உறவு சின்ன சண்டையில் முடிந்து விட கூட வாய்ப்பு இருக்கிறது. அதுவும் புதிய காலகட்டத்தில் பலர் உறவை எப்படி பேணிக்காப்பது என்ற வழியை தேடாமல், அந்த உறவை விட்டு விடுவதிலேயே குறிக்கோளை கொண்டுள்ளனர். கணவன் மனைவிக்குள் எவ்வளவு பெரிய சண்டை வந்தாலும் அதனை எப்படி சமூகமாக முடிப்பது? உறவை எப்படி காப்பது? என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
நேரடியாக கனிவாக பேசவும்:
ஒரு சண்டையில் உங்கள் மனம் புண்பட்டு விட்டது என்றால், இப்போது உங்களுக்கு என்ன உணர்வுகள் இருக்கிறதோ அதை நேர்மையாக அவர்கள் முகத்திற்கு நேரே சொல்ல வேண்டும். ஆனால் அப்படி கூறும் விஷயத்தை கனிவாக கூற வேண்டும். இதில் இருப்பவர் பேசும்போது நீங்கள் குறுக்கே எதுவும் பேசாமல் அதைக் கேட்க வேண்டும். உங்கள் பார்ட்னருக்கும் தன் பக்க நியாயத்தை கூற வேண்டும் அதை பிறர் கேட்க வேண்டும் என்ற ஆவல் இருக்கும்.
பொறுமை மற்றும் புரிந்துணர்வு:
உங்களது சூழலை உங்கள் துணையின் இடத்திலிருந்து ஒருமுறை பார்க்க வேண்டும். எந்த பெரிய சண்டை ஏற்பட்டாலும் உடனே அதை சரி செய்ய வேண்டும் அல்லது விட்டுவிட வேண்டும் என்று யோசிப்பதற்கு பதிலாக, கொஞ்சம் பொறுமை காப்பது நல்லது. கோபமாக இருக்கும் போது உணர்ச்சிகள் பீறிட்டு அடிக்கும். அப்போது என்ன பேசுகிறோம் என்பது நமக்கே தெரியாது. எனவே, அந்த சமயத்தில் பொறுமையை காப்பது நல்லது.
பிரச்சனையை மட்டும் பேச வேண்டும்:
கணவன் மனைவி உண்மையாகவே ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் பிரச்சினையை எப்படி தீர்க்க வேண்டும் என்று பார்க்க வேண்டும், அதை விடுத்து “நீங்கள்தான் பிரச்சனையே” என்று ஒருவர் இன்னொருவரை குறிப்பிடக் கூடாது. நீங்கள் இருவரும் ஒரே டீமை சேர்ந்தவர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மன்னிப்பு கேட்பது மன்னிப்பது:
“மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன் மன்னிக்கிறவன் பெரிய மனுஷன்” இன்று ஒரு சினிமா டயலாக் இருக்கிறது. எனவே இருவர் யாரு தவறு செய்திருந்தாலும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என தோன்றினாலும் sorry கேட்டு விட வேண்டும். பழிவாங்கும் என்னும், வெறுப்பது, கோபத்தை மனதிலேயே வைத்துக் கொள்வது போன்ற விஷயங்களை எப்போதும் செய்ய வேண்டாம். இது பிற்காலத்தில் உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்திவிடும்.
மேலும் படிக்க | ஆண்களே..! காதலிக்கும் போது ‘இந்த’ 4 தவறுகளை மட்டும் செய்து விடாதீர்கள்!
ஒன்றாக நேரம் செலவிடுதல்:
சண்டைக்கு பிறகு சகஜமாக பேசிக் கொள்வது அவ்வளவே எளிதாக வராதுதான். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் ஒருவருடன் ஒருவர் நேரத்தை செலவழிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இருவருக்கும் தனித்தனியே ஒரு வாழ்க்கை இருந்தாலும் கடைசியில் ஒரே வீட்டில் தான் இருக்கப் போகிறீர்கள். அந்த வீட்டிலும் இரு வேறு வாழ்க்கை இருக்க வேண்டாம். நாள் எப்படி சென்றது, அன்றைய நாளில் நடந்த நல்ல விஷயங்கள், கெட்ட விஷயங்கள் ஆகியவை குறித்து கலந்துரையாட வேண்டும்.
மூன்றாம் நபரை தேட வேண்டாம்:
பெரும்பாலான தம்பதிகள் செய்யும் தவறு, அவர்கள் மூன்றாம் நபரிடம் கருத்து கேட்பதுதான். குடும்ப நல ஆலோசகரை (therapist) வேறு மூன்றாம் நபரை உங்கள் உறவுக்குள் சேர்க்கக்கூடாது. இது பெரிய பிரச்சனைகளுக்கு வழி வகுக்கலாம்.
மேலும் படிக்க | சரியான காதலை உங்கள் வாழ்கைக்குள் வரவேற்பது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ