விளக்கெண்ணெயின் நன்மைகள்: ஆமணக்கு எண்ணெயை முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உடலுக்கு பல நன்மைகளை வழங்க முடியும். ஆமணக்கு விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய், விளக்கெண்ணெய். இது மனித உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்ட விளக்கெண்ணெய் பொதுவாக முடி மசாஜ் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
ஆரம்பக் காலத்தில் விளக்கு எரிக்க பயன்படுத்தப்பட்டதால் விளக்கெண்ணெய் என பெயர் பெற்றது ஆமணக்கு எண்ணெய். ஆமணக்கில் இருந்து எடுக்கும் எண்ணெய் மட்டுமல்ல, ஆமணக்குச் செடியின் இலைகள், வேர், விதை, ஆகியவையும் சிறப்பான மருத்துவப் பண்புகளைக் கொண்டவை.
ஆமணக்கு எண்ணெயின் பயன்கள் என்ன?
ஆமணக்கெண்ணெய் பொதுவாக வயிற்றைச் சுத்தம் செய்வதற்காகவும், வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றுவதற்காகவும் பயன்படுத்தப்டுகின்றது. ஆயுர்வேத மருத்துவத்தில் வாயுத் தொல்லைகளை சரி செய்யவும் உதவுகின்றது.
பிற எண்ணெய்களைவிட, ஆமணக்குக் எண்ணெயின் அடர்த்தி அதிகமானது. விளக்கெண்ணெய்யை ஆயுர்வேதத்தின் பரிசு என்று அழைப்பதில் தவறில்லை. கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு அமிலம், ரிசினோலிக் அமிலம் மற்றும் லினோலிக் அமிலம் என பல அருமையான குணங்களைக் கொண்ட ஆமணக்கு எண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.
ஆமணக்கு எண்ணெயின் நன்மைகள்
முடிக்கு நன்மை தரும் ஆமணக்கு எண்ணெய்
ஆமணக்கு எண்ணெய் எனப்படும் விளக்கெண்ணெய், முடி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது, முடி உதிர்தல் அல்லது முடி இழப்பு பிரச்சனை உள்ளவர்கள் விளக்கெண்ணெயை பயன்படுத்தலாம். இது வேர்களுக்கு ஊட்டமளிக்கிறது, முடியை பலப்படுத்துகிறது மற்றும் அதன் வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
சருமத்திற்கு விளக்கெண்ணெய்
முடியைப் போலவே, ஆமணக்கு எண்ணெய் சருமத்திற்கும் நன்மை பயக்கும். தோல் நோய்களை எதிர்த்துப் போராடுவதில் ஆமணக்கு எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதைப் பயன்படுத்தினால், சருமத்தில் தோன்றும் புள்ளிகள், பருக்கள் மற்றும் வறட்சி நீங்குவது மட்டுமின்றி, சருமத்தில் தொற்று ஏற்படும் அபாயமும் குறையும்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 'சூப்பர்' உணவுகள்
மலச்சிக்கலுக்கு அருமருந்தாகும் விளக்கெண்ணெய்
மலச்சிக்கல் போன்ற வயிற்று பிரச்சனைகளை ஆமணக்கு எண்ணெய் குணப்படுத்துகிறது. வயிற்றில் பிரச்சனை இருக்கும் போது ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இந்த எண்ணெயை அருந்தலாம்.
மாதவிடாய் பிரச்சனையை தணிக்கும் விளக்கெண்ணெய்
பெண்கள் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை ஆமணக்கு எண்ணெய் சரிசெய்கிறது. ஆமணக்கு விதைகளில் உள்ள ரிசினோலிக் அமிலம் மாதவிடாய் காலத்தில் நிவாரணம் அளிக்கும். இருப்பினும், நிபுணர் ஆலோசனையின் பின்னரே பெண்கள் விளக்கெண்ணெயை பயன்படுத்த வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இஞ்சிக்கு மிஞ்சியது எதுவும் இல்லை! யாரெல்லாம் இஞ்சியை அதிகமா சாப்பிடக்கூடாது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ