EPFO Upadate: அலுவலக பணிகளில் பணிபுரியும் பணியாளரா நீங்கள்? மாதா மாதம் உங்கள் சம்பளத்திலிருந்து இபிஎஃப் கணக்கில் ஒரு தொகை டெபாசிட் செய்யப்படுகின்றதா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) PF கணக்கிலிருநு பணம் எடுப்பதாற்கான விதிகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. இவை பிப்ரவரி 2025 முதல் அமலுக்கு வரும்.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு புதிய விதிகள்
புதிய விதிகளின் கீழ், PF கணக்கிலிருந்து பணத்தை திரும்பப் பெறும் செயல்முறை முன்பை விட எளிமையாக்கப்படும். சமீபத்தில், EPFO, PF கணக்கை சுயமாகப் புதுப்பித்துக் கொள்வது பற்றிய தகவலை வழங்கியது. அதாவது இபிஎஃப் கணக்கில் (EPF Account) சில புத்துப்பித்தல்களை செய்வதற்கு இனி பிஎஃப் உறுப்பினர்கள் முதலாளி / நிறுவனத்தின் ஒப்புதலை பெற வேண்டிய அவசியம் இல்லை. கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்கில் உள்ள தவறுகளை இனி தாங்களே சரி செய்ய முடியும். இனி வரும் காலத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழவுள்ளன என்பது பற்றி இங்கே காணலாம்.
PF ATM Withdrawal: ஏடிஎம் -இல் இனி பிஎஃப் பணத்தை எடுக்கலாம்
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) புதிய ATM அட்டையை அறிமுகப்படுத்துவது குறித்து நீண்ட காலமாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது வந்தவுடன், ஊழியர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை மிக எளிதாக எடுக்க முடியும். இந்த அட்டை வந்த பிறகு, ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பது போலவே பிஎஃப் பணத்தையும் எடுக்க முடியும். ஏடிஎம் கார்டு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி மாதத்திற்குள் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. எனினும் ஏடிஎம் மூலம் பணம் எடுக்க குறிப்பிட்ட வரம்பு விதிக்கப்படும். அந்த வரம்பிற்குள்ளான தொகையைதான் எடுக்க முடியும்.
PF Contribution: இபிஎஃப் பங்களிப்பு
தற்போது, குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஊழியர்களிடம் பிஎஃப் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் புதிய விதிகளில் இபிஎஃப் பங்களிப்புகளிலும் மாற்றம் வரலாம் என கூறப்படுகின்றது. மேலும், தற்போதுள்ள 12% வரம்பும் நீக்கப்படலாம் என கூறப்படுகின்றது. எனினும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஏதும் வரவில்லை.
EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு கணக்கு பரிமாற்றம் மற்றும் தனிப்பட்ட விவரப் புதுப்பிப்பில் அதிக வசதிகள்
- EPFO-வைப் பயன்படுத்தும் செயல்முறை தொடர்ந்து எளிமையாக்கப்பட்டு வருகிறது.
- இதற்காக சமீபத்தில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
- அதில், நிறுவனத்தின் எந்த தலையீடும் இல்லாமல் இப்போது EPF கணக்கை மாற்ற முடியும் என்று கூறப்பட்டது.
- PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தனிப்பட்ட விவரங்களைப் புதுப்பிக்கும் வசதியும் வழங்கப்படும்.
- இபிஎஃப் கணக்கைத் திறக்கும்போது பிறந்த தேதி, பெயர் அல்லது வேறு ஏதேனும் விவரங்கள் தவறாக உள்ளிடப்பட்டிருந்தால், அவற்றை சரிசெய்ய இனி எந்த விண்ணப்பமும் தேவை இருக்காது.
- கணக்கு வைத்திருப்பவர்கள் இதில் தாமாகவே மாற்றங்களைச் செய்யலாம்.
மேகும் படிக்க | Budget 2025: விவசாயிகளுக்கு குட் நியூஸ், பிஎம் கிசான் தொகை அதிகரிக்கிறதா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ