Sani Nakshatra Peyarchi Palangal: சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் கிடைக்கும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இங்கே காணலாம்.
Sani Peyarchi Palangal: அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிக முக்கியமானவர். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிப்பதால் நீதியின் கடவுள் என அழைக்கப்படுகிறார். சனி பகவான் தற்போது கும்ப ராசியில் உள்ளார். அவர் மார்ச் மாதம் மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதற்கிடையில், பிப்ரவரி 2 ஆம் தேதி சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் பெயர்ச்சி ஆகிறார். இதனால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். இவர் ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகளுக்கு இருக்கிறார். இதனால் ராசிகளில் இவரது தாக்கமும் மிக அதிகமாக இருக்கின்றது.
சனி பகவான் தற்போது கும்ப ராசியில் உள்ளார். அவர் மார்ச் மாதம் மீன ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதற்கிடையில், பிப்ரவரி 2 ஆம் தேதி சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் பெயர்ச்சி ஆகிறார்.
சனி நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிக நன்மைகள் கிடைக்கும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். வாழ்க்கையில் வெற்றிகள் குவியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
மேஷம்: சனி நட்சத்திர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் வலுவான நிலையை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் அமைதி இருக்கும். சொந்தமாக தொழில் செய்பவர்கள் அதிக லாபம் ஈட்டுவார்கள். உங்கள் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற வாய்ப்புள்ளது. இதனுடன் நீங்கள் பணத்தைச் சேமிப்பதிலும் வெற்றி பெறலாம். வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் நல்ல நேரத்தை செலவிடலாம்.
கடகம்: சனி நட்சத்திர பெயர்ச்சி தாக்கத்தால் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் பல புதிய வாய்ப்புகளையும் காணலாம். உங்கள் பணி பாராட்டப்படும், மேலும் உங்கள் மரியாதையும் அதிகரிக்கக்கூடும். வணிகத் துறையிலும் நீங்கள் அதிக லாபத்தைப் பெறலாம். ஆன்சைட் தொழிலில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இதன் மூலம் பண வரவு அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு, சனியின் நட்சத்திர பெயர்ச்சி சாதகமாக இருக்கும். இந்த ராசியில் பிறந்தவர்கள் தங்கள் பணியிடத்தில் மகத்தான வெற்றியைப் பெறலாம். இதனுடன், பல புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கக்கூடும். தொழிலிலும் லாபம் ஈட்ட வாய்ப்புகள் கிடைக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.
துலாம்: சனி நட்சத்திர பெயர்ச்சி துலா ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். நீண்ட காலமாக நிறுத்தப்பட்டிருந்த வேலைகள் மீண்டும் தொடங்கலாம். இதனுடன், உங்கள் நிதி நிலைமையும் வலுவாகலாம். சனி பெயர்ச்சி தாக்கத்தால் கல்வித்துறையில் நன்மைகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். அவர்களின் முன்னேற்றத்தைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். உயர்கல்வி பயில வெளிநாடு செல்லும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கலாம். தொழில் துறையில் மிகப்பெரிய நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குருவின் அருளால் மரியாதையும் அதிகரிக்கும்.
கும்பம்: சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆவது கும்ப ராசிக்காரர்களுக்கு அனுகூலமான நன்மைகளை அளிக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு 2025 புத்தாண்டு மிகவும் அதிர்ஷ்டகரமானதாக இருக்கும். சனி பெயர்ச்சியால் குடும்பத்தினருடனோ அல்லது வாழ்க்கைத் துணையுடனோ நீண்ட காலமாக இருந்து வந்த தகராறுகள் இப்போது முடிவுக்கு வரக்கூடும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். உடல் மற்றும் மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி மகிழ்ச்சியை கொண்டு வரும். பண வரவு அதிகமாகும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்போது நடந்துமுடியும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். வெற்றிகள் பல கிடைக்கும்.
சனி பகவானின் அருள் பெற, “ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ” என்ற சனி மூல மந்திரத்தை ஜபிப்பதும் நல்ல பலன்களை அளிக்கும். மேலும், 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்தோத்திரத்தையும் தினமும் கூறலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.