செருப்பு போடாமல் நடந்தால் இத்தனை நல்ல விஷயம் நடக்குமா! இது தெரியாம போச்சே..

Mental Health Benefits Of Walking Barefoot : நாம் அனைவருமே எங்கு சென்றாலும், காலணி அணிந்து கொண்டு செல்கிறோம். ஆனால், காலணி அணியாமல் நடப்பதால், நமக்குள்ள என்னென்ன மாதிரியான மன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Jan 25, 2025, 04:42 PM IST
  • வெறும் காலில் தரையில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள்!
  • இது இயற்கையுடன் நம்மை இணைய செய்யும்..
  • மனநலனும் பன்மடங்காக மேம்படும்..
செருப்பு போடாமல் நடந்தால் இத்தனை நல்ல விஷயம் நடக்குமா! இது தெரியாம போச்சே.. title=

Mental Health Benefits Of Walking Barefoot : இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி, ஒரு நேர்காணலில் பேசியிருப்பார். அதில், “மனசுக்கு கஷ்டமா இருக்கா? கொஞ்ச நாள் செருப்பு போடாம நடங்க..நடந்து பாருங்க..உங்களுக்கே மாற்றங்கள் தெரியும்” என கூறியிருப்பார். 

சுத்தமாக அல்லது ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும், காலில் கல்-முள் குத்தாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் நாம் எங்கு சென்றாலும் செருப்பு அணிந்து கொண்டுதான் செல்வோம். ஒரு சிலர், வீட்டிற்குள்ளே கூட செருப்பு அணிந்து கொண்டுதான் செல்வார்கள். ஆனால், செருப்பு அணியாமல் ஒரு நாள் சென்றால் என்ன ஆகும் என்று எப்போதாவது நினைத்ததுண்டா? இதனால், மனதில் சில நல்ல மாற்றங்கள் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. காலில் செருப்பு போடாமல் நடப்பதற்கு “earthing-grounding” என்று ஆங்கிலத்தில் பெயர் உண்டு. இதனால், மனதளவில் பலவித நல்ல வகையான மாற்றங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அவை என்னென்ன என்றால்..

மன அழுத்தம் குறையும்:

காலில், காலணி அணியாமல் நடப்பதால் நாம் புல்வெளி, மணல், சேர் என அனைத்திலும் கால் வைத்து நடப்போம். இவை, நம் உடலில் இருக்கும் ஹார்மோன் அளவை குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது. இப்படி பூமியுடன் நீங்கள் உங்கள் காலை வைத்து இணையும் போது நம் மனது நம்மையே அறியாமல் அமைதியாகுமாம். நரம்பு மண்டலம் சாதாரணமாகி, பதற்றமும் குறையுமாம்.

மனநலன் மேம்படும்:

இயற்கை, நம் மனதையும் உடலையும் மேம்படுத்தும் சக்தியை கொண்டுள்ளது. இப்படி, நாம் பூமியில் செருப்பு அணியாமல் நேரடியாக தொடர்பு கொள்ளும் போது உடலில் இருக்கும் எண்டார்ஃபின் எனும் ஹார்மோன்கள் அதிகரித்து, நமக்கு நல்ல உணர்வுகளை கொடுக்கும் Feel-Good கெமிக்கல்கள் அதிகமாக உற்பத்தியாகுமாம். இதனால் நமது மனநிலை மகிழ்ச்சியாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.

வீண் யோசனைகள்:

நமக்கு வரும் பாதி பிரச்சனை, நாம் அதிகமாக எதையாவது பற்றி யோசிப்பதால்தான் எனக்கூறப்படுகிறது. நம் காலுக்கு கீழ் பூமியை உணருவதால், வேறு எதையும் நினைப்பதை விட்டுவிட்டு கவனத்துடன் எங்கு செல்கிறோம் எப்படி செல்கிறோம் என்பதை பார்த்துக்கொண்டிருப்போம். இது, வீண் யோசனைகளை நிறுத்துவதற்கும் நிகழ்காலத்தில் இருப்பதற்கும் உதவும்.

நல்ல தூக்கம்:

நாம் செருப்பு இல்லாமல் நடக்கும் போது, நமது தூக்கமும் மேம்படுவதாக கூறப்படுகிறது. இது, நமது உடலை இயற்கையுடன் இணைத்து, சர்காடியன் ரிதம் எனப்படும் உடலின் காலநிலையை சரி செய்து ஆழ்ந்த தூக்கத்திற்கு வழி வகுக்குமாம். இதனால் இரவில் நன்றாக எந்த கவலையுமின்றி உறங்க முடியுமாம்.

படைப்பாற்றல்:

இயற்கையுடனான தொடுதலில் இருப்பது, நமது படைப்பாற்றலை பன்மடங்காக உயர்த்துமாம். எனவே, வெறும் காலுடன் மணற்பரப்பில் அல்லது புல்வெளியில் நடந்தால் மனமும், மனநிலையும் மேம்பட்டு கவனச்சிதறல் ஏற்படாமல் இருக்குமாம்.

மனச்சோர்வை நீக்கும்:

தினசரி வேலை செய்து, ஒரே இடத்திற்கு சென்று மனமும் உடலும் சோர்வாகலாம். இதனை தவிர்க்க, எப்போதும் இயற்கையுடன் நாம் இணைந்திருத்தல் வேண்டும். எனவே, மனசோர்வை நீக்க வெறும் காலுடன் தரையில் நடக்கலாம்.

யாரெல்லாம் செருப்பில்லாமல் நடக்க கூடாது?

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், கால்-முட்டி வலி பிரச்சனை இருப்பவர்கள், வயதானவர்கள், காலில் அடி பட்டவர்கள், ரத்த ஓட்டம் தொடர்பான பிரச்சனை கொண்டவர்கள் உள்ளிட்டோர் செருப்பு அணியாமல் வெறும் காலில் நடக்க கூடாது.

மேலும் படிக்க | தூங்கும்போது செய்யவே கூடாத தவறுகள்.. இப்படி மட்டும் படுக்காதீங்க...!

மேலும் படிக்க | ஆடையில்லாமல் தூங்குவதால் ஏற்படும் 7 ஆச்சரிய நன்மைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News