மாதச் சம்பளம் வாங்குறீங்களா... லட்சக்கணக்கில் சேமிக்க இந்த RD திட்டம் உதவும்!

SBI RD Scheme: நீங்கள் மாதாமாதம் சிறுக சிறுக சேமித்து, 3 ஆண்டுகளில் லட்சக்கணக்கில் பணத்தை பெற வேண்டும் என்றால் எஸ்பிஐ வழங்கும் இந்த RD திட்டம் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

RD திட்டம் என்பது ஒரு பெரிய தொகையை இலக்காக வைத்து, மாதாமாதம் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும். இதற்கு உங்களுக்கு வட்டியும் கிடைக்கும் என்பதால் மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு தனியே சேமிக்க இதுபோன்ற திட்டம் பெரியளவில் கைக்கொடுக்கும்.

1 /8

இந்திய ஸ்டேட் வங்கியின் 'Har Ghar Lakhpati' என்ற தொடர் வைப்பு திட்டம் (RD) குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா...? தனிநபருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் கூட இந்த திட்டம் பயனளிக்கும்.   

2 /8

லட்சக்கணக்கில் அதாவது, ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம், இந்த திட்டத்தின்கீழ் நீங்கள் சேமிக்கலாம். இதற்காக நீங்கள் மாதாமாதம் ஒரு தொகையை டெபாசிட் செய்யலாம்.   

3 /8

இந்த கணக்கை நீங்கள் தனியாகவோ அல்லது இருவரும் சேர்ந்தோ திறக்கலாம். 10 வயதுக்கு மேற்பட்டவர்களும் கூட இந்த திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கலாம். பெற்றோர்கள், காப்பாளர்களின் பெயரில்கூட மைனர்கள் கணக்கு தொடங்கலாம்.   

4 /8

வயது மற்றும் நீங்கள் முதலீடு செய்யும் காலத்திற்கு ஏற்ப வட்டி விகிதங்களில் மாற்றம் உண்டாகும். பொது குடிமக்களுக்கு, 3-4 வருடங்களுக்கு நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் என்றால் 6.75% வட்டி விகிதமாக கிடைக்கும். அதேபோல், 5-10 வருடங்களுக்கு முதலீடு செய்தால் 6.50% வட்டி விகிதமாக கிடைக்கும்.   

5 /8

மூத்த குடிமக்களுக்கு 3-4 ஆண்டுகளுக்கு 7.25% வட்டி விகிதமும், 5-10 ஆண்டுகளுக்கு 7% வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது.   

6 /8

ரூ.1 லட்சத்திற்கு...: பொது குடிமக்கள் 1 லட்ச ரூபாயை பெற, இந்த திட்டத்தில் மூன்று வருடங்கள் முதலீடு செய்ய வேண்டும். அதுவும் மாதந்தோறும் 2,502 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதுவே, மூத்த குடிமக்கள் ரூ.1 லட்சத்தை மூன்று ஆண்டுகளில் பெற மாதந்தோறும் 2,482 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும்.     

7 /8

ரூ.3 லட்சத்திற்கு...: அதேபோல், பொதுகுடிமக்கள் மூன்று ஆண்டுகளில் ரூ.3 லட்சத்தை பெற, மாதந்தோறும் ரூ.7,503 முதலீடு செய்ய வேண்டும். மூத்த குடிமக்கள் மூன்று ஆண்டுகளில் ரூ.3 லட்சத்தை பெற மாதந்தோறும் ரூ.7,445 முதலீடு செய்ய வேண்டும்.   

8 /8

ரூ.5 லட்சத்திற்கு...: மேலும், பொது குடிமக்கள் மூன்று ஆண்டுகளில் ரூ.5லட்சத்தை பெற மாதந்தோறும் 12,506 ரூபாயை செலுத்த வேண்டும். மூத்த குடிமக்கள் ரூ.5 லட்சத்தை மூன்று ஆண்டுகளில் பெற ரூ.12,408 முதலீடு செய்ய வேண்டும்.