8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?

8வது ஊதிய குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Feb 4, 2025, 07:29 PM IST
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்?  title=

மத்திய அரசு 8வது ஊதிய குழுவை முன்மொழிந்துள்ளது. இதன் மூலம் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வுகள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய ஊதியக் குழுவின் கீழ் மாத வருமானம் எவ்வளவு அதிகரிக்கும் என்பதை இங்கு பார்க்கலாம். 

2016ஆம் ஆண்டு முதல் 7வது ஊதிய குழுவின் பரிந்துரைகளை பின்பற்றி தற்போது சம்பள மற்றும் ஓய்வூதியம் நடைமுறையில் உள்ளது. 8வது ஓய்வூதிய குழுவின் உருவாக்கத்துடன் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் முற்றிலுமாக மாறுபடும். 

சம்பள உயர்வின் சதவீதம் வெளியிடப்படவில்லை. இருப்பினும் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை தீர்மானிக்கும் பிட்மெண்ட் காரணியின் மதிப்பு வெளியாகி உள்ளது. இது 2.57ல் இருந்து 2.86ஆக உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மேலும் படிங்க: டெல்லி தேர்தல் 2025: AAP VS BJP - அதி முக்கியமான 5 தொகுதிகள்... ஸ்டார் வேட்பாளர்கள் யார் யார்?

எவ்வளவு உயரும்

அப்படி நடக்கும் பட்சத்தில் அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம் ரூ.18000ல் இருந்து ரூ.51480 ஆக உயரக்கூடும். 7வது ஊதிய குழுவின் ஃபிட்மெண்ட் காரணி 2.57ஆக இருப்பதால் மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.7,000-த்தில் இருந்து ரூ.18,000ஆக உயரத்தப்பட்டது. 

இந்த நிலையில் தான் 8வது ஊதியக்குழுவில் பிட்மெண்ட் காரணி 2.86ஆக உயரும் என கூறப்படுகிறது.  இதன்படி மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 இருந்து 51,480ஆக உயரும். அதேபோல் ஓய்வூதியத் தொகையும் ரூ.9,000 இருந்து ரூ.25,740ஆக உயரக்கூடும். 

சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வுகள் எப்படி கணக்கிடப்படுகிறது 

சம்பளம் மற்றும் ஓய்வூதிய உயர்வுகளை நிர்ணயிப்பதில் ஃபிர்மெண்ட் காரணி முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போதைய குறைந்தபட்ச சம்பளம் அல்லது ஓய்வூதியத் தொகையை தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபிட்மெண்ட் காரணியால் பெருக்குவதன் மூலம் இது கணக்கிடப்படுகிறது. 

8வது சம்பளக் குழுவின் கீழ் சம்பள உயர்வுகளின் சரியான சதவீதம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஃபிட்மெண்ட் காரணி 2.86ஆக உயரும் என்பது வெளியான தகவலே. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும் படிங்க: NPS to UPS Transfer Rules: இந்த ஓய்வூதியதாரர்களுக்கு PPF வட்டி விகிதத்தின்படி அரியர் தொகை கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News