Today Horoscope In Tamil: தை மாதம் 23ஆம் நாளான இன்று (பிப். 5) 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும், நல்ல நேரம், இன்றைய பஞ்சாங்கம் ஆகியவற்றை இதில் காணலாம்.
Daily Raasipalan In Tamil: இன்று தை மாதம், 23ஆம் தேதி புதன்கிழமை (பிப். 5) குரோதி வருடம். சுபமான காலம்: அமிர்த காலம் - மதியம் 3:59 முதல் மாலை 5:30 வரை; பிரம்மா முகூர்த்தம் - காலை 05:06 முதல் காலை 05:54 வரை. அசுபமான காலம்: இராகு - மதியம் 12:33 முதல் மதியம் 2:01 வரை; எமகண்டம் - காலை 8:10 முதல் காலை 9:38 வரை; குளிகை - காலை 11:06 முதல் காலை 12:33 வரை; துரமுஹுர்த்தம் - மதியம் 12:10 முதல் மதியம் 12:57, தியாஜ்யம் - காலை 06:54 முதல் காலை 08:25 வரை. சூரியோதயம் - காலை 6:43, சூரியஸ்தமம் - மாலை 6:24. வாரசூலை: சூலம் - வடக்கு, பரிகாரம் - பால். இன்று கீழ் நோக்கு நாள் மற்றும் வளர்பிறை ஆகும். வாருங்கள் இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
பொறுப்புத் துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
மேஷம்: பத்திரம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் நிமித்தமாக முதலீடுகளில் கவனத்துடன் செயல்படவும். காலம் தவறி உணவு உண்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் பழைய சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். பொறுமை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் அஸ்வினி : சிந்தித்துச் செயல்படவும். பரணி : கவனம் வேண்டும். கிருத்திகை : அனுசரித்துச் செல்லவும்.
ரிஷபம்: பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். மற்றவர்களுக்கு உதவும் போது சிந்தித்துச் செயல்படவும். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். ஆடம்பரப் பொருட்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பணிகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். ஆக்கப்பூர்வமான நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் கிருத்திகை : புரிதல் ஏற்படும். ரோகிணி : அனுகூலமான நாள். மிருகசீரிஷம் : விழிப்புணர்வு வேண்டும்.
மிதுனம்: இணையம் தொடர்பான துறைகளில் திறமைகள் வெளிப்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சேமிப்பை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அலுவலகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் நினைத்தது நிறைவேறும். ஆதரவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம் மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும். திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும். புனர்பூசம் : ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்: மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் சிந்தித்துச் செயல்படவும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். நலம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் புனர்பூசம் : புத்துணர்ச்சியான நாள். பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும் ஆயில்யம் : புரிதல்கள் மேம்படும்.
சிம்மம்; வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். வெளியூர் பணி நிமித்தமான முயற்சிகள் கைகூடும். இறை சார்ந்த பயணங்கள் சாதகமாக அமையும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பக்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம் மகம் : பொறுமை வேண்டும். பூரம் : முயற்சிகள் கைகூடும். உத்திரம் : திறமைகளை வெளிப்படுத்துவீர்கள்.
கன்னி: அக்கம், பக்கம் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். பணியில் மறைமுகமான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணம் மூலம் உடலில் சோர்வுகள் உண்டாகும். குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். பணிகளில் திறமைக்கான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். தாமதம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம் உத்திரம் : அனுசரித்துச் செல்லவும். அஸ்தம் : பொறுமையுடன் செயல்படவும். சித்திரை : மதிப்புகள் தாமதமாகும்.
துலாம்: நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் லாபங்கள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். கலைத் துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். தம்பதிகளுக்குள் நெருக்கம் மேம்படும். தவறிப் போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். வர்த்தகப் பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். போட்டிகள் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு நிறம் சித்திரை : மகிழ்ச்சியான நாள். சுவாதி : முன்னேற்றமான நாள். விசாகம் : சாதகமான நாள்.
விருச்சிகம்: திடீர் தன வரவுகள் உண்டாகும். நண்பர்களுடன் அனுசரித்துச் செல்லவும். சுபகாரியங்களை முன் நின்று செய்வீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். பணிபுரியும் இடத்தில் மதிப்புகள் உண்டாகும். நினைத்ததை செய்து முடிப்பதற்கான சூழல் அமையும். அரசுப் பணிகளில் ஆதாயம் ஏற்படும். வாழ்வு நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை நிறம் விசாகம் : வரவுகள் உண்டாகும். அனுஷம் : ஒத்துழைப்பு மேம்படும். கேட்டை : ஆதாயகரமான நாள்.
தனுசு: மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாசனை திரவியங்கள் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். எழுத்து தொடர்பான துறைகளில் கற்பனை வளம் அதிகரிக்கும். இணைய பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உருவாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் மூலம் : நுட்பங்களை அறிவீர்கள். பூராடம் : லாபங்கள் மேம்படும். உத்திராடம் : மேன்மையான நாள்.
மகரம்: உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். மனை தொடர்பான பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வும் அதற்கான உதவியும் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வாக்குவாதங்கள் குறையும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் உத்திராடம் : செல்வாக்கு அதிகரிக்கும். திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும். அவிட்டம் : அனுபவம் கிடைக்கும்.
கும்பம்: வெளிவட்டத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பழைய நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். கடன்களை அடைப்பதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உறவுகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். திட்டமிட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். தன்னம்பிக்கை நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம் அவிட்டம் : மதிப்புகள் அதிகரிக்கும். சதயம் : சந்திப்புகள் ஏற்படும். பூரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும்.
மீனம்: நண்பர்களிடத்தில் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவுகள் ஏற்படும். நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் வரவுகள் சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் மதிப்புகள் மேம்படும். மனதளவில் புதிய நம்பிக்கை உருவாகும். மாற்றம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம் பூரட்டாதி : மனக்கசப்புகள் நீங்கும். உத்திரட்டாதி : அறிமுகம் ஏற்படும். ரேவதி : நம்பிக்கை பிறக்கும்.