Delhi Election 2025: டெல்லியில் இங்குதான் அதிக வாக்குப்பதிவு... காரணம் என்ன?

Delhi Assmebly Election 2025: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப். 5) நடைபெற்று வரும் சூழலில், 2020இல் கலவரம் நடந்த பகுதியில் அதிக வாக்குகள் பதிவாகி உள்ளன. இதுகுறித்து இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 5, 2025, 01:19 PM IST
  • காலை 11 மணி நிலவரப்படி, 19.95% வாக்குகளே பதிவாகி உள்ளன.
  • 2020இல் நடந்த கலவரத்தில் 54 பேர் உயிரிழந்தனர்.
  • இதில் 40 பேர் சிறுபான்மையினர் ஆவர்.
Delhi Election 2025: டெல்லியில் இங்குதான் அதிக வாக்குப்பதிவு... காரணம் என்ன? title=

Delhi Assmebly Election 2025 Latest News Updates: டெல்லி சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று (பிப். 5) காலை 7 மணிக்கு தொடங்கி தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும்.

மேலும், வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு மாலை 6 மணிக்குள் வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். அவர்கள் முழுமையாக வாக்களிக்க வாய்ப்பளிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள 70 தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிப். 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும். 

Delhi Assmebly Election 2025: எங்கு அதிகம்...? எங்கு குறைவு...?

காலை 11 மணி நிலவரப்படி 19.95% வாக்குகளே பதிவாகி உள்ளன. மேலும், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்படி, டெல்லி வடகிழக்கு மாவட்டத்தில்தான் மற்ற பகுதிகளை விட அதிக வாக்குகள் பதிவாகி உள்ளது, அங்கு காலை 11 மணிவரை 24.87% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதையடுத்து, ஷாஹ்தாரா மாவட்டத்தில் 23.30% வாக்குகளும் பதிவாகி உள்ளன. அதே நேரத்தில் குறைந்தபட்சமாக மத்திய மாவட்டத்தில்தான் 16.46% வாக்குகள் பதிவாகி உள்ளன.

மேலும் படிக்க | Live: டெல்லி சட்டப்பேரவை தேர்தல்... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - உடனடி தகவல்கள்

Delhi Assmebly Election 2025: காலை 11 மணி நிலவரம் 

தேர்தல் ஆணையத்தின்படி, தென்மேற்கு மாவட்டத்தில் 21.90% வாக்குகளும், புதுடெல்லி மாவட்டத்தில் 18.63% வாக்குகளும், கிழக்கு மாவட்டத்தில் 20.03% வாக்குகளும், வடக்கு மாவட்டத்தில் 18.63% வாக்குகளும், வடமேற்கு மாவட்டத்தில் 19.75% வாக்குகளும், தெற்கு மாவட்டத்தில் 19.75% வாக்குகளும், தென்கிழக்கு மாவட்டத்தில் 19.66% வாக்குகளும், மேற்கு மாவட்டத்தில் 17.67 வாக்குகளும் பதிவாகி உள்ளன. அதாவது இவையெல்லாம் 11 மணி நிலவரம்தான். அடுத்த கட்ட நிலவரம் மதியம் 1 மணிக்கு வரும்.

மேலும் படிக்க | டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025: முக்கிய தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியல்!

Delhi Assmebly Election 2025: 2020 கலவரம் நடந்த பகுதியில் அதிக வாக்குப்பதிவு

இதில் அதிக வாக்குகள் பதிவாகியிருக்கும் வடகிழக்கு மாவட்டத்தில்தான் கடந்த 2020ஆம் ஆண்டு சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின் போது பெரும் கலவரம் வெடித்தது. 2020ஆம் ஆண்டில் பிப். 23ஆம் தேதி வடகிழக்கு டெல்லி மாவட்டத்தில் நடந்த கலவரத்தில் இஸ்லாமிய மக்கள் மீது இந்து அமைப்புகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது, எதிர் தாக்குதல்களும் நடந்தன. இதில் மொத்தம் 54 பேர் உயிரிழந்த நிலையில், அதில் 40 பேரும் சிறுபான்மையினர்  ஆவார். இந்த மாவட்டத்தில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகமாகும். இந்நிலையில், தற்போது அங்கு அதிகமான வாக்குகள் பதிவாகி வருவது டெல்லி அரசியல் களத்தில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. 

Delhi Assmebly Election 2025: வாக்களித்த அரசியல் தலைவர்கள்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர், டெல்லி முதலமைச்சர் அதிஷி மெர்லினா, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர், டெல்லி துணை நிலை ஆளுநர் எல்ஜி சக்சேனா, முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், பிரபலங்கள் இன்று வாக்கு செலுத்தினர். 

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுடன் இன்று உத்தர பிரதேசத்தின் மில்கிபூர் சட்டப்பேரவை தொகுதிக்கும், தமிழ்நாட்டின் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 11 மணி நிலவரப்படி மில்கிபூரில் 29.86% மற்றும் ஈரோட்டில் 26.03% வாக்குகளும் பதிவாகி உள்ளன.

மேலும் படிக்க | அரசு அங்கன்வாடியில் பிரியாணி கேட்ட குழந்தை-உடனே பதிலளித்த அமைச்சர்! வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News