Unified Pension Scheme: மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டு மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. தேசிய ஓய்வூதிய முறையை (NPS) மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியததாரர்களின் தரப்பில் இருந்து வந்த நிலையில், அரசாங்கம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) அமல்படுத்தியது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று இந்த ஆண்டு தொடக்கத்தில் அரசாங்கம் அறிவித்தது.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்
தேசிய ஓய்வூதிய அமைப்பில் (National Pension System) ஏற்கனவே சேர்ந்துள்ள தகுதியுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு UPS ஒரு விருப்பமாக கிடைக்கும். தாங்கள் இறுதியாக பெற்ற சம்பளத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவதை உறுதி செய்யும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) மீண்டும் செயல்படுத்துமாறு அரசு ஊழியர்களிடமிருந்து தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதிய முறையின் அம்சங்களை இணைத்து UPS கொண்டுவரப்பட்டுள்ளது.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய யுபிஎஸ் அம்சங்கள்
- UPS திட்டத்தில் அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளம், அகவிலைப்படியில் 10%, -ஐ பங்களிப்பார்கள்.
- அரசின் பங்களிப்பு முன்பு இருந்த 14% இலிருந்து 18.5% ஆக அதிகரிக்கும்.
- இது தவிர, அரசாங்கத்தின் கூடுதல் 8.5 சதவீத பங்களிப்புடன் ஆதரிக்கப்படும் ஒரு தனி தொகுப்பு நிதியும் இருக்கும்.
- NPS இல் ஏற்கனவே சேர்ந்துள்ள தகுதியுள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு UPS ஒரு விருப்பமாக கிடைக்கும்.
- இந்த வகையில், UPS திட்டத்தின் மூலம் ஊழியர்களுக்கு அவர்கள் கடைசியாக பணியாற்றிய 12 மாதங்களின் சராசரி அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதத்திற்கு சமமான தொகை ஓய்வூதியமாக வழங்கப்படுகின்றது.
- இருப்பினும், இந்த நன்மை குறைந்தது 25 ஆண்டுகள் சேவையை முடித்த அரசு ஊழியர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- 10 முதல் 25 ஆண்டுகள் சேவைக்காலம் கொண்ட ஊழியர்கள் விகிதாசார அடிப்படையில் ஓய்வூதியத் தொகையைப் பெறுவார்கள்.
- துரதிர்ஷ்டவசமாக அரசு ஊழியர் இறந்தால், குடும்ப உறுப்பினர்கள் ஓய்வூதியத்தில் 60 சதவீதத்தைப் பெறுவார்கள்.
- இதில் பணிஓய்வு சலுகைகளும் கிடைக்கின்றது.
- பணிக்கொடைக்கு கூடுதலாக, ஓய்வு பெறும்போது ஒரு மொத்த தொகையும் யுபிஎஸ் -இல் வழங்கப்படுகிறது.
- குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களுக்கு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.10,000 ஓய்வூதியம் வழங்கப்படும்.
- குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சேவையை முடித்த பிறகு தானாக முன்வந்து ஓய்வு பெறத் தேர்வுசெய்யும் ஊழியர்களும், உண்மையான ஓய்வு வயதிலிருந்து ஓய்வூதியம் பெறத் தகுதியுடையவர்களாவார்கள்.
- யுபிஎஸ் செயல்படுத்தப்படுவதற்கு முன்பு ஓய்வு பெற்ற NPS இன் முன்னாள் ஓய்வூதியதாரர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் சலுகைகளைப் பெறலாம்.
- பொது வருங்கால வைப்பு நிதி விகிதங்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட வட்டியுடன் அவர்களுக்கு முந்தைய காலத்திற்கான நிலுவைத் தொகை வழங்கப்படும்.
ஏப்ரல் 1 முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வரவுள்ள நிலையில், இந்த ஓய்வூதியத் திட்டம் தொடர்பான இன்னும் பல தகவல்களை அரசு வரும் வாரங்களில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் படிக்க | டென்ஷன் இல்லா ஓய்வு காலத்திற்கு... LIC அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட் பென்ஷன் திட்டம்..
மேலும் படிக்க | PM Kisan 19வது தவணை எப்போது வரும்? எப்படி செக் செய்வது? முக்கிய அப்டேட் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ