ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பால்... வீட்டு கடன் வட்டி விகிதத்தை குறைத்த சில வங்கிகள்

வீட்டுக் கடன் வட்டி விகிதம்: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்த பிறகு, வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டியைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. இப்போது நாட்டின் 6 பெரிய வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டியைக் குறைத்துள்ளன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 13, 2025, 11:54 AM IST
  • சில வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டியைக் குறைத்துள்ளன.
  • கடந்த 2 ஆண்டுகளில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லாத நிலையில், இப்போது குறைக்கப்பட்டுள்ளது.
  • வாடிக்கையாளர்கள் தங்கள் EMI தொகையை குறைக்கலாம் அல்லது கடன் காலத்தைக் குறைக்கலாம்.
ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பால்... வீட்டு கடன் வட்டி விகிதத்தை குறைத்த சில வங்கிகள் title=

வீட்டுக் கடன் வட்டி விகிதம்: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தைக் குறைத்த பிறகு, வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டியைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. இப்போது நாட்டின் 6 பெரிய வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டியைக் குறைத்துள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2025, பிப்ரவரி 7ம் தேதியன்று  நடத்திய  நிதிக் கொள்கைக் குழு (MPC) கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.25% குறைத்தது. இதன் காரணமாக ரெப்போ விகிதம் 6.25 சதவீதமாக குறைந்துள்ளது. 

கடந்த 2 ஆண்டுகளில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லாத நிலையில், இப்போது குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்குப் பிறகு, பெரும்பாலான வீட்டுக் கடன் வாங்குபவர்கள் வங்கிகள் வீட்டுக் கடன் விகிதங்களைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். 

ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) ரெப்போ விகித குறைப்பு முடிவுக்குப் பிறகு, நாட்டின் 6 வங்கிகள் வீட்டுக் கடனுக்கான வட்டியைக் குறைத்துள்ளன. கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பாங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட பல வங்கிகளும் தங்களது ரெப்போ லிங்க்ட் லெண்டிங் ரேட்டை (RLLR) 0.25% குறைத்துள்ளன.

ரெப்போ இணைக்கப்பட்ட கடன் விகிதம் (RLLR) என்றால் என்ன?

ரெப்போ இணைக்கப்பட்ட கடன் விகிதம் என்பது வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் விகிதமாகும். இந்த விகிதம் நேரடியாக ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதத்துடன் தொடர்புடையது. 2019 அக்டோபர் மாதத்தில், ரிசர்வ் வங்கி வங்கிகள் தங்கள் சில்லறை கடன்களை வெளிப்புற பெஞ்ச்மார்க் விகிதத்துடன் (E-BLR) இணைக்குமாறு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. இது பெரும்பாலான வங்கிகளுக்கு ரெப்போ விகிதத்தை முக்கிய அளவுகோலாக மாற்றியுள்ளது. 

RLLR விகிதங்களுடன் இணைக்கப்பட்ட வீட்டுக் கடன்களைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு, RBI ரெப்போ விகிதத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப அவர்களின் வட்டி விகிதங்கள் அதிகரிக்கும் அல்லது குறையும். பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மிதக்கும் வீத வீட்டுக் கடன்களை எடுக்கின்றனர், அவை RLLR உடன் இணைக்கப்பட்டுள்ளன. இப்போது வாடிக்கையாளர்கள் தங்கள் EMI ஐக் குறைக்கலாம் அல்லது கடன் காலத்தைக் குறைக்கலாம்.

மேலும் படிக்க | மக்களவையில் தாக்கல் செய்யப்படும் புதிய வருமான வரி மசோதா.. அதன் சிறப்பம்சங்கள்!

வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்த வங்கிகள்

கனரா வங்கி

கனரா வங்கி தனது RLLR விகிதத்தை  9.25% லிருந்து 9.00% ஆக குறைத்துள்ளது. இந்த புதிய விகிதம் பிப்ரவரி 12, 2025 முதல்  அமலாகிறது. பிப்ரவரி 12, 2025 அன்று அல்லது அதற்குப் பிறகு திறக்கப்படும் கணக்குகளுக்கு மட்டுமே இது பொருந்தும். அல்லது RLLR அமைப்பில் 3 ஆண்டுகள் முடித்திருக்க வேண்டும்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) அதன் RLLR விகிதத்தை  25 அடிப்படை புள்ளிகள் குறைத்து, 9.35% என்ற அளவிலிருந்து 9.10% ஆகக் குறைத்துள்ளது. இந்த மாற்றம் பிப்ரவரி 11, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா

பேங்க் ஆஃப் பரோடா அதன் பரோடா ரெப்போ லிங்க்டு லெண்டிங் ரேட்டை (RLLR) 8.90% ஆக மாற்றியுள்ளது, இது பிப்ரவரி 10, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.

பேங்க் ஆஃப் இந்தியா

பேங்க் ஆஃப் இந்தியா தனது RLLR விகிதத்தை 9.35%  என்ற அளவிலிருந்து 9.10% ஆக குறைத்துள்ளது. இந்த விகிதம் 7 பிப்ரவரி 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தனது RLLR விகிதத்தை 9.25% என்ற அளவிலிருந்து 9.00% ஆக குறைத்துள்ளது. இந்த விகிதம் 11 பிப்ரவரி 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB)

PNB தனது RLLRஐ 9.25% என்ற அளவிலிருந்து 9.00% ஆக குறைத்துள்ளது. இந்த விகிதம் 10 பிப்ரவரி 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது.

வீட்டுக் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் பலன்கள்

ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதக் குறைப்புக்குப் பிறகு வங்கிகளின் RLLR குறைப்பால் வீட்டுக் கடன் வாடிக்கையாளர்கள் நிவாரணம் பெறுவார்கள். இது புதிய வீட்டுக் கடன்களை குறைந்த வட்டியில் வாங்கலாம். அதோடு, ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களின் EMI குறையலாம். வாடிக்கையாளர்கள் விரும்பினால், EMI தொகையை குறைக்காமல் அவர்கள் கடன் காலத்தைக் குறைக்கலாம்.

மேலும் படிக்க |  வருமான வரியை சேமிக்கணுமா? பலருக்கு தெரியாத 4 வழிகள் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News