Gallblader Stones: உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் கற்கள் உருவாகும் பிரச்சனை ஏற்படலாம். ஆனால் பித்தப்பையில் கற்கள் இருப்பது ஒரு கடுமையான பிரச்சனையாக கருதப்படுகின்றது. பெரும்பாலான மக்கள் கடுமையான வலியை அனுபவிக்கும் வரை தங்களுக்கு கற்கள் இருப்பதை உணர்வதில்லை.
பித்தப்பையில் உள்ள கற்கள் சிறியதாகவும் மிகவும் கடினமாகவும் இருக்கும். கல் சிறியதாக இருந்தால், அது தானாகவே உடலில் இருந்து வெளியேறிவிடும். இது பித்த நாளத்தின் வழியாக குடலை அடைந்து பின்னர் உடலை விட்டு வெளியேறலாம். இருப்பினும், கல் பித்த நாளத்தில் சிக்கிக்கொண்டால், நிலை மோசமடையக்கூடும்.
சில உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது பித்தப்பைக் கற்கள் உருவாகும் வாய்ப்புகளைக் குறைக்கும். அந்த உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது பித்தப்பைக் கற்கள் உருவாவதைத் தடுக்கிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரைக் குடிப்பது பித்தப்பைக் கற்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். மேலும் எலுமிச்சை நீரை உட்கொள்வது உடல் பருமனைக் குறைப்பது மட்டுமல்லாமல், செரிமானம் தொடர்பான பிரச்சினைகளையும் போக்க உதவும்.
பீட்ரூட் சாறு
பீட்ரூட்டில் நார்ச்சத்து மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் பித்தப்பையின் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது. தினமும் ஒரு கப் பீட்ரூட் சாறு குடிப்பது மிகவும் நன்மை பயக்கும்.
முள்ளங்கி சாறு
முள்ளங்கி சாறு குடிப்பதால் உடலில் உள்ள கொழுப்பு குறைகிறது. முள்ளங்கி சாறு பித்தப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. எனவே உணவில் அவ்வப்போது முள்ளங்கி சாற்றை சேர்ப்பது நல்லது.
மஞ்சள்
மஞ்சள் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிஆக்சிடெண்ட் பண்புகளைக் கொண்டுள்ளது. இது பித்தத்தின் கரைதிறனை அதிகரிக்கிறது.இதனால் கல் உருவாகும் அபாயம் குறைகிறது. உங்கள் உணவில் பச்சை மஞ்சளைச் சேர்ப்பது பல வித ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும்.
சிறிய கற்கள் வெளியே வரக்கூடும்
பித்தப்பையிலிருந்து 5 மிமீ அல்லது அதற்கும் குறைவான கற்களை அகற்றலாம். எனினும் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகுதான் பித்தப்பையிலிருந்து கற்கள் வெளியே வருவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். 6 மிமீ அல்லது அதற்கு மேற்பட்ட கற்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும். பித்தப்பையில் கற்கள் இருந்தால், மருத்துவரை அணுகாமல் எதையும் செய்ய வேண்டாம்.
பித்தப்பையில் இருந்து கற்களை அகற்றுவதற்கான உறுதியான வழி அறுவை சிகிச்சை ஆகும். பெரும்பாலான மக்களுக்கு கற்களின் அளவு 6 மிமீ அல்லது அதற்கு மேல் ஆனபின்தான் அதை பற்றி தெரிகிறது. அத்தகைய சூழ்நிலையில், உடலில் இருந்து கல்லை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஆஸ்டியோரோசிஸ் முதல் பிபி வரை... அளவிற்கு அதிக காபி ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ