Kalaingar Magalir Urimai Thogai | தமிழ்நாடு பட்ஜெட் 2025-ல் கலைஞர் உரிமைத் தொகை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது.
இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இதில் கலைஞர் உரிமைத் தொகை (Kalaignar Magalir Urimai Thogai) தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது. அது என்ன? என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்....
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறது.
அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்கு முன்னதாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் என்பதால் இதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக பெண்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Thogai) விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்புள்ளது.
இது குறித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். அடுத்த மூன்று மாதங்களுக்குள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என கூறியிருந்தார்.
அந்த அறிவிப்பு இந்த பட்ஜெட் கூட்டத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக எத்தனை பயனாளிகள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என அவர் அறிவிக்க உள்ளார்.
அதேபோல், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விதிமுறைகளிலும் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது.
ஏற்கனவே சுமார் ஒரு லட்சம் பயனாளிகள் இந்த திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். அதற்கு காரணம் என்னவென்றால் இறப்பு, போலி தகவல்கள் உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாக வைத்து பயனாளிகள் நீக்கப்பட்டிருக்கின்றனர்.
அவர்களுக்கு பதிலாக புதிய பெண் பயனாளிகள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். அதிகபட்சம் ஒரு லட்சம் மகளிர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர்க்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.
எனவே, இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்காதவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது ரேஷன் கார்டு, புகைப்படம், ஆதார் கார்டு ஆவணங்கள் கொடுக்க வேண்டும்.