இந்திய ராணுவத்தில் ஆட் சேர்ப்பு முகாம் : இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Indian Army Recruitment | காஞ்சிபுரத்தில் நடக்கும் இந்திய ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 12, 2025, 03:37 PM IST
  • இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு முகாம்
  • காஞ்சிபுரத்தில் 15 ஆம் தேதி வரை நடக்கிறது
  • இந்திய ராணுவம் சார்பில் முக்கிய அறிவிப்பு
இந்திய ராணுவத்தில் ஆட் சேர்ப்பு முகாம் : இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு title=

Indian Army Recruitment Kanchipuram | இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் காஞ்சிபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சேர்ப்பு பேரணியில் சிப்பாய், மருத்துவ உதவியாளர் பணிக்காலியிடங்களுக்கு 2024 பிப்ரவரி மாதத்தில் வெளியான அறிவிக்கை வாயிலாக நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இளைஞர்கள் இது குறித்து முழு விவரங்களையும் முழுமையாக தெரிந்து கொண்டு காஞ்சிபுரம் ஆட்சேர்ப்பு முகாமுக்கு செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

இது குறித்து திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த தவலை தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு பேரணி இந்திய இராணுவப் படையினரால் 05.02.2025 முதல் 15.02.2025 வரை இந்திய இராணுவத்தில் சேர்வதற்கான ஆட்சேர்ப்பு பேரணி, காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பேரறிஞர் அண்ணா விளையாட்டுத் திடலில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆட்சேர்ப்பு பேரணியில் சிப்பாய், மருத்துவ உதவியாளர் பணிக்காலியிடங்களுக்கு 2024 பிப்ரவரி மாதத்தில் வெளியான அறிவிக்கை வாயிலாக நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட மாணவர்கள் உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இம்முகாமில் கலந்துகொள்ள தங்களது அனுமதிச்சீட்டு, கல்விச்சான்றுகள், உறுதிமொழி ஆவணம், காவல்துறை நன்னடத்தைச் சான்று, பள்ளி நன்னடத்தைச் சான்று, கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்படும் நன்னடத்தைச் சான்று மற்றும் புகைப்படத்துடன் கூடிய திருமணமாகாத சான்று, சாதிச்சான்று, மதச்சான்று, இருப்பிடச்சான்று, கடந்த மூன்று மாதத்திற்குள் எடுக்கப்பட்ட சமீபத்திய கடவுச்சீட்டு அளவுள்ள புகைப்படம், தேசிய மாணவர் படைச் சான்று, விளையாட்டு வீரர் சான்று, ஆதார் அட்டை மற்றும் பான்கார்டு ஆகியவற்றை உடன் கொண்டுவர வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இந்திய இராணுவத்தின் இணையதளத்தை பார்வையிடவும்.

இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 0431-2413510, 94990-55901 & 94990-55902 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. எனவே இளைஞர்கள் தங்களுக்கு தேவையான விளக்கங்களை தெரிந்து கொண்டு காஞ்சிபுரம் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க  | Budget 2025: வரி விலக்கு முதல் வேலை வாய்ப்பு வரை... நடுத்தர மக்களை மகிழ்விக்கும் அறிவிப்புகள் இருக்குமா?

மேலும் படிக்க | தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு குட்நியூஸ்! அரசு நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News