EPFO Update: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் உள்ளது. இன்னும் 3 நாட்களுக்குள் ஊழியர்கள் ஒரு முக்கியமான பணியை செய்துமுடிக்க வேண்டும். இதை செய்யாவிட்டால், பல திட்டங்களின் பலன்கள் கிடைக்காமல் போவதுடன் இவர்கள் சில பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரிடலாம். இபிஃப் உறுப்பினர்களுக்கான முக்கிய புதுப்பிப்பை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPFO: ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு
ஊழியர்கள் யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) ஆக்டிவேட் செய்து, அதாவது செயல்படுத்தி, ஆதார் மற்றும் வங்கிக் கணக்குகளுடன் இணைப்பதற்கான காலக்கெடு நெருங்கி வருகிறது. முன்னர் ஜனவரி 15 இதற்கான கடைசி தேதியாக இருந்த நிலையில், சமீபதில் இது பிப்ரவரி 15 வரை நீட்டிக்கப்பட்டது. இந்த காலக்கெடுவிற்குள் இந்த செயல்முறையை செய்து முடிக்குமாறு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்களை வலியுறுத்தி வருகிறது.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு இது ஏன் அவசியம்?
வருங்கால வைப்பு நிதி (PF) கணக்கின் மேலாண்மை, பணம் எடுப்பது மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான சலுகைகள் உள்ளிட்ட EPFO சேவைகளை தடையின்றி அணுகுவதற்கு இந்த பணியை செய்வது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
EPFO ELI UAN Activation Deadline
முதலில் யுஏஎன் எண்ணை ஆக்டிவேட் செய்து, ஆதார் வங்கிக்கணக்குடன் இணைப்பதற்கான காலக்கெடு ஜனவரி 15 ஆம் தேதியாக இருந்தது. எனினும். அனைத்து ஊழியர்களும் இந்த பணியை செய்து முடிக்க ஏதுவாக, இந்த காலக்கெடு, ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டது. காலக்கெடு இப்போது வேகமாக நெருங்கி வரும் நிலையில், இன்னும் தங்கள் UAN-ஐ இணைக்காதவர்கள் சேவை இடையூறுகளைத் தவிர்க்க விரைவில் செயல்பட்டு இந்த பணியை செய்துமுடிக்க வேண்டும்.
EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்கள் இதை ஏன் செய்ய வேண்டும்?
யுனிவர்சல் கணக்கு எண் (UAN) என்பது அனைத்து EPFO உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்படும் 12 இலக்க அடையாளங்காட்டியாகும். இது வாழ்நாள் முழுவதும் PF கணக்கு குறிப்பாக செயல்படுகிறது. பல்வேறு வேலைகளை மாற்றினாலும், அனைத்து நிறுவனங்களின் இபிஎஃப் கணக்குகளிலும் இது மாறாமல் அப்படியேதான் இருக்கும். ஆதார் மற்றும் வங்கி விவரங்களுடன் UAN-ஐ செயல்படுத்துவதும் இணைப்பதும் மிக அவசியம். இதன் முக்கிய பயன்பாடுகள் இதோ:
- PF Account: எளிதான ஆன்லைன் PF கணக்கு மேலாண்மை
- PF Balance: PF இருப்பு மற்றும் பாஸ்புக் பதிவிறக்கங்களுக்கான அணுகல்
- PF Withdrawal: சிக்கலற்ற முறையில் PF கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம், கணக்குகளை டிரான்ஸ்ஃபர் செய்யலாம்.
- Employment Linked Incentives: க்ளெய்ம்கள் மற்றும் வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத் திட்டங்களை எளிதாக டிராக் செய்யலாம்.
இந்த செயல்முறையை செய்து முடிக்கத் தவறினால் EPFO நன்மைகளை அணுகுவதில் தாமதங்கள் ஏற்படலாம், அல்லது, கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.
How to Activate Your UAN: உங்கள் UAN-ஐ செயல்படுத்துவது எப்படி:
இன்னும் தங்கள் UAN-ஐ ஆக்டிவேட் செய்யாதவர்கள் இந்த செயல்முறையை பின்பற்றி EPFO போர்டல் மூலம் ஆன்லைனில் இதை செய்யலாம்.
- முதலில் unifiedportal-mem.epfindia.gov.in இல் உள்ள EPFO போர்ட்டலுக்கு செல்லவும்.
- ‘Important Links’ பிரிவில் இருந்து 'Activate UAN' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- UAN, ஆதார் எண், பெயர், பிறந்த தேதி மற்றும் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் ஆகிய உங்கள் EPFO விவரங்களை உள்ளிடவும்.
- உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP பெற ‘Get Authorization PIN’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் UAN-ஐ செயல்படுத்த OTP-ஐச் சரிபார்க்கவும்.
- EPFO சேவைகளை அணுக உங்களுக்கு ஒரு பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் கிடைக்கும்.
- UAN செயல்படுத்தப்பட்டதும், ஊழியர்கள் லாக் இன் செய்து தங்கள் ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை இணைத்து செயல்முறையை முடிக்கலாம்.
காலக்கெடுவைத் தவறவிட்டால் என்ன நடக்கும்?
பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் UAN செயல்படுத்தல் மற்றும் ஆதார் இணைப்பை முடிக்கத் தவறினால்:
- EPFO சேவைகளுக்கான அணுகல் கட்டுப்படுத்தப்படலாம்.
- PF கணக்கில் உள்ள பணத்தை எடுப்பது மற்றும் கணக்கு பரிமாற்றங்களில் தாமதம் ஏற்படலாம்.
- வேலைவாய்ப்பு தொடர்பான சலுகைகளுக்குத் தகுதிபெறாமல் போகலாம்.
இந்தப் சிக்கல்களைத் தவிர்க்க, காலக்கெடுவிற்கு முன்பே ஊழியர்கள் தங்கள் விவரங்கள் புதுப்பிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | PPF vs SIP: வருடத்திற்கு ரூ.9,500 முதலீடு செய்தால்... எதில் அதிக வருவாய் வரும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ