Kalaingar Magalir Urimai Thogai | ரேஷன் கார்டு முகவரி முறைப்படி மாற்றுபவர்களுக்கும் கலைஞர் உரிமைத் தொகை நிறுத்தப்படுமா? என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
கலைஞர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) வாங்குபவர்கள் ரேஷன் கார்டில் முகவரி மாற்றினால் அந்த தொகை நிறுத்தப்படுமா? என்ற கேள்வி பொதுவாக இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
கலைஞர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) பெறும் பயனாளிகளில் தகுதியில்லாதவர்களை கண்டுபிடித்து அவர்களின் பெயர்களை இந்த திட்டத்தில் இருந்து நீக்கி வருகிறது. குறிப்பாக, கலைஞர் உரிமைத்தொகை விதிமுறைகளுக்கு உட்படாதவர்களின் பெயர்கள் நீக்கப்படுகின்றன.
ரேஷன் கார்டில் ஒரு முகவரியும், வசிப்பது ஒரு முகவரியுமாக இருந்து கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுவதுடன், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் பட்டியலில் இருந்தும் பெயர்கள் நீக்கப்படும்.
அந்தவகையில் அண்மையில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இறந்தவர்கள், நன்செய், புன்செய் நிலங்கள் விதிமுறைகளுக்கு மீறி வைத்திருப்பவர்கள், வருமான வரி செலுத்தவர்கள், அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள், தவறான முகவரி கொடுத்து இந்த திட்டத்தில் பயனாளியாக இருப்பவர்கள் உள்ளிட்டோர் இந்த பெயர் நீக்கப் பட்டியலில் அடங்குவார்கள்.
எனவே, ரேஷன் கார்டு முகவரி மாற்றம் குறித்து முறைப்படி விண்ணப்பித்து மாற்றம் செய்து கொண்டால் கலைஞர் உரிமைத் தொகை நிறுத்தப்படாது. பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும்.
தகுதியற்ற பயனாளிகளுக்கு பதிலாக புதிதாக தகுதியான பயனாளிகள் விரைவில் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனர். இது குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது.
அதனால், இதுவரை கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்காதவர்கள் உரிய ஆவணங்களுடன் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். உங்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியிருந்தால் இந்த திட்டத்தில் பயனாளியாக சேர்க்கப்படுவீர்கள்.
ரேஷன் கார்டில் பெயர் இருக்கும் மகளிர் அரசின் வேறு எந்த திட்டத்திலும் ஓய்வூதியம் பெறக்கூடாது. சொந்தமாக கார் உள்ளிட்ட வாகனங்கள் வைத்திருக்கக்கூடாது. நன்செய் நிலங்கள் 5 ஏக்கருக்கு மேல், புன்செய் நிலங்கள் 10 ஏக்கருக்கு மேல் வைத்திருந்தால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது.