உலக அளவில், பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோய் மிகவும் பொதுவான புற்றுநோய். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 21 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என தரவுகள் கூறுகின்றன. மார்பக பகுதியில் உள்ள செல்கள், கட்டுப்பாடு இன்றி பெருகும் நிலையில் புற்றுநோய் கட்டி ஏற்படுகிறது.
கதிர்வீச்சு சிகிச்சையின் தீவிர பக்க விளைவுகள்
புற்றுநோய் ஒருபக்கம் வலிகளையும் வேதனைகளையும் கொடுக்கும் அதே நேரத்தில், அதற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சையின் தீவிர பக்க விளைவுகள் அதை இன்னும் சவாலானதாக ஆக்குகின்றன. ஆனால் தற்போது, ஐஐடி மெட்ராஸ் விஞ்ஞானிகள் மார்பக புற்றுநோய் சிகிச்சைக்கு மருந்து அளிக்க புதிய முறையை உருவாக்கியுள்ளனர். இது எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் புற்றுநோயை அகற்றும். அதற்கான காப்புரிமையும் பெற்றுள்ளார்.
பாதுகாப்பான மற்றும் மிகவும் பயனுள்ள மாற்று சிகிச்சை
புற்றுநோய் செல்களுக்கு புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்கக்கூடிய மருந்து விநியோக அமைப்புகளை வடிவமைக்க ஆராய்ச்சியாளர்கள் 'நானோ மெட்டீரியல்களின்' தனித்துவமான பண்புகளைப் பயன்படுத்தினர். இந்த கண்டுபிடிப்பு நீண்டகால சிகிச்சை முறைகளுக்கு பாதுகாப்பான மற்றும் மிகவும் பயனுள்ள மாற்று சிகிச்சை முறையை வழங்குகிறது.
ஆரோக்கியமான உயிரணுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதவை
IIT தொழில்நுட்ப கல்லூரியின் அப்ளைடு மெக்கானிக்ஸ் மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறையின் உதவிப் பேராசிரியர் ஸ்வாதி சுதாகர், நானோ கேரியர்கள் உயிரி இணக்கத்தன்மை கொண்டவை என்றும் புற்றுநோய் அல்லாத அல்லது ஆரோக்கியமான உயிரணுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதவை என்று கூறினார். எனவே, கீமோதெரபி அல்லது ரேடியேஷன் தெரபி அல்லது கீமோதெரபியூடிக் மருந்துகள் போன்ற சிகிச்சைகளுக்கு அவை சரியான மாற்றாகும். வழக்கமான கீமோதெரபியில் புற்றுநோய் செல்களைத் தாக்குவது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான செல்களையும் பாதிக்கிறது. இதனால் முடி உதிர்தல், குமட்டல், சோர்வு போன்ற கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
மேலும் படிக்க | நெய் கலந்த உணவுகளை இவர்கள் சாப்பிடவே கூடாது..! உயிருக்கே ஆபத்து..!
மார்பக புற்றுநோய் செல்கள் மீது நடத்தப்பட்ட சோதனைகள்
புற்றுநோய்க்கான மருந்தை மீண்டும் மீண்டும் எடுத்துக்கொள்வதன் மூலம், புற்றுநோய் செல்கள் கீமோதெரபியூடிக் மருந்துகளுக்கு எதிர்ப்பை உருவாக்கலாம். இது இறுதியில் சிகிச்சையின் விளைவைக் குறைக்கிறது என்று சுதாகர் கூறினார். ஆய்வகத்தில் மார்பக புற்றுநோய் செல்கள் மீது பல சோதனைகள் நடத்தப்பட்டன. இது மருந்து ஏற்றப்பட்ட நானோ ஆர்க்கியோசோம்கள் புற்றுநோய் செல்களை கொல்லத் தொடங்கின. கீமோதெரபி மருந்தின் மிகக் குறைந்த அளவுகளில் கூட கட்டிகளின் வளர்ச்சியை திறம்பட நிறுத்தியது என்று அவர் கூறினார்.
இந்திய காப்புரிமை
ஐஐடி மெட்ராஸ் மற்றும் கல்வி அமைச்சகத்தால் நிதியளிக்கப்பட்ட ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள், ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரியால் வெளியிடப்பட்ட மெட்டீரியல்ஸ் அட்வான்ஸ் மற்றும் நானோஸ்கேல் அட்வான்ஸ் உள்ளிட்ட முக்கியமான இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சிக்கு கடந்த மாதம் இந்திய காப்புரிமை வழங்கப்பட்டது.
புற்றுநோயினால் ஏற்படும் இறப்புகளை தடுக்க உதவும் சிகிச்சை
புற்றுநோய் சிகிச்சை சிகிச்சைகளை மாற்றுவதற்கும், புற்றுநோயினால் ஏற்படும் இறப்புகளை தடுப்பதற்கும், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் இந்த ஆராய்ச்சி பெரும் நம்பிக்கை கொடுத்துள்ளது என்று சுதாகர் கூறினார். எங்களின் அடுத்த கட்டம் இந்த மருந்தின் விளைவை விலங்கு மாதிரிகளில் சோதிக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ