புற்றுநோய் அபாயத்தைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விளக்கும் வகையில் பாஸ்டனின் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் விஞ்ஞானிகள் ஒரு சிறப்பு காலெண்டரைத் தயாரித்துள்ளனர. புற்றுநோய் போன்ற கொடிய நோய்களைத் தடுப்பதில் உதவியாக இருக்கும். இந்த நாட்காட்டி, அதாவது காலெண்டரை தங்கள் வீடு அல்லது அலுவலகத்தில் தினமும் பார்க்கக்கூடிய இடத்தில் வைத்து, அதில் எழுதப்பட்ட குறிப்புகளை பின்பற்றுவதை சவாலாக எடுத்துக் கொள்ளலாம்.
நாட்காட்டியில் எழுதப்பட்டுள்ள ஆரோக்கியமான பழக்கங்களை கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள் மற்றும் தவிர்க்கப்பட வேண்டிய பழக்கங்களிலிருந்து விலகி இருங்கள். இது தவிர, புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டறிய தேவையான பரிசோதனைகளை அவ்வப்போது செய்ய வேண்டும். ஏனெனில் இந்தியாவில் 80% புற்றுநோய்களில், தாமதமாக கண்டறியப்பட்டதன் காரணமாக நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. புற்று நோயை எவ்வளவு சீக்கிரம் கண்டறிகிறோமோ, அதனை குணப்படுத்துவது அந்த அளவிற்கு எளிதாக இருக்கும்.
இன்னும் சில ஆண்டுகளில் புற்றுநோய் தலைநகராக இந்தியா மாறும் என்றும் ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்போது சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது வருந்ததக்க தகவலாகும். உலக நாடுகளை விட இந்தியாவில் புற்றுநோய் அபாயம் அதிகமாக உள்ளது. இதில் 90% நுரையீரல் புற்றுநோய் கடைசி கட்டத்தில் கண்டறியப்படுகிறது, மார்பக புற்றுநோயின் எண்ணிக்கை 50%, கர்ப்பப்பை வாய் மற்றும் வாய் புற்றுநோய்களில் 70% பாதிப்புகள் முற்றிய நிலையில் கண்டறியப்படுகின்றன, இதுவே கடந்த 22 ஆண்டுகளில் 1.5 கோடிக்கும் அதிகமான புற்றுநோயாளிகள் இறந்ததற்குக் காரணம்.
புற்றுநோயைப் போன்ற எதிரியைத் தோற்கடிப்பது முக்கியம், ஆரம்பத்திலேயே அறிகுறிகளைக் கண்டறிந்தால், இந்த கொடிய நோயின் வேகத்தை வெகுவாகக் குறைக்கலாம். இருப்பினும், அறிகுறிகளை கண்டறிவது மட்டும் போதாது, இந்த சிறப்பு நாட்காட்டியில் கூறப்பட்டுள்ள நீங்கள் பின்பற்ற வேண்டும். அதோடு யோகா-ஆயுர்வேத முறைகளை பின்பற்றி, இந்தியா புற்றுநோயின் தலைநகராக மாறாமல் தடுக்க வேண்டும்.
புற்றுநோயை விலக்கி வைக்கும் பழக்கங்கள்
1. தயிர் போன்ற புரோபயோடிக் உணவுகளை உண்ணுங்கள்
2. உடல் பருமனை தடுக்க, பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டாம்
3. ஆப்பிள், பெர்ரி, டிராகன் பழம் சாப்பிடுங்கள்
4. ப்ரோக்கோலி, கேல் போன்ற காய்கறிகளை சாப்பிடுங்கள்
5. கிரீன் டீ குடிக்கவும்
6. வழக்கமான பல் பரிசோதனை அவசியம்
7. திரை நேரத்தை குறைக்கவும்
காலண்டரில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்
1. இரத்த சர்க்கரையை தொடர்ந்து கண்காணிக்கவும்
2. உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க வேண்டும்
3. காய்கறிகளை பயன்படுத்தும் முன் நன்கு கழுவவும்
4. சர்க்கரை பானங்களை தவிர்க்கவும்
5. பதப்படுத்தப்பட்ட உணவு - சிவப்பு இறைச்சி சாப்பிட வேண்டாம்
6. புகையிலை பயன்படுத்த வேண்டாம்
7. துரித உணவு சாப்பிட வேண்டாம்
8. சன்ஸ்கிரீன் பயன்படுத்தவும்
9. சூரிய ஒளி மற்றும் வைட்டமின் டி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்
10. மாதம் ஒரு முறையாவது விரதம் இருக்கவும்
காலண்டரில் எழுதப்பட்டுள்ள சில முக்கியமான விஷயங்கள்
1. படிக்கட்டுகளில் செல்லுங்கள், லிஃப்ட் எஸ்கலேட்டர் தவிர்க்கவும்
2. தினமும் 2 கிமீ நடக்க வேண்டும்
3. வீட்டை சுத்தமாக வைத்திருங்கள்
4. ஏர் ஃப்ரெஷனர்களைத் தவிர்க்கவும்
5. பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம்
6. நீண்ட நேரம் உட்காருவதை தவிர்க்கவும்
7. அதிகப்படியான இரசாயன பொருட்களை தவிர்க்கவும்
புற்றுநோய் நோயாளிகள் எண்ணிக்கை
உலகில், 2022 சுமார் 2 கோடி புற்றுநோயாளிகள் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன, 2050 (3.5 கோடிக்கு மேல்) இருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது இந்தியாவில் புற்றுநோயால், நாளொன்றுக்கு சுமார் 15 லட்சத்து 2 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். நாளொன்றுக்கு 4 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்படுகின்றனர்.
புற்றுநோய் வகைகள்
1. இரத்த புற்றுநோய்
2. சரும புற்றுநோய்
3. மார்பக புற்றுநோய்
4. கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
5. மூளை புற்றுநோய்
6. எலும்பு புற்றுநோய்
7. புரோஸ்டேட் புற்றுநோய்
8. நுரையீரல் புற்றுநோய்
9. கணைய புற்றுநோய்
புற்றுநோயின் அறிகுறிகள்
1. காரணமில்லாமல் அதிக அளவில் எடை இழத்தல்
2. திடீர் என ஏற்படும் கடுமையான மலச்சிக்கல்
3. தொடர் காய்ச்சல்
4. குரலில் மாற்றம்
5. அடிக்கடி ஏற்படும் வாய் புண்கள்
6. உடலில் கட்டி உருவாக்கம்
மேலும் படிக்க | அதிகமாக ஆயில் சேர்த்தால்... இந்த 5 பெரிய பிரச்னைகள் வரும் - ரொம்ப கவனம் மக்களே
வேகமாக வளரும் சில புற்றுநோய்
ஆண்கள் மத்தியில்
1. உணவு குழாய் புற்றுநோய் - 13.6%
2. நுரையீரல் புற்றுநோய் - 10.9%
3. வயிற்றுப் புற்றுநோய் - 8.7%
பெண்கள் மத்தியில்
1. மார்பக புற்றுநோய் - 14.5%
2. கருப்பை வாய் புற்றுநோய் - 12.2%
3. பித்தப்பை புற்றுநோய் - 7.1%
புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும் காரணிகள்
1. உடல் பருமன்
2. புகைபிடித்தல்
3. மது
4, மாசுபாடு
5. பூச்சிக்கொல்லி
6. வெயில்
புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டவை
1. கோதுமை புல்
2. கிலோய்
3. அலோ வேரா
4. வேம்பு
5. துளசி
6. மஞ்சள்
சமையலறையில் இருந்து கீழ்கண்ட 4 பொருட்களை அகற்றவும்
1. குறைந்த தரமான நான்ஸ்டிக் பாத்திரங்கள்
2. அலுமினிய பாத்திரங்கள்
3. பிளாஸ்டிக் கொள்கலன்கள்
4. அலுமினிய பாத்திரங்கள்
மேலும் படிக்க | தினமும் தேவையான புரோட்டீன்.. இந்த உணவுகள் ரொம்ப முக்கியம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ