Ind vs Eng odi: ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் வெளியே.. பிளேயிங் 11ல் நடக்கப்போகும் மிகப்பெரிய மாற்றம்!

நாளை (பிப்.12) நடைபெற இருக்கும் 3வது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் பிளேயிங் X1ல் மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்.12) நடைபெறுகிறது.  இந்த ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில், நாளை கடைசி போட்டி நடைபெறுகிறது. அகமதாபாத், நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், இந்திய அணியின் பிளேயிங் 11ல் மிகப்பெரிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம். 

 

1 /11

இப்போட்டியில் தொடக்க வீரர் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஓய்வு அளிக்கப்படும் பட்சத்தில் சுப்மன் கில் இந்திய அணியை வழிநடத்துவார். 

2 /11

ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படும் பட்சத்தில் ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களம் இறக்கப்படுவார். 

3 /11

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின்போது ஓய்வில் இருந்த விராட் கோலி, இரண்டாவது போட்டியில் களம் இறங்கினார். இப்போட்டியிலும் அவரது இடமான 3வது வரிசையில் இறங்குவார்.

4 /11

4வது வரிசையில் இறக்கப்படும் ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வந்தார். இந்த போட்டியிலும் அவர் அதே வரிசையில் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

5 /11

ஒருநாள் போட்டிகளை பொருத்தவரையில் ரிஷப் பண்ட் இரண்டாவது ஆப்சனாகவே உள்ளார். அதன்படி இந்த தொடரிலும் கே.எல்.ராகுலுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த இரண்டு போட்டிகளில் கே.எல்.ராகுல் விளையாடிய நிலையில், இப்போட்டியில் ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

6 /11

நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு ஒரு பினிசராக மட்டுமல்லாமல் சிறந்த பந்து வீச்சாளராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் இந்த போட்டியில் 6வது வரிசையில் இறக்கப்படுவார். 

7 /11

ரவீந்தர ஜடேஜாவுக்கு பதிலாக இப்போட்டியில், வாஷிங்டன் சுந்தர் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கபடுகிறது. 

8 /11

முகமது ஷமி முதல் இரண்டு போட்டியில் களமிறக்கப்பட்ட நிலையில், இப்போட்டியில் அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் களம் இறக்கப்பட வாய்ப்புள்ளது. 

9 /11

இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் குல்தீப் யாதவ் களம் இறக்கப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் களம் இறக்கப்படவில்லை. இந்த நிலையில், இப்போட்டியில் களம் இறக்கப்படலாம். 

10 /11

ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக ஓய்வு எடுத்துவரும் நிலையில், அவருக்கு பதிலாக இந்திய அணி ஹர்ஷித் ராணாவை தயார்  செய்து வருகிறது. அந்த வகையில் இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக களம் இறக்கப்பட்டுள்ளார். 

11 /11

வருண் சக்கரவர்த்தி கடந்த போட்டியின் மூலம் தான் ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். அப்போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அவர் இப்போட்டியிலும் களம் இறக்கப்படலாம்.