Delhi Earthquake: டெல்லியில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Delhi Earthquake: திங்கள்கிழமை அதிகாலை 5:35 மணியளவில் டெல்லி, என்சிஆர் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Written by - RK Spark | Last Updated : Feb 17, 2025, 06:20 AM IST
  • டெல்லியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.
  • ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவு.
  • திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்டுள்ளது.
Delhi Earthquake: டெல்லியில் இன்று அதிகாலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்! title=

Delhi Earthquake: டெல்லி - என்சிஆர் பகுதியில் ஏறக்குறைய இன்று அதிகாலை 5:34 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவானது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் நகரம் முழுவதும் நிலப்பரப்பில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஜன்னல்கள் மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் அசைந்துள்ளன. இது தூங்கி கொண்டிருந்த மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நொய்டா, காஜியாபாத் மற்றும் குருகிராம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் இதன் தாக்கம் உணரப்பட்டது. பலரும் வீடுகளை விட்டு தெருக்களுக்கு சென்றதால் அதிக பதட்டம் ஏற்பட்டது.

மேலும் படிக்க | கார் ஓட்டும் போது லேப்டாப்பில் வேலை பார்த்த பெண்! வைரல் வீடியோ..

நிலநடுக்கம் ஏற்படும் சமயத்தில் வீடுகளில் இருப்பது காதுகாப்பு இல்லை என்பதால், அனைவரும் தெருக்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதிகமான நிலநடுக்கம் இருந்த போதிலும் அதிர்ஷ்டவசமாக இந்த அதிர்வு காரணமாக குறிப்பிடத்தக்க சேதம் அல்லது காயங்கள் எதுவும் இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பும் லேசான அதிர்வுகள் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து இருந்தனர். இத்தகைய இயற்கை நிகழ்வுகள் வரும் போது மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான முக்கிய பாதுகாப்பு நெறிமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

நிலநடுக்கத்தை உணர்ந்தால் திடமான மரச்சாமான்கள் அல்லது மேசையின் கீழ் படுத்து கொள்வது நல்லது. அதே நேரத்தில் வலுவான நடுக்கத்தின் போது தலைக்கு மேல் கைகளைக் கட்டிக்கொண்டு தரையில் படுப்பது சாத்தியமான காயங்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

உயரமான கட்டிடங்களில் இருப்பவர்கள் நடுக்கம் குறையும் வரை வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும், ஏனெனில் பொருட்கள் விழும் அபாயம் மற்றும் கட்டமைப்பு உறுதியற்ற தன்மை வெளியே அதிகமாக இருக்கும். நிலநடுக்கம் நின்றவுடன் கட்டிடத்தில் இருந்து கீழே இறங்கவும்.

நிலநடுக்கத்தின் போது மின்சாரம் தடைபடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இதன் காரணமாக லிஃப்ட் பயன்படுத்துவதை தவிர்க்கப்பட வேண்டும், அதற்கு பதிலாக படிக்கட்டுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

நிலநடுக்கம் ஏற்படும் சமயத்தில் அபாயகரமான சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளும் அபாயத்தைக் குறைக்க பெரிய கட்டிடங்கள், மரங்கள் மற்றும் கனரக வாகனங்காலத்தில் செல்வதை தவிர்க்க வேண்டியது அவசியம்.

ஒருவேளை நீங்கள் பயணத்தில் இருந்தால் ஒரு தெளிவான பகுதியைக் கண்டுபிடித்து, குலுக்கல் நிற்கும் வரை வாகனத்தில் இருக்க வேண்டும். அத்தகைய எதிர்பாராத நிகழ்வுகளின் போது தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்வதில் தயார்நிலையில் இருங்கள்.

மேலும் படிக்க |  மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்... உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News