SK 23 Movie Title : தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக வளர்ந்து விட்டவர், நடிகர் சிவகார்த்திகேயன். இவர், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முக்கிய அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ்-சிவகார்த்திகேயன் படம்:
கோலிவுட்டின் பெரிய இயக்குநராக விளங்கும் ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக கைக்கோர்க்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு வருடத்திற்கு முன்பு வெளியானது. இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் 40வது பிறந்தநாளை முன்னிட்டு, இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி, படத்தின் டைட்டில் தற்போது வெளியாகி இருக்கிறது.
படத்தின் டைட்டில்:
#SKxARM is #Madharasi in Tamil, Telugu, Kannada & Malayalam & #DilMadharasi in Hindi
Get ready for Massive Carnage in cinemasSK & ARM are all set to give you THE BIGGEST ACTION FILM
TITLE GLIMPSE & FIRST LOOK out now!
https://t.co/ORNLrxLhZGHappy Birthday,… pic.twitter.com/a7jA0TEmNM
— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) February 17, 2025
இந்த படத்திற்கு தமிழில் மதராசி என்றும் இந்தியில் தில் மதராசி என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் நடிக்கிறாங்க?
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து, வித்யூத் ஜாம்வால் நடிக்கிறார். துப்பாக்கி படத்தின் வில்லனான இவர், இந்த படத்திலும் நெகடிவ் ராேல் அல்லது முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பார் எனக்கூறப்படுகிறது. அதே போல, நடிகர் விக்ராந்தும் இதில் நடிக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் என்ற புதுமுகம் நடிக்கிறார்.
அனிருத் இசை..
அனிருத், சிவகார்த்திகேயனின் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு பெரிய திருப்பத்தை கொடுத்த படம், எதிர்நீச்சல். இந்த படம் முதல், சிவகார்த்திகேயனுக்கு கம்-பேக் படமாக அமைந்த ‘டாக்டர்’ படம் வரை பல படங்களுக்கு அனிருத் இசையமைத்து கொடுத்திருக்கிறார். இந்த கூட்டணியில்தான் தற்போது மதராசி படமும் உருவாகியிருக்கிறது. இதனால் இந்த படமும் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து நடிக்கும் படங்கள்..
நடிகர் சிவகார்த்திகேயன், கடைசியாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்த அமரன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம், அவருக்கு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தது. இந்த படத்திற்கு பிறகு, அவர் நடிப்பில் தற்போது மதராசி திரைப்படமும் பராசக்தி திரைப்படமும் உருவாகி வருகிறது. அடுத்து அவர் டான் பட இயக்குநரான சிபி சக்ரவர்த்தியுடன் கைக்கோர்ப்பதாக கூறப்பட்டது. ஆனால், அந்த திட்டம் ட்ராப் ஆகி விட்டதால் அடுத்து குட் நைட் பட இயக்குநரான விநாயக் சந்திரசேகரனுடன் கைக்கோர்ப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், அமரன் படத்திற்கு பிறகு அவரது மார்கெட் உயர்ந்தது மட்டும் உண்மை.
மேலும் படிக்க | விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்? இப்படி ஒரு வேலைய பாத்துட்டாரே..
மேலும் படிக்க | பராசக்தி பட பஞ்சாயத்து! சிவகார்த்திகேயன் vs விஜய் ஆண்டனி-2 பேரில் டைட்டில் யாருக்கு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ