P. Chidambaram on Hindi Impostion | மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை மூலம் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் கட்டாயப்படுத்த வற்புறுத்துகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு முற்றிலும் நிராகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இரு மொழிக்கொள்கையே தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டுக்கு முறைப்படி தரவேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு நடப்பாண்டுக்கு விடுவிக்கவில்லை. இதுகுறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளிக்கும்போது, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க முடியும் என தெரிவித்துவிட்டார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டில் மறைமுகமாக இந்தி மொழியை திணிக்கும் வேலையை மத்திய அரசு செய்வதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இப்போது இதே கருத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு தமிழ்நாட்டில் இந்தி மொழியை திணிக்க முயற்சி செய்வதாகவும், தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து இந்த ஆணவப் பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் பக்கத்தில் ப.சிதம்பரம் எழுதியிருக்கும் பதிவில், " மும்மொழிக் கொள்கையை ஏற்று இந்தி மொழியைக் கற்பிக்காவிட்டால் கல்வித்துறைக்கான நிதியைத் தமிழ்நாட்டுக்குத் தரமாட்டோம் என்று மத்திய அரசின் கல்வி அமைச்சர் சொன்னது ஆணவத்தின் உச்சம். அவருக்குத் தமிழ்நாட்டின் வரலாறும் தெரியாது, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளும் தெரியாது, அரசியல் சாசனம் உருவாகிய வரலாறும் தெரியாது என்பவற்றை அவருடயை ஆணவப் பேச்சு காட்டுகிறது. மாநில அரசின் மொழிக்கொள்கையை வகுப்பது மாநில மக்களின் உரிமை, மாநில் அரசின் உண்மை.
இந்தி பேசும் மாநிலங்களில் ஒரு மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படுகிறது என்பது அவருக்குத் தெரியுமா?. இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஜவஹர்லால் நேரு அவர்களும் இந்திரா காந்தி அவர்களும் தந்த உறுதிமொழிகளையாவது அவருக்குத் தெரியுமா?. நாடாளுமன்றம் அனுமதித்த நிதியை இந்தி மொழியைக் கற்பிக்காத மாநிலத்திற்கு தரமாட்டோம் என்று கல்வி அமைச்சர் சொல்வது நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகும் என்று அவருக்குத் தெரியுமா?. தமிழ்நாட்டு மக்கள் ஒற்றுமையாக இருந்து இந்த ஆணவப் பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டும்" என கூறியுள்ளார்.
மேலும் படிக்க | உங்கள் கருத்துக்களை எங்கள் மீது திணிக்க முடியாது! எம்பி வில்சன் குற்றசாட்டு!
மேலும் படிக்க | ரேஷன் கார்டு குட் நியூஸ் மக்களே! மகளிர் உரிமைத்தொகை வாங்கலாம்
மேலும் படிக்க | மீண்டும் மத்திய அரசை பாசிசம் என அழைத்த விஜய்! திமுகவிற்கும் ஒரு கொட்டு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ