’மத்திய அரசுக்கு எதிராக சிலிர்ந்து எழுவோம்’ திமுக கூட்டணி போராட்டம் அறிவிப்பு

DMK | தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக சிலிர்த்து எழுவோம் என்பதை உணர்த்த திமுக கூட்டணி சார்பில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 17, 2025, 09:27 AM IST
  • மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு
  • தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாப்போம்
  • சென்னையில் திமுக கூட்டணி போராட்டம்
’மத்திய அரசுக்கு எதிராக சிலிர்ந்து எழுவோம்’ திமுக கூட்டணி போராட்டம் அறிவிப்பு title=

DMK Protest in Chennai | தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருக்கும் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. ஆனால், மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே தமிழ்நாட்டுக்குதர வேண்டிய நிதிப்பகிர்வை தருவோம் என பதிலடி கொடுத்திருக்கிறது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடும் கண்டனங்களை தெரிவித்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் உரிமைகள் மீது கை வைத்தால் சிலிர்த்து எழுவோம் என்பதை உணர்த்துவோம் என திமுக கூட்டணி செவ்வாய்க்கிழமை போராட்டம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக கூட்டணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " இந்தியாவின் பன்மைத்துவத்திற்கு ஒன்றிணைவோம்! உரிமைகளை மீட்போம்!. தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய மோடி அரசு எடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மிரட்டுகிறார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழ்நாட்டிற்கான நிதியைத் தருவதில் பாரபட்சம் காட்டி, பட்ஜெட்டில் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணிக்கிறார்; பதவிக்காலம் முடிந்து போன ஆளுநரை வைத்துக் கொண்டு அத்துமீறல்கள்; யுஜிசி மூலம் மாநிலத்தின் கல்விக் கட்டமைப்பைச் சிதைப்பதற்கான நடவடிக்கைகள்; தொடர்ச்சியான திராவிட - தமிழ் வெறுப்பு நடவடிக்கைகள்; மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்புக்கான முன்னெடுப்புகள் எனத் தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மோடி அரசை வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய சூழலை உருவாக்கி வருகிறார்கள்.

தமிழர்கள் தனித்துவமானவர்களாக இருப்பதும், கல்வி - வேலைவாய்ப்பு - சமூகநீதி - வாழ்க்கைத்தரம் என அனைத்து வகையிலும் உயர்ந்திருப்பதும் மோடி அரசின் கண்களை உறுத்துகிறது. அது, அரசியல்ரீதியாகப் பா.ஜ.க.,வை அண்டவிடாத தமிழ்நாட்டு மக்களின் மீது வெறுப்பை உமிழ்கிறது. பிளவுவாத சக்திகளுக்கு எதிராக ஓரணியில் நிற்கும் தமிழ்நாட்டை வீழ்த்திவிட முயற்சிக்கிறது. வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணையும்! எதிரி எந்த வடிவில் வந்தாலும் துணிந்து நிற்கும்!. அப்படியான ஒரு சூழலை வலிந்து உருவாக்கி வரும் மோடி அரசைக் கண்டித்து முதற்கட்டமாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” பிப்ரவரி 18 (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெறுகிறது.

தமிழ்நாட்டிடமிருந்து நிதியைப் பெற்றுக் கொள்ளும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன் என உரக்கக் குரல் எழுப்புவோம்! தமிழ்நாட்டின் உரிமைகள் மீது கை வைத்தால் சிலிர்த்து எழுவோம் என்பதை உணர்த்துவோம்! ஒன்றிணைவோம்! உரக்கக் குரல் எழுப்புவோம்!! உரிமைகளை மீட்போம்!! " என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | உங்கள் கருத்துக்களை எங்கள் மீது திணிக்க முடியாது! எம்பி வில்சன் குற்றசாட்டு!

மேலும் படிக்க | ரேஷன் கார்டு குட் நியூஸ் மக்களே! மகளிர் உரிமைத்தொகை வாங்கலாம்

மேலும் படிக்க | மீண்டும் மத்திய அரசை பாசிசம் என அழைத்த விஜய்! திமுகவிற்கும் ஒரு கொட்டு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News