இரவு 10 மணிக்கு மேல் டின்னர் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

Health Problems That Arise If You Eat Dinner Late : இரவு உணவு என்பது அனைவருக்கும் முக்கியமான ஒரு விஷயமாகும். இதனை தாமதமாக சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

Health Problems That Arise If You Eat Dinner Late : இரவில் டின்னரை சீக்கிரமாக சாப்பிட்டு விட வேண்டும் என பல மருத்துவர்கள் சொல்லி கேட்டிருப்போம். இருப்பினும், வாழ்வியல் சூழல்கள் காரணமாக இரவில் தாமதமாக சாப்பிடும் போது உடலில் சில பிரச்சனைகள் ஏற்படும். அவை என்னென்ன என்பதையும், அதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் இங்கு பார்ப்போம்.

1 /7

இரவில் தாமதமாக சாப்பிடுவதால், உடலில் அதிக கொழுப்பு சேருமாம். தாமதமாக உணவு எடுத்துக்கொள்ளும் போது அதில் இருக்கும் கொழுப்பு உடலில் கரைய தாமதம் ஆவதால் இந்த பிரச்சனை ஏற்படலாம்.

2 /7

இரவில் தாமதமாக சாப்பிடுவதால், வயிறு உப்பசம், ஆசிட் ரீஃப்ளக்ஸ் ஆகியவை ஏற்படலாம். இதனால் செரிமான பிரச்சனைகளும் ஏற்படலாம்.

3 /7

இரவில் தாமதமாக சாப்பிட்டுவிட்டு உடனே படுத்து விட்டால் உடலில் உறக்கம் வர இயலாமல் இருக்கும். இதனால், அடிக்கடி எழுந்து கொள்வது, உடல் சூடு அதிகமாவது ஆகியவை ஏற்படும்.

4 /7

இரவில் தாமதமாக டின்னர் சாப்பிடும் போது உடலில் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, கொழுப்பின் அளவும் அதிகரிக்கலாம். இதனால் இதயனோய் சம்பந்தமான பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

5 /7

உடலி மெட்டபாலிசம் மெதுவாக இயங்குவதற்கு தாமதமாக டின்னர் சாப்பிடும் பழக்கம் காரணமாக இருக்கும். கொழுப்பு எரிவதை இந்த தாமதமாக உணவு சாப்பிடும் பழக்கம் தலையிடுவதால் அது தடைபடும்.

6 /7

இரவில் தாமதமாக உணவு சாப்பிடுவது, உங்கள் ரத்த அழுத்தத்தை இரவில் அதிகப்படுத்த செய்யும். இதனால், டைப் 2 டயபிட்டீஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக அவதிப்பட கூடும்.

7 /7

இரவில் தாமதமாக சாப்பிட்டு விட்டு படுப்பதால், அடுத்த நாள் காலையில் அதிக பசி எடுக்கும். இதனால், பல சமயங்களில் உங்களின் சாப்பாட்டு அளவு மாறி-அதிகமாக சாப்பிடும் வாய்ப்பு ஏற்படலாம்.