Union Budget 2025: இன்னும் சில நாட்களில், அதாவது பிப்ரவரி 1ஆம் தேதி 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். வழக்கத்தை போலவே இந்த அண்டும், மக்கள் பல வித எதிர்பார்ப்புகளுடன் பட்ஜெட்டுக்காக காத்திருக்கிறார்கள். பல்வேறு துறைகளை சார்ந்த பிரதிநிதிகளை நிதி அமைச்சரும், நிதி அமைச்சக அதிகாரிகளும் சந்தித்து வருகின்றனர்.
Budget 2025 Expectations: காப்பீட்டுத் துறையின் எதிர்பார்ப்புகள்
இந்த நிலையில், காப்பீடுத் துறையில் இந்த பட்ஜெட்டில் என்னென்ன எதிர்பார்ப்புகள் உள்ளன? இதில் வரக்கூடிய முக்கிய அறிவிப்பு என்ன? மக்களுக்கு பயனளிக்கும் மாற்றங்கள் ஏற்படுமா? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்தியக் காப்பீட்டுத் துறையானது, உடல்நலக் காப்பீட்டு ஊடுருவல் மற்றும் மலிவு விலை சேவைகள் ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகளை அளித்துள்ளது. நாட்டில் மருத்துவச் செலவுகள் அதிகரித்து வரும் அதே வேளையில், காப்பீடு செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. தொழில்துறை தலைவர்கள் வளர்ச்சியைத் தூண்டக்கூடிய, காப்பீட்டை பொது மக்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றக்கூடிய நடவடிக்கைகள் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளனர்.
Insurance Sector: காப்பீட்டுத் துறையின் முக்கிய கோரிக்கைகள்
Low GST on Health Insurance Premiums: சுகாதார காப்பீட்டு பிரீமியங்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு
தற்போது, ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியங்களுக்கு 18% ஜிஎஸ்டி வசூலிக்கப்படுகின்றது. இதன் காரணமாக மக்கள் தொகையில் பெரும் பகுதியினருக்கு காப்பீடு கட்டுப்படியாகாத ஒன்றாக ஆகிவிட்டது. இந்த வரி விகிதத்தை குறைப்பதால், அதிகமான மக்கள் சுகாதாரக் காப்பீட்டை வாங்க ஊக்குவிக்கப்படுவார்கள். இதனால் ஒட்டுமொத்த கவரேஜ் அதிகரிக்கும்.
Section 80D Tax Exemptions Revision: பிரிவு 80D வரி விலக்குகளில் திருத்தங்கள்
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80D இன் கீழ், தனிநபர்கள் உடல்நலக் காப்பீட்டு பிரீமியங்களில் வரி விலக்குகளைப் பெறலாம். இதில் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
- வரி செலுத்துவோர் அனைவருக்கும் விலக்கு வரம்பை ரூ.25,000 லிருந்து ரூ.50,000 ஆக அதிகரிக்க வேண்டும்
- மூத்த குடிமக்களுக்கு இந்த வரம்பை ரூ.1,00,000 ஆக உயர்த்த வேண்டும்
என்று காப்பீட்டுத் துறை அரசாங்கத்தை வலியுறுத்துகிறது. இந்த மாற்றம் அதிகமான மக்களை சுகாதார காப்பீட்டில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும்.
Dedicated Health Regulator: சுகாதார சேவைகளுக்கான பிரத்யேக நிர்வாக அமைப்பு
மருத்துவ பணவீக்கம் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் ஆகும் செலவினங்கள், சேவைகள் ஆகியவற்றை மேற்பார்வையிடக்கூடிய ஒரு ஒழுங்குமுறை அமைப்புக்கான அவசரத் தேவை உள்ளது. சுகாதார சேவைகளுக்கான ஒரு பிரத்யேக நிர்வாக அமைப்பு அமைக்கபட்டால், அது வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதோடு, காப்பீட்டு நிறுவனங்கள் தங்கள் திட்டங்களுக்கு சந்தை சார்ந்த விலைகளை நிர்ணயிக்கவும் உதவும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Separate Tax Rebates for Life Insurance Premiums: ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களுக்கு தனி வரி தள்ளுபடிகள்
பிரிவு 80C க்கு வெளியே ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களுக்கு தனித்தனியான வரி விலக்குகளை காப்பீட்டு தொழில்துறை பரிந்துரைக்கிறது. இதன் மூலம் அதிக மக்கள் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை வாங்க ஊக்குவிக்கப்படுவார்கள். இதன் மூலம் அதிக நிதி பாதுகாப்பும் கிடைக்கும்.
Income Tax Slabs and Exemptions Review: வருமான வரி அடுக்குகள் மற்றும் விலக்குகள் பற்றிய ஆய்வு
வருமான வரி அடுக்குகளில் மாற்றங்களை கொண்டு வருவதும், விலக்கு வரம்புகளை அதிகரிப்பதும் தனிநபர்களுக்கு அதிக செலவழிப்பு வருமானத்தை வழங்கும். காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய இது அவர்களை ஊக்குவிக்கும். இது காப்பீட்டு சந்தையை கணிசமாக உயர்த்தலாம் மற்றும் பாலிசிதாரர்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பை வழங்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ