உக்ரைன் ரஷ்யா போர் நடந்துவரும் நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக பேஸ்புக் செயல்பட்டு வருவதாக கூறி பேஸ்புக்கிற்கான அணுகலை ரஷ்யா மட்டுப்படுத்தியது. இந்நிலையில், தற்போது ரஷ்யா ட்விட்டரை முடக்கி தகவல் ஓட்டத்தை நிறுத்தியுள்ளது. ரஷ்யாவில் ட்விட்டர் இயங்குதளத்திற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து நிறுவனம் அறிந்திருப்பதாகக் ட்விடரும் கூறியுள்ளது. "ரஷ்யாவில் சில நபர்களுக்கு ட்விட்டர் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம், மேலும் எங்கள் சேவையை பாதுகாப்பாகவும் அணுகக்கூடியதாகவும் வைத்திருக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்" என்று ட்விட்டர் சனிக்கிழமை பிற்பகுதியில் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
Rostelecom, MTS, Beeline மற்றும் Megafon உட்பட முக்கிய ரஷ்ய தொலைத்தொடர்பு வழங்குநர்களால் ட்விட்டரை அணுக இயலவில்லை. எனினும் தி வெர்ஜ் அறிக்கையில், ரஷ்யர்கள் இன்னும் VPN சேவைகள் மூலம் டிவிட்டரை அணுக முடியும் எனவும் நேரடி இணைப்புகள் மட்டுமே தடைசெய்யப்பட்டுள்ளன எனவும் கூறப்படுள்ளது.
மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் மோதல்: மூன்றாம் உலகப் போரை நோக்கி உலகம் செல்கிறதா..!!
" நெருக்கடி காலங்களில் மக்கள் இலவசமாக, வெளிப்படையான இணைய அணுகலைப் பெற வேண்டியது அவசியம் என்றும் ட்விட்டர் தெரிவித்துள்ளது. பகுதியளவு கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட, Meta (Facebook) ரஷ்ய ஊடகத்துறையின் பேஸ்புக் பக்கத்தில் விளம்பரங்கள் செய்யவும் மானிடைஸ் செய்யவும் தடைவிதித்துள்ளது.
மெட்டாவின் திடீர் தடைக்கு பதிலளித்த, ரஷ்யாவின் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு கட்டுப்பாட்டாளர், ரோஸ்கோம்நாட்ஸோர், "ரஷ்ய குடிமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை" மெட்டா மதிக்கவில்லை என்றும், கடந்த 2020 ஆம் ஆண்டு வரை பல பேஸ்புக் பக்கங்களில் தணிக்கை செய்திருக்கிறது எனவும் குற்றம் சாட்டினார்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டில் முன்னதாக, பேஸ்புக்கை தடை செய்வதற்கு ரஷ்யா எடுத்துள்ள நடவடிக்கையை மெட்டா முன்பு விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அகண்ட ரஷ்யாவை ஏற்படுத்துவதற்கான புடினின் திட்டம்
மேலும் படிக்க | Russia Ukraine Crisis: அதிகரிக்கும் பதட்டத்தால் நிலைதடுமாறும் உலக சந்தைகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR