பட்ஜெட்டுக்கு முன் வந்த குட் நியூஸ்: LPG சிலிண்டர் விலை குறைந்தது, லேட்டஸ் விலை இதோ

LPG Gas Cylinder Rate: மாதத்தின் முதல் நாளே, பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, மக்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.7 குறைந்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 1, 2025, 08:48 AM IST
  • மாதத்தின் முதல் நாளே வந்த நல்ல செய்தி.
  • எல்பிஜி சிலிண்டர் விலைகள் குறைந்தன.
  • தற்போதைய விலை என்ன?
பட்ஜெட்டுக்கு முன் வந்த குட் நியூஸ்: LPG சிலிண்டர் விலை குறைந்தது, லேட்டஸ் விலை இதோ title=

LPG Gas Cylinder Rate: மாதத்தின் முதல் நாளே, பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, மக்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது. எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.7 குறைந்துள்ளது. இருப்பினும், இந்த நிவாரணம் வணிக ரீதியான சிலிண்டர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. அதாவது, 19 கிலோ எல்பிஜி சிலிண்டர்களின் விலை மட்டுமே குறைந்துள்ளது. 14 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. 

LPG Commercial Cylinder: தற்போதைய விலை என்ன?

வர்த்தக சிலிண்டர்கள் இன்றைய விலை குறைப்பிற்கு பிறகு, 19 கிலோ வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் தலைநகர் டெல்லியில் ரூ.1,797 -க்கு கிடைக்கும். முன்னர் இதன் விலை ரூ.1,804 ஆக இருந்தது. சென்னையில் இதன் விலை ரூ.1,959.50 ஆக குறைந்துள்ளது. கொல்கத்தாவில் இதன் விலை ரூ.1,911 -இல் இருந்து ரூ.1,907 ஆக குறைந்துள்ளது. மும்பையில் ரூ.1,756 ஆக இருந்த சிலிண்டர் விலை ரூ.1,749.0 ஆக குறைந்துள்ளது. 

LPG Domestic Cylinder: வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள்

இன்று வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. டெல்லியில், 14 கிலோ வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் பழைய விலையான ரூ.803 இலேயே கிடைக்கும். சென்னையில், இந்த சிலிண்டரின் விலை ரூ.818.50 ஆக உள்ளது. மும்பையில், வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.802.50 ஆகவும், கொல்கத்தாவில், இது ரூ.829 ஆகவும் உள்ளது.

வணிக எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு

இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விலைகள் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகளால் தீர்மானிக்கப்படுகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எண்ணெய் நிறுவனங்களால் தினமும் திருத்தப்படுகின்றன. எல்பிஜி விலைகள் மாதந்தோறும் திருத்தப்படுகின்றன.

எண்ணெய் நிறுவனங்கள்

எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதி எல்பிஜி சிலிண்டர் விலைகளில் மாற்றங்களை செய்கின்றன. வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர் விலைகள் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகரித்தன. ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஜனவரியில் விலைகள் குறைந்தன. இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இன்று எல்பிஜி சிலிண்டர் விலை குறைப்பு ஒரு நல்ல செய்தியாக வந்துள்ளது.

மேலும் படிக்க | Budget 2025: அடல் பென்ஷன் திட்டம்... இரட்டிப்பாகும் ஓய்வூதியம்.. காத்திருக்கும் குட் நியூஸ்?

மேலும் படிக்க | Budget 2025: 5 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் மாத ஓய்வூதியம், இன்று பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News