மத்திய பட்ஜெட் 2025: கல்வித்துறையில் எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய சிறப்பம்சங்கள்!

மத்திய பட்ஜெட் 2025: கல்வியில் முக்கிய எதிர்பார்ப்புகளான ஜிஎஸ்டி குறைப்பு, தொழில் பயிற்சி அதிகரித்தல், ஆசிரியர் பயிற்சி மேம்படுத்துதல், டிஜிட்டல் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல், திறன் இடைவெளியைக் குறைத்தல், AI ஒருங்கிணைப்பு மற்றும் உயர் கல்வி சீர்திருத்தம் உள்ளிட்ட அனைத்திலும் அதிக முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகிறது. 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  நாட்டின் மத்திய பட்ஜெட்டை இன்று எட்டாவது முறையாகத் தாக்கல் செய்ய உள்ளார். இதில் குறிப்பாகக் கல்வித் துறைக்குச் சிறப்பான அறிவிப்புகள் கூறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. கடந்த ஆண்டு கல்வி பட்ஜெட் என்ன என்பதை புரிந்துகொள்வோம். மேலும் இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் முக்கிய 5 பெரிய எதிர்பார்ப்புகள் என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம். 

1 /8

கல்வியுடன் தொடர்புடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 6 சதவீதம் கல்விக்காகச் செலவிட வேண்டும் என்று எதிர்ப்பார்க்கபடுகின்றன. 

2 /8

கடந்த ஆண்டு இந்திய அரசுக் கல்விக்காக ரூ.1 லட்சத்து 12ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஒதுக்கீடு 2023 ஆண்டுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக 13 சதவீதம் அதிகரித்துள்ளது.   

3 /8

AI சார்ந்த கற்றல் கல்வியை அதிகரித்தல். ஆசிரியர் பயிற்சி திட்டங்களை மேம்படுத்துதல், தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துதல், நகர்ப்புற-கிராமப்புற கல்வி இடைவெளியைக் குறைக்கும் நடவடிக்கைகளில் சிறப்பான கவனம் செலுத்துதல். கல்வி மற்றும் ஆராய்ச்சியில் தனியார்த் துறை ஈடுபாட்டை அதிகரிக்கக் கல்விச் செலவுகளில் வரிச் சலுகை மற்றும் சலுகைகளின் பங்குதாரர்கள் உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகின்றன. 

4 /8

இயந்திர கற்றல் மற்றும் தரவு அறிவியல் உள்ளிட்டவையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களின் கற்றல் திறன் வளர்ச்சி இதன்மூலம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளன.   

5 /8

கொரோனாவுக்கு பிறகு மொபைல் மற்றும் மடிக்கணினி மூலம் கல்வி பெறுவதற்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் டிஜிட்டல் பிளவை குறைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

6 /8

டிஜிட்டல் கற்றல் கருவிகள் மீதான ஜிஎஸ்டியை குறைப்பது அல்லது அதனை முழுமையான நீக்க வேண்டும் என்றும் அதிகமான கோரிக்கைகள் எழுந்துள்ளன. மேலும் இண்டர்ன்ஷிப் மற்றும் தொழிற்கல்வி படிப்புகளுக்கு நிதியை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் உள்ளன. 

7 /8

கல்வி நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் உதவிக்கு வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றன. இதன் காரணமாக ஆராய்ச்சி தொடர்புடைய அம்சங்கள் மேம்படும், உள்கட்டமைப்பு,  வளங்களின் பற்றாக்குறை நிவர்த்தி செய்வது மற்றும் பொதுத் தனியார்த் துறைக்கு முன்னுரிமை அளிப்பது போன்ற புதிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது.   

8 /8

பட்டதாரிகளை அதிகரிக்க உள்கட்டமைப்பு வலுப்படுத்துதல் போன்ற முன் முயற்சிகள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கல்வி மற்றும் கண்டுபிடிப்பு போன்றவற்றிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.