Union Budget 2025 Announcements For Tamil Nadu: 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பீகார், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் தமிழகத்துக்கு என தனிப்பட்ட திட்டங்கள் ஏதும் பட்ஜெட் உரையில் அறிவிக்கப்படாதது பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மதுரை எய்ம்ஸ், சென்னை மெட்ரோ மட்டுமின்றி மதுரை, கோவை மெட்ரோ திட்டங்கள் மற்றும் வேறு புதிய நெடுஞ்சாலை சார்ந்த திட்டங்கள், ரயில் திட்டங்கள் ஆகியவை குறித்த எதிர்பார்ப்புகள் தமிழ்நாட்டு தரப்பில் இருந்தன. ஆனால், இதுகுறித்த அறிவிப்புகள் ஏதும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.
பட்ஜெட் 2025: ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்
முதலமைச்சர் ஸ்டாலினும் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு சில எதிர்பார்ப்புகள் இருந்ததாக அறிவித்திருந்தார். அதாவது, சென்னை, மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும்; தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே உயர்மட்ட விரைவுச்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும்; கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பிரதமரின் வீட்டுத் திட்டங்களில் செலவு வரம்பை அதிகரிக்க வேண்டும் என்றும்; தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடவும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பல கோரிக்கைகளை வைத்திருந்தார்.
மேலும் படிக்க | மத்திய பட்ஜெட் 2025: எந்தெந்த பொருட்களின் விலை உயர்கிறது, குறைகிறது.. லிஸ்ட் இதோ
பட்ஜெட் 2025: நிவாரண நிதி குறித்தும் அறிவிப்பு இல்லை
தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் பல பகுதிகள் இயற்கை சீற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. கடந்தாண்டும் கூட ஃபெஞ்சல் புயல் காரணமாக வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில், நிவாரணம் குறித்த அறிவிப்பை மத்திய பட்ஜெட்டில் வெளியிட வேண்டும் என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசும் கோரிக்கை வைத்திருந்தார்.
அதாவது, நிவாரணம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதி போதுமானதாக இல்லை என்றும் ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.6.675 கோடியை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். ஆனால் இதுகுறித்த அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இல்லை எனலாம்.
2025-26 பட்ஜெட் அறிவிப்பில் தனிநபர் வருமான வரி விலக்கு ரூ.12 லட்சம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ரூ.2023ஆம் ஆண்டு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டது. தற்போதைய இந்த அறிவிப்பு நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரிய ஆறுதலை வழங்கி உள்ளது. இதனால், மாதந்தோறும் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்கள் வரி செலுத்த தேவையில்லை. இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து வரவேற்பும் கிடைத்துள்ளது. மாநிலங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாநிலங்களுக்கு 1.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Budget 2025: பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு வெளியான மாஸான அறிவிப்புகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ