Budget 2025: நாட்டின் பொது பட்ஜெட் இன்று அதாவது பிப்ரவரி 1, 2025 அன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும் நிலையில், பிப்ரவரி 1 முதல், சில முக்கிய விதிகள் மற்றும் மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளன.
எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று, நாடு முழுவதும் எல்பிஜி விலைகளை திருத்தி அமைக்கின்றன. அதோடு, வேறு சில விதிகளிலும் மாற்றங்கள் அமலாகிண்றன. இவை சாமானிய மக்களின் பாக்கெட்டை பாதிக்கும் என்பதால், அனைவரும் இது குறித்து அறிந்திருக்க வேண்டும்.
2025 பிப்ரவரி 2025 முதல், பல்வேறு விதிகள் மற்றும் நிதி பாரிவர்த்தனைகள் தொடர்பான விதிகளில் மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. UPI தொடர்பான விதிகள், சிலிண்டர் விலையில் மாற்றம், IDFC FIRST வங்கி கிரெடிட் கார்டு புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்,கோடக் மஹிந்திரா வங்கி சேமிப்புக் கணக்கு சேவை கட்டணங்களில் மாற்றம் ஆகியவை இதில் அடங்கும்.
பிப்ரவரி 1ம் தேதி முதல் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கமர்ஷியல் சிலிண்டர்களின் விலையை அரசு எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் குறைத்துள்ளன. சிலிண்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது மற்றும் குறைக்கப்பட்ட விலை 19 கிலோ சிலிண்டர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதேசமயம் வீட்டு உபயோகத்திற்கான, 14 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
UPI பரிவர்த்தனை ஐடியை உருவாக்கும் செயல்முறையை எளிதாக்கும் முயற்சியில், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) "எண்ணெழுத்து" எழுத்துக்களின் பிரத்யேகப் பயன்பாட்டைக் கட்டாயப்படுத்தியுள்ளது, மேலும் சிறப்பு எழுத்துகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்கிறது.
நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (MSIL), அதிகரித்து வரும் செலவுகளை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி முதல் அதன் பல்வேறு மாடல் கார்களின் விலையை ரூ.32,500 வரை அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஆல்டோ K10, பிரெஸ்ஸா, செலெரியோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட், டிசையர், எர்டிகா உள்ளிட்ட மேலும் சில மாடல்கள் இதில் அடங்கும்.
பிப்ரவரி 1, 2025 முதல், IDFC FIRST வங்கி அதன் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு திருத்தப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை அமல்படுத்தும். IDFC FIRST Millennia, FIRST Wealth மற்றும் FIRST SWYP கிரெடிட் கார்டுகளுக்கான அறிக்கை தேதி ஒவ்வொரு மாதமும் 20 ஆம் தேதி மாறும்.
கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்த வேண்டிய தேதி அறிக்கை தேதிக்கு 15 நாட்களுக்குப் பிறகு இருக்கும். கூடுதலாக, CRED, PayTM மற்றும் MobiKwik உள்ளிட்ட மூன்றாம் தரப்பு தளங்கள் மூலம் செலுத்தப்படும் கல்விக் கட்டணங்களுக்கு குறைந்தபட்சக் கட்டணம் ரூ.249 உடன் 1% வசூலிக்கப்படும்.
கோடக் மஹிந்திரா வங்கி கிளைகள் மற்றும் ரொக்க டெபாஸிட் இயந்திரங்களில் ரொக்க பரிவர்த்தனை கட்டணங்களில் செய்யப்பட்டுள்ள திருத்தம் முக்கிய மாற்றங்களில் அடங்கும். முதல் இலவச பரிவர்த்தனைக்குப் பிறகு அல்லது மாதத்திற்கு ரூ.10,000 டெபாசிட் செய்வதற்கான கட்டணம் ரூ.1,000க்கு ரூ.5 (குறைந்தபட்சம் ரூ.50) வசூலிக்கப்படும்
2024-25 நிதியாண்டு அட்டவணையின் ஒரு பகுதியாக, ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை குழு கூட்டம் வரும் பிப்ரவரி 5-7, 2025 வரை நடைபெறும். இதில் ரெப்போ விகிதக் குறைப்பு வரும் என பல நிபுணர்கள் கூறியுள்ளனர். ரெப்போ விகிதத்தில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், வங்கிகள் வட்டிவிகிதங்கள் அதற்கேற்ப மாற்றியமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.