Union Budget 2025 Latest News: நாடாளுமன்றத்தில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கின்றது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கலின் போது ஒட்டுமொத்த மக்களுடைய எதிர்பார்ப்பு என்னவென்றால், வருமான வரி விலக்கில் மாற்றம் ஏதேனும் இருக்குமா? உச்ச வரம்பில் மாற்றம் கொண்டுவரப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தான் அதிகமாக இருக்கும். அதை நோக்கி ஒட்டுமொத்த மக்களும் அந்த பட்ஜெட் அறிவிப்பை உற்று கவனிப்பார்கள்.
குறிப்பாக இந்தியாவில் பொறுத்தவரையில் வரி செலுத்தக் கூடியவர்கள் அதிகமானவோர் நடுத்தர வர்க்க மக்கள் தான் என புள்ளி விவரங்கள் சொல்லுவதால், அதன் அடிப்படையில் தான் வருமான வரி விலக்கில் மாற்றம் வருமா என்று ஒட்டுமொத்த மக்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நிச்சயம் இந்த 2025 பட்ஜெட்டில் சில முக்கிய மாற்றங்கள் இருக்கும் என்றும், அதிலும் மூன்று முக்கிய அறிவிப்புகள் இந்த மத்திய பட்ஜெட்டில் வெளியாகலாம் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த மூன்று முக்கிய அறிவிப்புகள் என்ன என்று பார்க்கலாம்.
முதல் அறிவிப்பு பொறுத்தவரையில் 75,000 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை உயர் இருக்கின்றது. அதாவது வரி செலுத்தக்கூடிய சம்பள வருவாயில் இருந்து கழிக்கப்படக்கூடிய தொகையாக இருக்கக்கூடிய வரி விலக்கு. ஸ்டாண்டர்ட் டிடக்ஷன் என்று சொல்லக்கூடிய நிலையான வரி கழிவு தற்போது ₹75,000 இருக்கின்றது. இந்த தொகையானது ஒரு லட்சம் வரை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதனுடைய பலன் என்னவென்றால், நாம் வாங்கக்கூடிய அந்த ஊதியத்தில் வரி செலுத்தக்கூடிய தொகையின் அடிப்படையில் 75 ஆயிரம் ரூபாய் வரை பல்வேறு காரணங்களின் அடிப்படையாக வைத்து ரூ.75,000 கழித்து மீதம் இருக்கக்கூடிய சம்பளத்தின் அடிப்படையில் வரி செலுத்தலாம். அந்த 75 ஆயிரம் ரூபாய் என்பது உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் ரூ.75,000 என்பது ஒரு லட்சம் ரூபாயாக உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.
இரண்டாவது முக்கிய அறிவிப்பு என்னவென்றால், குறைந்தபட்ச அந்த வரி விலக்கு பொறுத்தவரையில் மூன்று லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு வரி கிடையாது என்ற அடுக்கை உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. தற்போது குறைந்தபட்ச தொகை என்பது மூன்று லட்சமாக இருக்கிறது. அதாவது ஆண்டு வருமானம் மூன்று லட்சம் உள்ளவர்களுக்கு வரி கிடையாது. மூன்று லட்சத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு வரி உண்டு என்ற அடிப்படையில், அந்த மூன்று லட்சம் என்பது ஐந்து லட்சம் வரை வாய்ப்பு இருக்கிறது. மத்திய பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியாகினால் அடுத்து வரக்கூடிய நாட்களில் ஆண்டு வருமானம் ஐந்து லட்சம் வரை உள்ளவர்களுக்கு வரி செலுத்த வேண்டிய நிலை இருக்காது.
மூன்றாவது முக்கிய அறிவிப்பை பொறுத்தவரையில், ஏற்கனவே இந்தியாவில் பழைய வரி விதிப்பு முறை புதிய வரி விதிப்பு முறை என இரண்டு வரி விதிப்பு முறைகள் உள்ளன. அதன் அடிப்படையில் இந்த புதிய வரி விதிப்பு முறையின் பொறுத்தவரையில் ஏற்கனவே இருக்கக்கூடிய நடைமுறையை பார்த்தால், 10 முதல் 12 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 15 விழுக்காடு வரி செலுத்துகிறார்கள். 15 லட்சம் மேல் உள்ளவர்களுக்கு 30 விழுக்காடு வரை வரி செலுத்துகிறார்கள்.
இந்த நடைமுறையில் ஒரு புதிய மாற்றமானது கொண்டு வரப்படுகிறது. அதாவது புதிய மாற்றத்தின்படி 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு 25 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்றும், அதேபோன்று 20 லட்சம் மேல் ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு 30 விழுக்காடு வரி விதிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல், புதிய வரி விதிப்பு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, இனி வரக்கூடிய நாட்களில் புதிய வரி விதிப்பு முறை மட்டும்தான் பின்பற்றப்படும் என்றும் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த மூன்று முக்கிய அறிவிப்புகள் குறித்து 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ