பாராதி ராஜாவை ‘சின்ன வீடு’ கட்டச்சொன்ன சிவாஜி! சொன்ன காரணம்தான் ஹைலைட்..

Sivaji Ganesan Advised Director Bharathiraja : நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் பாரதி ராஜாவிடம் ‘கட்னா சின்ன வீடு கட்டு’ என அட்வைஸ் செய்த விஷயம், தற்போது இணையத்தில் வைரலகி வருகிறது.

Written by - Yuvashree | Last Updated : Jan 30, 2025, 06:18 PM IST
  • பாரதி ராஜாவுக்கு சிவாஜி கொடுத்த அட்வைஸ்!
  • சின்ன வீடா கட்ட சொன்னார்..
  • ஏன் தெரியுமா?
பாராதி ராஜாவை ‘சின்ன வீடு’ கட்டச்சொன்ன சிவாஜி! சொன்ன காரணம்தான் ஹைலைட்.. title=

Sivaji Ganesan Advised Director Bharathiraja : இந்திய சினிமாவில் நீங்கா இடம் பிடித்த நடிகர்களுள் ஒருவர், சிவாஜி கணேசன். எனக்கு எந்த விதமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டாலும், அதனை ஏற்று நடிக்க மாட்டார், வாழ்ந்தே காட்டி விடுவார் என்ற பெயரை பெற்றவர் சிவாஜி. இதனால்தான் இவருக்கு மரியாதை செய்யும் விதத்தில் ரசிகர்கள், நடிகர் திலகம் என்ற பட்டத்தை கொடுத்தனர்.

பிளாக் அண்ட் ஒயிட் காலம் முதல், கலர் சினிமா காலம் வரை பல தலைமுறை இயக்குனர்களின் படங்களில் தோன்றியவர் சிவாஜி. தனது நடிப்பையும் கூட அந்தந்த தலைமுறைக்கு ஏற்ப மாற்றி, அனைவர் மனங்களிலும் எளிமையாக குடிகொண்டு விட்டார். இவர் பாரதிராஜாவிடம் கூறிய ஒரு அட்வைஸ்தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகிவிடுகிறது.

பாரதிராஜாவிடம் சிவாஜி கூறியது..

சிவாஜி கணேசனுக்கு வயதான பின்பு ஒரு முறை மாரடைப்பு வந்துவிட்டது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரைப் பார்ப்பதற்காக பாரதிராஜா சென்றிருந்தார். பாரதிராஜா அவரிடம் உடல்நலம் குறித்து விசாரித்துக் கொண்டு இருந்தபோது, தனக்கு மாரடைப்பு ஏற்பட்டது எப்படி என்று சிவாஜி கணேசன் விளக்கினாராம். நன்றாகத்தான் உறங்கிக் கொண்டிருந்ததாகவும் திடீரென மாரடைப்பு வந்து விட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். திடீரென பாரதிராஜாவிடம், “நீ வீடு கட்டி விட்டாயா?” என கேட்டு இருக்கிறார். அதற்கு பாரதிராஜா, கட்டிட்டேன் என கூறியிருக்கிறார். அது பெரிய வீடா இல்லை சின்ன வீடா என கேட்டிருக்கிறார் சிவாஜி.

“சுமாரான அளவுதான் கட்டி இருக்கேன் ஏன் கேக்குறீங்க?” என சிவாஜியிடம் பாரதிராஜா கேட்டிருக்கிறார். அதற்கு சிவாஜி, “தயவுசெய்து பெரிய வீடா கட்டிடாத. எனக்கு மாரடைப்பு வந்தப்போ பிரபு, ராம் என கத்தி கத்தி கூப்பிட்டேன். ஆனால் ஒருத்தரும் வரவில்லை. அதனால், அழைத்தால் உடன் உதவிக்கு யாராவது வரும் அளவிற்கு, கையெட்டும் தூரத்தின் அளவிற்கு வீடு இருந்தாலே போதும்” என பாரதிராஜாவிடம் அறிவுரை கூறியிருக்கிறார் சிவாஜி.

இதைக்கேட்ட ரசிகர்கள், என்னதான் பெரிதாக சம்பாதித்து, பெரிதாய் வீடு கட்டினாலும் வாழ்க்கை இவ்வளவுதான் இல்லையா? என்று சிலர் கூறி வருகின்னறனர்.

பாரதிராஜா-சிவாஜி கணேசன் திரைப்படங்கள்:

ரசிகர்களால் இயக்குனர் சிகரம் என அழைக்கப்படும் பாரதிராஜா, இதுவரை பல படங்கள் மூலம் ரசிகர்களின் மனதை பிடித்துள்ளார். ஆனால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், ரசிகர்களை ஆட்கொள்ள வைக்கும் அவரது ஒரு படம், “முதல் மரியாதை”. 16 வயதினிலே படம் போல ஒரு கிராமத்து படத்தை இயக்க நினைத்த இவர், தேர்ந்தெடுத்த ஹீரோ, சிவாஜி கணேசன்.

சமூகத்தின் பார்வையில் இருவருக்கும் இடையேயான காதல் எப்படி பார்க்கப்படுகிறது, இதனால் உண்மையாக காதலித்தவர்கள் எவ்வாறான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர் என்பதை உணர்ச்சிபூர்வமாக காட்டிய படம் இது. இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக ராதா நடித்திருந்தார். நிஜத்திலும் படத்திலும் ராதா சிவாஜியை விட பல வயது குறைந்தவர். இது படத்தில் முக்கிய புள்ளியாகவும் பார்க்கப்பட்டது.

தமிழ்நாட்டின் பெரும்பாலான தியேட்டர்களில் 200 நாட்களைக் கடந்து ஓடிய படங்கள் ஒன்று முதல் மரியாதை. இந்த படம் பாரதிராஜாவுக்கு பெரும் புகழை தேடி தந்த படம் ஆகும். சிவாஜி-பாரதி ராஜா இடையே நட்பு வளர காரணமாக அமைந்த படமும், இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தனக்கு தாயாக நடித்தவரையே காதலித்த கமல்ஹாசன்! எந்த நடிகை தெரியுமா?

மேலும் படிக்க | 19 வயது நடிகையை திருமணம் செய்ய ஆசைப்பட்ட ரஜினி! யார் அவர் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News