Foreign Travel Guidelines Of USA: சர்வதேச பயணிகளுக்கு கோவிட் தடுப்பூசி கட்டாயமில்லை என்று அமெரிக்கா அறிவித்துவிட்டது. இது, கோவிட் சகாப்தம் முடிவுக்கு வந்ததா? என்ற கேள்விகளை எழுப்புகிறது. கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான தேவை கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைவிடப்பட்ட நிலையில், வெளிநாட்டு பயணிகளுக்கான தடுப்பூசி கொள்கையை அமெரிக்கா தொடர்ந்து அமலில் வைத்திருந்தது.
தற்போது இதுவரை நீக்கப்படாமல் இருந்த கோவிட் தடுப்பூசி கட்டாயம் என்ற கொரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அமெரிக்க அரசு ரத்து செய்தது. அதாவது சர்வதேச பயணிகளுக்கான கோவிட் தடுப்பூசி ஆணையை அமெரிக்கா கைவிடுகிறது. எனவே, இனிமேல், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தான் அமெரிக்காவிற்கு பயணிக்கமுடியும் என்ற கட்டுப்பாடு கிடையாது.
நாடு அதன் கோவிட் அவசரகால நிலையை பல மாதங்களுக்கு முன்னரே முடித்துக்கொண்டாலும் கூட, தடுப்பூசி கட்டாயம் என்ற நிலைப்பாட்டை தற்போதுதான் நீக்கியுள்ளது.
கோவிட் அவசகால நிலையை முடிவுக்குக் கொண்டுவரும்போது, "ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், பணியிடங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் கோவிட் தடுப்பூசி மிக முக்கியமான கருவிகளில் ஒன்றாக உள்ளது," என்று வெள்ளை மாளிகை கூறியது.
தற்போது, "இந்த நடவடிக்கைகள் இனி தேவையில்லாத போது நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்" என அமெரிக்கா அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான தேவை கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைவிடப்பட்ட நிலையில், வெளிநாட்டு பயணிகளுக்கான தடுப்பூசி கொள்கை நீக்கப்படவில்லை. பிப்ரவரியில், மே 11 அன்று கடைசியாக மீதமுள்ள தொற்றுநோய் கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர பிரதிநிதிகள் சபை வாக்களித்தது.
"கோவிட்-19 இன் வளர்ந்து வரும் நிலை மற்றும் வைரஸ் மாறுபாடுகளின் தோற்றத்தை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதால், அதிக விளைவுகளின் மாறுபாட்டின் சாத்தியமான வெளிப்பாட்டைக் கண்டறிந்து பதிலளிக்கும் கருவிகள் எங்களிடம் உள்ளன" என்று மே 1 அன்று வெளியிடப்பட்ட பிரகடனத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் கூறினார்.
மேலும் படிக்க | கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஜேடிஎஸ் மீண்டும் கிங்மேக்கரா? சரியும் பாஜக! அள்ளும் காங்கிரஸ்
"நாம் கொரோனா தொடர்பாக அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, பொது சுகாதார நிபுணர்களின் சமீபத்திய வழிகாட்டுதலின் அடிப்படையில், அக்டோபர் 2021 இல் நான் விதித்த சர்வதேச விமானப் பயணக் கட்டுப்பாடுகள் இனி எங்களுக்குத் தேவையில்லை என்று தீர்மானித்துள்ளேன்," என்று அவர் மேலும் கூறினார்.
தொற்றுநோய்களின் போது, சர்வதேச பயணிகள் நாட்டிற்கு வருவதற்கு அமெரிக்க விதித்த தடை, 18 மாதங்களுக்கு தொடர்ந்தது. நவம்பர் 2021 இல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும், வெளிநாட்டுப் பயணிகள், மூன்று நாட்களுக்குள் தடுப்பூசி மற்றும் கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொண்டிருக்க வேண்டும், அதற்கான சான்றிதழை அளிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தொடர்ந்தது.
புதிய விதிகள் மே 11 முதல் அவசரநிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பிடென் நிர்வாகத்தின் முடிவின் ஒரு பகுதியாகும், கோவிட் இறப்புகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ