PPF: பொது வருங்கால வைப்பு நிதி என்பது மத்திய அரசு, தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் பாதுகாப்பான சேமிப்புத் திட்டம். நீண்ட கால சேமிப்பு திட்டமான PPF திட்டத்தின் கூட்டு வட்டியின் பலன் கிடைப்பதால் பணம் பன்மடங்காகிறது. பங்குச் சந்தையின் அபாயத்திலிருந்து விலகி இருக்க நினைப்பவர்களுக்கு PPF (பொது வருங்கால வைப்பு நிதி) நல்ல தேர்வாக இருக்கும்.
PPF: நிலையான வட்டி, கூட்டு வட்டி வருமானம், வரி சேமிப்பு
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது அரசின் திட்டம் என்பதால், மிகவும் பாதுகாப்பான திட்டமாக இருக்கும். முதலீடு செய்த தொகைக்கு நிலையான வட்டி கிடைப்பதால் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தத் திட்டம் மிகவும் பிரபலமாக உள்ளது. தற்போது 7.1% வட்டி கிடைக்கிறது. அதோடு கூட்டு வட்டியின் பலனும் உண்டு. இதனால் நீண்ட கால முதலீட்டில் பணம் பன்மடங்காகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் வரியையும் சேமிக்கலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்தில் முதிர்ச்சிக்குப் பிறகு, அதாவது 15 ஆண்டுகளுக்கு பிறகு பிபிஎஃப் கணக்கை நீட்டிக்கும் வசதி உள்ளது. ஐந்து ஆண்டு இடைவெளியில் நீட்டிக்கலாம். இந்தத் திட்டத்தை முதிர்ச்சிக்குப் பிறகு முதலீடு இல்லாமல் நீட்டித்தால், பிபிஎஃப் கார்பஸில் உள்ள தொகைக்கும் கூட்டு வட்டியின் பலனுடன் 7.1% வருடாந்திர வட்டி தொடர்ந்து கிடைக்கும்.
முதிர்ச்சியின் போது கிடைக்கும் தொகை
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது. இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 1.5 லட்சத்தை முதலீடு செய்தால், முதிர்வுக்கான தற்போதைய வட்டி விகிதத்தின்படி (பிபிஎஃப் முதிர்வுத் தொகை 2025), உத்திரவாதத்துடன் மொத்தம் ரூ.40,68,209 கிடைக்கும். 15 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்த ரூ.22,50,000 என்ற அளவில் இருக்கும். பிபிஎஃப் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டால், முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.57,32,586 என்ற அளவிலும், மதிப்பிடப்பட்ட வருமானம் ரூ. 23,45,304 என்ற அளவிலும், முதலீட்டின் மொத்த மதிப்பு ரூ. 80,77,890 என்ற அளவிலும் இருக்கும்.
PPF திட்டத்தை மாதாந்திர ஓய்வூதியமாக மாற்றுதல்
PPF திட்டத்தில் திரட்டப்பட்ட கார்பஸை PPF திட்டத்தில் தொடர முடிவு செய்தால், 25 ஆண்டுகளுக்குப் பிறகு கார்ப்பஸ் ரூ. 80,77,890 என்ற அளவில் இருக்கும். இதற்கான ஆண்டு வட்டி (7.1%) ரூ. 5,73,530 ஆக இருக்கும். இதனை மாதம் ரூ. 47,794 என்ற அளவில் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் உங்களுக்கு தோராயமாக ரூ. 48,000 மாத வருமானம் கிடைக்கும்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் மத்திய அரசின் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் மைனர் குழந்தையின் பெயரிலும் நீங்கள் PPF இல் முதலீடு செய்யலாம். ஆனால் ஒருவர் தனது பெயரில் ஒரே ஒரு பிபிஎஃப் கணக்கு மட்டுமே வைத்திருக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஒரு வருடத்தில் முதலீடு செய்யக்கூடிய குறைந்த பட்ச மற்றும் அதிகபட்ச தொகை
தற்போது, பொது வருங்கால வைப்பு நிதிக்கு (பிபிஎஃப்) 7.1 சதவீதம் ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. நாட்டில் உள்ள எந்த வங்கி அல்லது தபால் அலுவலகத்திற்கும் சென்று உங்கள் PPF கணக்கை (பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு) திறக்கலாம். இந்த அரசு திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம் இந்தத் திட்டத்தில் உங்கள் வசதிக்கேற்ப மொத்தமாகவோ அல்லது தவணை முறையிலோ முதலீடு செய்யலாம்.
PPF திட்டத்தில் கிடைக்கும் EEE நன்மை
PPF திட்டம் EEE (விலக்கு-விலக்கு-விலக்கு) பிரிவின் கீழ் வருகிறது. அதாவது, பிபிஎஃப்-ல் செய்யப்படும் முதலீடு, அதற்குக் கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகை ஆகியவற்றுக்கு வரிச் சலுகை கிடைக்கும்.
மேலும் படிக்க | UPS vs NPS vs OPS: எந்த ஓய்வூதிய திட்டத்தில் ஊழியர்களுக்கு அதிக லாபம்? ஒப்பீடு இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ