Jio வாடிக்கையாளர்கள் FIFA World Cup-ஐ இலவசமாகப் பார்க்கலாம்!

ஜியோ வாடிக்கையாளர்கள் பிஃபா கால்பந்து உலக கோப்பையை இலவசமாக பார்க்கலாம். எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம். 

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 10, 2022, 06:20 PM IST
Jio வாடிக்கையாளர்கள் FIFA World Cup-ஐ இலவசமாகப் பார்க்கலாம்! title=

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் FIFA World Cup Quatar 2022 நிகழ்வை இலவசமாக லைவ் பார்க்கும் வாய்ப்பை ஜியோ வழங்க இருக்கிறது. இந்த FIFA World Cup Quatar 2022 புட்பால் போட்டி வரும் நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18, 2022 வரை நடைபெறுகிறது. இந்த பிரமாண்டமான கால்பந்து போட்டியை ஜியோ வாடிக்கையாளர்கள் இலவசமாக பார்க்கலாம். 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் Viacom18 Sports, FIFA உலகக் கோப்பை கத்தார் 2022 நிகழ்வை அறிமுகம் செய்ய உள்ளது. "Isse Bada Kuch Nahi" என்ற பிரச்சாரத்தின் பெயரில் இந்த நிகழ்வு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் ஜியோ வாடிக்கையாளர்கள் அனைவரும் FIFA World Cup Quatar போட்டியை நேரலையில் காணும் சூப்பரான வாய்ப்பு உருவாகியுள்ளது. Jio Cinema அனைத்து சந்தாதாரர்களும் எதிர்வரும் FIFA World Cup Quatar லைவ் செய்ய உள்ளது. 

மேலும் படிக்க | வேறு வழியே இல்லை... நாள் ஒன்றுக்கு $4 மில்லியன் இழப்பு: பணி நீக்கம் குறித்து எலான் மஸ்க்!

நீங்கள் ஜியோ வாடிக்கையாளராக இருந்தால் உங்கள் ஸ்மாரட்போனில் JioCinema செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள். அதன் மூலம் நீங்கள் லைவ் ஸ்ட்ரீம் காணலாம். இதற்கு எந்த கட்டணமும் இல்லை. மேலும், இந்த உலக கோப்பையை தமிழ், பெங்காலி மற்றும் மலையாளம் உட்பட பல மொழிகளில் பார்க்க JioCinema செயலி ஏற்பாடு செய்துள்ளது. நீங்கள் FIFA World Cup ரசிகர் என்றால், இந்த வாய்ப்பை மிஸ் செய்துவிட வேண்டாம். 

மேலும் படிக்க | எலான் மஸ்கின் வலது கரமாக செயல்படும் 'ஸ்ரீராம் கிருஷ்ணன்'... யார் இவர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News